இப்படி ஒரு அப்டேட் வராதானு தான் வெயிட் பண்ணோம்.. உடனே YouTube போங்க.. ட்ரை பண்ணுங்க!

|

உலகம் முழுவதும் யூடியூப் தளத்தை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் வருமானம் வரும் என்பதால் தினசரி அதிக வீடியோக்களை பதிவிடுகின்றனர் மக்கள். அதேபோல் யூடியூப் தளத்தில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது
என்றுதான் கூறவேண்டும்.

 யூடியூப் அப்டேட்

யூடியூப் அப்டேட்

அதன்படி தற்போது கூட யூடியூப் தளத்தில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளன. அதாவது யூடியூப் செயலியில் புதிய டிசைன், அம்சங்கள், சேர்க்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக இப்போது வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

புதிய பட்டன்கள்

புதிய பட்டன்கள்

குறிப்பாக யூடியூப் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் தகவலின்படி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலியில் புதிய தோற்றம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பின்ச்-டு-ஜூம், பிரிசைஸ் சீக்கிங், ஆம்பியண்ட் மோட், டார்க் மோட் மற்றும் பல புதிய பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

பின்ச்-டு-ஜூம்

பின்ச்-டு-ஜூம்

இப்போது வழங்கப்பட்ட யூடியூப் பின்ச்-டு-ஜூம் என்ற அம்சத்தைக் கொண்டு வீடியோவை அருமையாக ஜூம் செய்து பார்க்க முடியும். மேலும் இந்த அம்சம் முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. தற்போது இந்த அம்சம் அனைவருக்கும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

பிரிசைஸ் சீக்கிங்

பிரிசைஸ் சீக்கிங்

அதேபோல் தற்போது வழங்கப்பட்ட பிரிசைஸ் சீக்கிங் அம்சம் ஆனது வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை எளிதில் கண்டறிய முடியும். மேலும் இந்த அம்சம் ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்களில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக சீக் பார் அல்லது வீடியோ தம்ப்நெயில் மூலம் வீடியோவின் குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக செல்ல முடியும்.

8720 எம்ஏஎச் பேட்டரி, சியோமி பென், கீபோர்ட் ஆதரவோடு இந்தியாவில் அறிமுகம்: சியோமி பேட் 5 விலை இதுதான்!8720 எம்ஏஎச் பேட்டரி, சியோமி பென், கீபோர்ட் ஆதரவோடு இந்தியாவில் அறிமுகம்: சியோமி பேட் 5 விலை இதுதான்!

ஆம்பியண்ட் மோட்

ஆம்பியண்ட் மோட்

அடுத்து யூடியூப் தளத்தில் வெளிவந்துள்ள ஆம்பியண்ட் மோட் அம்சம் ஆனது குறிப்பிட்ட வீடியோவில் உள்ள நிறத்தை அப்படியே ஆப் பேக்கிரவுண்டில் செயல்படுத்தி விடும். மேலும் ஏற்கனவே இருந்த டார்க் மோட் அம்சம் இப்போது அதிக இருளாக மாறி இருக்கிறது. குறிப்பாக இந்த அம்சம் டிவி,மொபைல், வெப் போன்றவற்றில் செயல்படுத்தப்பட்டுள்ளது. AMOLED டிஸ்ப்ளே வைத்திருக்கும் பயனர்களுக்கு இந்த அம்சம் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும்.

யூடியூப்

அதேபோல் யூடியூப் தனது வருவாயை அதிகரிக்க பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பு ஏதாவது ஒரு வீடியோக்களில் விளம்பரங்கள் வந்த நிலையில், தற்போது அனைத்து வீடியோக்களிலும் 2 முதல் 6 விளம்பரங்கள் வரை ஒளிபரப்பாகி வருகின்றன.

அதிருதுல.,சும்மா வீடே தியேட்டர்தான்: ரூ.15,499 முதல் சியோமி ஸ்மார்ட்டிவி அறிமுகம்:ஓஎல்இடி விஷன் பார்வை அனுபவம்அதிருதுல.,சும்மா வீடே தியேட்டர்தான்: ரூ.15,499 முதல் சியோமி ஸ்மார்ட்டிவி அறிமுகம்:ஓஎல்இடி விஷன் பார்வை அனுபவம்

யூடியூப் பிரீமியம்

யூடியூப் பிரீமியம்

ஆனால் விளம்பரங்களின் தொல்லை இன்றி யூடியூப் வீடியோக்களை பார்க்க விரும்பும் பயனர்களுக்கு வேண்டி யூடியூப் பிரீமியம் சந்தாவைக் கொண்டு வந்தது. குறிப்பிட்ட தொகையை செலுத்துவதன் மூலம் விளம்பரம் இல்லாத வீடியோக்கள், ஆஃப்லைனில் வீடியோக்களை டவுன்லோடு செய்து பார்ப்பது போன்ற வசதிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Now you can zoom in YouTube videos and Change the background color: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X