WhatsApp-க்கு வந்த தரமான Update: இனிமேல் "எல்லாத்தையுமே" மறைக்கலாம்! அதெப்படி?
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பாரம் ஆன வாட்ஸ்அப் (WhatsApp) கடந்த சில தினங்களாகவே மிகவும் பரபரப்பான அம்சங்களை அறிவித்த வண்ணம் மற்றும் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.
அதில் சில அம்சங்கள் பீட்டா வெர்ஷன்களில், டெஸ்டிங் நோக்கத்தின் கீழ் வெளியாகி உள்ளன. சில அம்சங்கள் விரைவில் வரும் என்று கூறப்படுகின்றன, சில அம்சங்கள் அறிமுகமாகி விட்டன.

இப்படியாக.. கடந்த சில நாட்களாக தீயாக வேலை செய்யும் வாட்ஸ்அப்!
முன்னதாக, ஐஓஎஸ் வெர்ஷனுக்கு வந்து ஒரு வருடம் கழித்து, வாட்ஸ்அப் டேட்டாக்களை டிரான்ஸ்பர் செய்யும் அம்சம் ஆனது ஆண்ட் ராய்டு வெர்ஷனுக்கு வந்தது.
அதற்கு முன்னதாக, ஏற்கனவே ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டாவில் அணுக கிடைக்கும் ஆட்டோமேட்டிக் ஆல்பம்ஸ், விண்டோஸ் பீட்டா வெர்ஷனில் வெளியானது.
மிகவும் சமீபத்தில் வாட்ஸ்அப் க்ரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 'க்ரூப் மெம்பர்ஷிப் அப்ரூவல்' என்கிற அம்சம் விரைவில் வெளியாகும் என்கிற தகவலும் கிடைத்தது.
இப்படியாக வாட்ஸ்அப் நிறுவனம் மிகவும் பரபரப்பான அம்சங்களை வெளியிட்டு கொண்டிருக்கும் நிலைப்பாட்டில், மிகவும் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு ப்ரைவஸி அம்சம் சைலன்ட் ஆக அறிமுகமாகி உள்ளது.

அதென்ன அம்சம்?
வாட்ஸ்அப் யூசர்கள் தங்கள் ப்ரைவஸியை மேலதிக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பிட்ட அம்சமானது, உங்களின் வாட்ஸ்அப் ப்ரொபைல் பிக்சர், ஸ்டேட்டஸ் அப்டேட் மற்றும் வேறு சில தகவல்களை (நீங்கள் தேர்வு செய்ய விரும்பும்) குறிப்பிட்ட சிலரிடம் இருந்து மறைக்க உதவும்.
இந்த லேட்டஸ்ட் அப்டேட் ஆனது, "இதை" அனைவரும் பார்க்கக்கூடாது என்று நீங்கள் விரும்பும் ஒரு "தகவலை" யார் எல்லாம் பார்க்க கூடாது என்கிற கட்டுப்பாட்டை விதிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கும்.

இனிமேல் "மை காண்டாக்ட்ஸ் எக்ஸெப்ட்..." என்கிற புதிய ஆப்ஷன் அணுக கிடைக்கும்!
முன்னதாக (அதாவது இந்த அம்சம் வருவதற்கு முன்னதாக) உங்கள் ப்ரொபைல் பிக்சர், லாஸ்ட் சீன் விவரங்கள் மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்டை, அனைவரும் பார்க்கலாம் (everyone), காண்டாட்ஸ்-இல் இருக்கும் அனைவரும் பார்க்கலாம் (all your contacts) அல்லது யாருமே பார்க்க கூடாது (nobody) என்கிற விருப்பங்கள் மட்டுமே அணுக கிடைத்தது அல்லவா?
ஆனால் இனிமேல் உங்கள் ப்ரொபைல் பிக்சர், லாஸ்ட் சீன் விவரங்கள் மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்-ஐ இவர்களை தவிர்த்து மற்றவர்கள் பார்க்கலாம் என்கிற மை காண்டாக்ட்ஸ் எக்ஸெப்ட் ... (My contacts except...) என்கிற புதிய ஆப்ஷனும் அணுக கிடைக்கும்.

ஆக இனிமேல் உங்களுக்கு 3 அல்ல.. 4 ஆப்ஷன்கள் இருக்கும்!
"மை காண்டாக்ட்ஸ் எக்ஸெப்ட்..." என்கிற புதிய விருப்பத்துடன், வாட்ஸ்அப் இப்போது மொத்தம் நான்கு ப்ரைவஸி கண்ட்ரோல் செட்டிங்ஸ்-ஐ உங்களுக்கு வழங்குகிறது. அதாவது:
01. எவ்ரிஒன் (Everyone): உங்கள் லாஸ்ட் சீன், ப்ரொபைல் பிக்சர், அபௌட் அல்லது ஸ்டேட்டஸ் போன்ற விவரங்கள் அனைத்து வாட்ஸ்அப் யூசர்களுக்கும் அணுக கிடைக்கும்.
02. மை காண்டாக்ட்ஸ் (My Contacts) :உங்கள் லாஸ்ட் சீன், ப்ரொபைல் பிக்சர், அபௌட் அல்லது ஸ்டேட்டஸ் போன்ற விவரங்கள் உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்ஸ்-இல் உள்ள அனைவருக்கும் அணுக கிடைக்கும்.
03. மை காண்டாக்ட்ஸ் எக்ஸெப்ட்... (My Contacts Except...): நீங்கள் தேர்வு செய்த சில நபர்களை தவிர்த்து உங்கள் லாஸ்ட் சீன், ப்ரொபைல் பிக்சர், அபௌட் அல்லது ஸ்டேட்டஸ் போன்ற விவரங்கள் உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்ஸ்-இல் உள்ள அனைவருக்கும் அணுக கிடைக்கும்.
04. நோபடி (Nobody): உங்கள் லாஸ்ட் சீன், ப்ரொபைல் பிக்சர், அபௌட் அல்லது ஸ்டேட்டஸ் போன்ற விவரங்கள் யாருக்குமே அணுக கிடைக்காது

இதனால் என்ன பயன்?
இந்த புதிய விருப்பத்தின் மூலம், நீங்கள் ஒரு நபரின் காண்டாக்ட் நம்பரை உங்கள் வாட்ஸ்அப்பில் - விருப்பம் இல்லாமல் அல்லது தாற்காலிகமாக - சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குறிப்பிட்ட நபரிடம் இருந்து உங்களின் வாட்ஸ்அப் ப்ரொபைல், லாஸ்ட் சீன் விவரங்கள் மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட் போன்ற தகவல்களை நீங்கள் எளிமையாக மறைக்கலாம்.
அதாவது ஒருவரிடம் இருந்து மெசேஜ்கள் வந்தால் மட்டும் போதும், அவர் உங்களின் புகைப்படங்கள் மற்றும் இதர விவரங்களை அணுக வேண்டிய / பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள் நினைத்தால், இந்த அம்சம் நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும்.
இந்த அம்சத்தை போலவே தான் 'க்ரூப் மெம்பர்ஷிப் அப்ரூவல்' என்கிற அம்சமும், ஆனால் இது முழுக்க முழுக்க வாட்ஸ்அப் க்ரூப் அட்மின்களுக்கானது. அந்த அம்சம் எப்படி செயல்படும்? இதனால் என்ன பயன்? இது எப்போது அனைவருக்கும் அணுக கிடைக்கும்? போன்ற விவரங்கள் இதோ:


Click it and Unblock the Notifications