இனி ஒரு நிமிஷம் போதும். முழுசா சார்ஜ் பண்ணிடலாம்.!

ஆம்.! இனி உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, இந்த சிறிய சாதனம் ஒரு சில வினாடிகளில் உங்கள் மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்துவிடும்.

|

ஸ்மார்ட்போன்கள், நம் வாழ்க்கையை எளிதாக்கும் அதே சமயம் நமக்கு மிகவும் பிடித்தமான ,நம் வாழ்வின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும். எனினும், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மொபைல் போன் மீது இருக்கும் ஒரு மிகவும் பொதுவான மற்றும் எரிச்சலூட்டும் நிகழ்வு எதுவென்றால் அது - "குறைந்த பேட்டரி எச்சரிக்கை" என்பது தான்.

அதிக இணைய பயன்பாடு அல்லது பல தொலைபேசி அழைப்புகள் போன்றவைகளால் ஏற்படும் லோ பேட்டரி ஆனது அவசர நேரத்தில் நிச்சயமாக நமக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதுபோன்ற சிக்கலை நம்மில் பெரும்பாலானோர்கள் அனுபவித்திருப்போம். அப்படியான நமக்கெல்லாம், இனி சார்ஜ் செய்ய அதிக நேரம் தேவையில்லை, சில நொடிகள் மட்டுமே போதும் என்பது நிச்சயமாக ஒரு ஹேப்பி ஹேப்பி செய்தியாகத்தான் இருக்கும்.

நெகிழ்வான சூப்பர்கெப்பாசிட்டர்

நெகிழ்வான சூப்பர்கெப்பாசிட்டர்

சென்ட்ரல் புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின்படி சாதாரண மொபைல் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில் அதிக ஆற்றல் சேமிப்பு திறன் கொண்ட நெகிழ்வான சூப்பர்கெப்பாசிட்டர்களை உருவாக்க முடியும் என்ற ஒரு செயல்முறை சமீபத்தில் நிகழ்த்தப்பட்டது.

ஒரு சில நொடிகளில்

ஒரு சில நொடிகளில்

ஆராய்ச்சியாளர்களின்படி இவைகளை கொண்டு மொபைல் பேட்டரிகளை 'ரீப்ளேஸ்' (மாற்று) செய்யலாம். இந்த சூப்பர்கெப்பாசிட்டர்கள் ஆனது பயனர் ஒரு நீண்ட வாரம் தங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்யாமலேயே பயன்படுத்த வைக்கும் அத்துடன் ஒரு சில நொடிகளில் தங்கள் தொலைபேசிகளை சார்ஜ் செய்ய வைக்கும் என்று கூறியுள்ளனர். அத்துடன் இந்த சார்ஜர்கள் கொண்டு மற்ற மின்னணு கருவிகளையும் சார்ஜ் செய்ய முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சக்தி

சக்தி

இந்த சாதனத்தை ஒரு லித்தியம் அயன் பேட்டரியுடன் ஒப்பிடுகையில் இது சிறியது, இலகுவானது மற்றும் அதிக நெகிழ்வுவானதாக இருக்கும் என்பது ஒருபக்கமிருக்க இது அதிக அளவிலான சக்தியை சேமிக்க மற்றும் அதிக நிறைய சேமிப்பு திறன் கொண்டதாகும்.

மேம்படுத்தும் திறன்

மேம்படுத்தும் திறன்

மின்னணு கருவிகளை வேகமாக சார்ஜ் செய்வது ஒருபக்கமிருக்க இந்த சூப்பர்கெப்பாசிட்டர்களில் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது உங்கள் மின்னணு சாதனத்தின் தரத்தை மேம்படுத்தும் திறனும் கட்டப்பட்டுள்ளன.

30,000க்கும் மேற்பட்ட முறை

30,000க்கும் மேற்பட்ட முறை

லித்தியம் அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடும் போது பொதுவாக 1,500 முறை குறைவாக சார்ஜ் செய்தால் போதும் மற்றும் இந்த புதிய சூப்பர் மின்தேக்கிகளை 30,000க்கும் மேற்பட்ட முறை டிகிரேட் ஆகாமல் ரீசார்ஜ் செய்ய முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வேகவைத்தாலும் வேலை செய்யும் ஐபோன் : வைரலாகும் வீடியோ??

Best Mobiles in India

English summary
Now You Can Charge Your Smartphone, Laptop, and Other Gadgets in Just Seconds. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X