Home
News

ரூ.1,999 இருந்தால் போதும் JioPhone Next போன் வாங்கலாம்.. இந்தியாவின் மலிவு விலை ஆண்ட்ராய்டு 4ஜி போன் இது தான்.

ஜியோபோன் நெக்ஸ்ட் என்பது ரிலையன்ஸ் ஜியோவால் நவம்பர் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இதன் விலை ரூ. 5,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது; இருப்பினும், அது நடக்காதது சந்தைக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்த சாதனம் இந்தியச் சந்தையில் ரூ. 6,499 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தை வாங்க விரும்புவோர்கள் ஆரம்ப விலையாக வெறும் ரூ. 1,999 மட்டும் செலுத்தி சாதனத்தை வாங்கலாம். எஞ்சி உள்ள பணத்தை நீங்கள் மாதாந்திர தவணையாகச் செலுத்தலாம். இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

ரூ.1,999 இருந்தால் போதுமா? ஜியோ போன் வாங்கலாமா?

ரூ.1,999 இருந்தால் போதுமா? ஜியோ போன் வாங்கலாமா?

ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்க விரும்பும் பயனர்கள் போனுக்கான மொத்த தொகையையும் முழுமையாக ஒரே கட்டணமாகச் செலுத்தி புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி சாதனத்தை வாங்கலாம் அல்லது நிறுவனத்தின் தனித்துவமான EMI (சமமான மாதாந்திர தவணைகள்) திட்டத்தின் மூலமும் ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தை வாங்கலாம். நிறுவனத்தின் EMI திட்டத்திற்கு நீங்கள் செல்ல விரும்பினால், JioPhone Next ஸ்மார்ட் போனை ரூ.1,999 மட்டும் செலுத்தி வாங்கலாம்.

JioPhone Next ஸ்மார்ட்போனை வாங்கு எளிமையான 4 EMI திட்டங்கள்

JioPhone Next ஸ்மார்ட்போனை வாங்கு எளிமையான 4 EMI திட்டங்கள்

JioPhone Next ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நான்கு EMI திட்டங்களை வழங்குகிறது. நான்கு திட்டங்களும் 24 மாதங்கள் மற்றும் 18 மாத பேஅவுட் முறையைக் கொண்டுள்ளன. 24 மாதங்களுக்கு மாதத்திற்கு ரூ. 300 மற்றும் 18 மாதங்களுக்கு மாதம் ரூ. 350 செலுத்தும் 'Always-on' திட்டமே மிகவும் மலிவான திட்டமாக ஜியோவின் பட்டியலில் காட்சியளிக்கிறது. இத்துடன், ஜியோ அதன் பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட அழைப்பு நன்மைகளை ஒவ்வொரு மாதமும் வழங்குகிறது.

JioPhone நெக்ஸ்ட் வாங்க ஆர்வமுள்ளதா?

JioPhone நெக்ஸ்ட் வாங்க ஆர்வமுள்ளதா?

JioPhone நெக்ஸ்ட் வாங்க ஆர்வமுள்ளவர்கள், JioMart டிஜிட்டல் சில்லறை விற்பனையாளரான ஜியோவின் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது WhatsApp மூலம் 7018270182 என்ற எண்ணுக்கு 'Hi' என்ற மெசேஜ்ஜை அனுப்பலாம். ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்திற்காக ஜியோ வழங்கும் நான்கு EMI திட்டங்களைப் பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம். ஜியோ நிறுவனம் ஆல்வேஸ் ஆன் திட்டம், லார்ஜ் திட்டம், XL திட்டம் மற்றும் XXL திட்டம் என்ற நான்கு திட்டங்களை வழங்குகிறது. முதலில் ஆல்வேஸ் ஆன் திட்டத்தின் நாம் முன்பே பார்த்துவிட்டதால் அடுத்த திட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஜியோ வழங்கும் லார்ஜ் திட்டம் மற்றும் XL திட்டத்தின் நன்மைகள் என்ன?

ஜியோ வழங்கும் லார்ஜ் திட்டம் மற்றும் XL திட்டத்தின் நன்மைகள் என்ன?

அடுத்தபடியாக ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்கக் கிடைக்கும் லார்ஜ் திட்டத்தின் கீழ் ரூ. 400 கட்டணத்துடன் 24 மாத திட்டத்தையும், ரூ. 500 செலவில் 18 மாத திட்டத்தையும் நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் அதன் பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி டேட்டா நன்மையோடு அன்லிமிடெட் அழைப்பு நன்மையை நிறுவனம் வழங்குகிறது. இதேபோல், XL திட்டம் திட்டத்தின் கீழ் ரூ. 500 கட்டணத்துடன் 24 மாத திட்டமும், ரூ. 550 விலையில் 18 மாத திட்டத்தையும் நிறுவனம் வழங்குகிறது.

XXL திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன-என்ன?

XXL திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன-என்ன?

இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மை கிடைக்கிறது. இறுதியாக XXL திட்டத்தின் கீழ் ரூ. 550 கட்டணத்தில் 24 மாத திட்டமும், ரூ. 600 விலையில் 18 மாத கால திட்டமும் கிடைக்கிறது. இந்த 2 திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்குத் தினமும் 2.5 ஜிபி டேட்டா நன்மையையும், அன்லிமிடெட் அழைப்பு நன்மையையும் கிடைக்கிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை டெல்கோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலையில் கிடைக்கும் முதல் 4ஜி ஸ்மார்ட்போன்

மலிவு விலையில் கிடைக்கும் முதல் 4ஜி ஸ்மார்ட்போன்

மலிவு விலையில் கிடைக்கும் 4ஜி ஸ்மார்ட்போனில் பிரகதி ஓஎஸ் இயங்குகிறது. இது ஜியோஃபோன் நெக்ஸ்ட்க்காக உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பதிப்பாகும். கூகுள் அம்சங்களான Read Aloud மற்றும் Translate Now போன்ற அம்சங்களும் பிரகதி OS இல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் ஜியோ மற்றும் கூகுளின் பயன்பாடுகளுடன் வருகிறது. இது HDR பயன்முறையுடன் குறைந்த ஒளி புகைப்படம் எடுப்பதற்கான மேம்படுத்தல்கள் மற்றும் தொலைப்பேசியின் கேமராவில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா குறிப்பிட்ட Snapchat லென்ஸ்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

ஜியோபோன் நெக்ஸ்டின் அம்சங்கள் எல்லாம் வேற லெவல்

ஜியோபோன் நெக்ஸ்டின் அம்சங்கள் எல்லாம் வேற லெவல்

இந்த புதிய ஸ்மார்ட் போனின் அம்சத்தைப் பற்றிப் பார்க்கையில், இணையப் பக்கங்கள், ஆப்ஸ், மெசேஜ் மற்றும் புகைப்படங்களுடன் கூடுதலாக ஃபோன் திரையில் உள்ள எந்த உரையிலும் வேலை செய்யும். ஜியோபோன் நெக்ஸ்ட் பயனர்கள், ஜியோசாவ்னில் இசையை இயக்குவது அல்லது மை ஜியோவில் உங்கள் இருப்பைச் சரிபார்ப்பது போன்ற ஜியோ தொடர்பான கேள்விகளுக்குக் கூகுள் அசிஸ்டண்ட்டைப் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போன் வழக்கமான பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு வெளியீடுகளைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் விவரக்குறிப்புகள்

ஜியோபோன் நெக்ஸ்ட் விவரக்குறிப்புகள்

ஜியோபோன் நெக்ஸ்ட் விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, JioPhone Next ஆனது 5.45' இன்ச் HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட் மூலம் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் இது கொண்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் மலிவு விலையில் ஒரு வரப்பிரசாதமா?

ஜியோபோன் நெக்ஸ்ட் மலிவு விலையில் ஒரு வரப்பிரசாதமா?

JioPhone Next ஆனது 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இது 3,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது டூயல் சிம் வசதியைக் கொண்டுள்ளது. இது ப்ளூடூத், 3.5 ஆடியோ ஜாக் போன்ற எண்ணற்ற முக்கிய அம்சங்களுடன் வெளிவருகிறது. மலிவு விலையில் 4ஜி இணைப்புடன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு ஜியோபோன் நெக்ஸ்ட் ஒரு வரப்பிரசாதம்.

Best Mobiles in India

English summary
Now You Can Buy JioPhone Next At Just Rs 1999 With Affordable EMI Plans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X