பேடிஎம் செயலி-ல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இந்த சலுகை கிடைக்கும்.!
இந்நிலையில் மற்றுமொரு வணிக செயலியான பேடிஎம் தனது போட்டியாளர்களை சமாளிக்க பரிவர்தணை கட்டணமற்ற பயணசீட்டு முன்பதிவு அம்சத்தினை அறிமுகம் செய்துள்ளது.
தற்சமயம் ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் பேடிஎம்-ல் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் கூடுதலாக பரிவர்தணை கட்டணம் செலுத்த தேவையில்லை என பேடிஎம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அனைவரும் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர், மேலும் கடந்த சில ஆண்டுகளால ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்வது என்பது எளிதாக காரியமாக மாறி வருகின்றது.
இதற்கு தகுந்தபடி இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி செயலி, வலைதளம் மிக முக்கியமான காரணியாக மாறியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

ஐஆர்சிடிசி செயலி
தற்சமயம் ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது பயணச்சீட்டினை இந்த ஐஆர்சிடிசி செயலி மூலம் அல்லது,மூன்றாம்
பங்குதாரார் செயலிகள் மூலம் பெற்று வருகின்றனர். இந்த பயணசீட்டினை ஐஆர்சிடிசி-ல் பதிவு செய்து பெறும் வாடிக்கையாளர்களிடம் பெரும்பாலும் கூடுதல் பரிவர்தணை கட்டணங்கள் வசூளிக்கப்படுவதில்லை.

மூன்றாம் பங்குதாரார்
இருந்தபோதிலும் அதே பயணிகள் மூன்றாம் பங்குதாரார் வலைதளம், செயலிகள் மூலம் பதிவு செய்தால் கூடுதலாக ரூ.10 அல்லது அதற்குமேற்பட்ட ரூபாயினை பரிவர்தணை கட்டணமாக செலுத்த வேண்டும்.

பேடிஎம்
சமீபத்தில் இந்த அம்சத்தினை பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்-ன் வணிக செயலி PhonePe தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது. இந்நிலையில் மற்றுமொரு வணிக செயலியான பேடிஎம் தனது போட்டியாளர்களை சமாளிக்க பரிவர்தணை கட்டணமற்ற பயணசீட்டு முன்பதிவு அம்சத்தினை அறிமுகம் செய்துள்ளது.

முன்பதிவு
அதன்படி இப்போது பேடிஎம் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், அதற்கான கட்டணத்தினைcredit/debit cards, UPI, மற்றும் Paytm வேலட் மூலம் செலுத்தினால்
பயணச்சீட்டிற்கான பரிவர்தணை கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிசேக் ராஜன்
மேலும் பேடிம் துணைத்தலைவர் அபிசேக் ராஜன் தெரிவித்தது என்னவென்றால் கடந்த அக்டோபர் 2018 வரை நாங்கள் பரிவர்தணை கட்டணம் வசூளித்தோம். இந்த கட்டணமாணது மொத்த பரிவர்தணையில்1.8% வரையில் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த பரிவர்தணை கட்டண வழக்கத்தினை Paytm கைவிட்டுள்ளது என்று கூறினார்..


Click it and Unblock the Notifications