இனி பேஸ்புக்லயே வேலைக்கு 'அப்ளை' பண்ணலாம்.!

இனி பயனாளர்கள் தனது வலைத்தளத்தின் வழியே வேலைவாய்ப்புக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வசதியினை அறிமுகப்படுத்துகிறது பேஸ்புக்.

By Ilamparidi
|

முகநூல் நிறுவனம் தனது வலைத்தளத்தின் வழியாக உலகினையே ஒருங்கிணைக்கிறது என்ற அது மிகையில்லை.
இன்றைய நவீன காலத்தில் உலகின் எங்கோ நிகழ்கிற நிகழ்வுகளினைக் கூட ஒரு நொடியில் அறிந்துகொள்ள இயலும் சமூகவலைத்தளங்களில் முதன்மையானது ஆகும்.

அத்தகைய முகநூல் நிறுவனம் தனது பயனாளர்களுக்காக பல புதிய அம்சங்களை தனது வலைத்தளத்தில் மேற்கொண்டு வருகிறது.அதுகுறித்த தகவல்கள் கீழே.

பேஸ்புக்:

பேஸ்புக்:

பேஸ்புக் இப்போதைய சூழலில் உலகின் பெரும்பாலான பயனாளர்களால் பயன்படுத்தப்படக்கூடிய ஓர் முன்னணி சமூக வலைத்தளமாகும்.உலகின் தொலைவில் உள்ளோரையும் எளிது தொடர்புக்கொள்ளக்கூடிய வகையிலும்,செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதர்க்கும் உதவுகிறது அதுமட்டுமின்றி நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் இது வழிவகுக்கிறது.

புதுப்பித்தல்:

புதுப்பித்தல்:

இதனை உலகின் அதிகப்படியான பயனாளர்கள் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்காக இது புதுபுதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது ஆகும்.சிறிது காலத்திற்கு முன் தான் இது வீடியோ கால் உள்ளிட்ட சேவைகளை அறிமுகப்படுத்தியதென்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்:

இனி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்:

தனது பயனாளர்களுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிற முகநூல் நிறுவனம் அந்த வரிசையில் இப்போது தனது வலைத்தளத்தின் வழியே வேலைக்கும் விண்ணப்பிக்கிற வசதிகளையும் ஏற்படுத்தித் தரப்போகிறது.
ஏற்கனவே,வேலை தேடுவோரும் வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்களும் தங்களுக்குள் ஓர் இணைப்புக்கருவியாக பேஸ்புக்கினை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது அந்த வாய்ப்பினை முழுமைப்படுத்தி வழங்குகிறது முகநூல்.

அப்ளை செய்ய:

அப்ளை செய்ய:

வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள் தங்களுக்கென்ற பக்கத்தில் தகவல்களை அளிப்பதன் மூலம் பயனாளர்கள் அப்ளை என்கிற ஆப்ஷன் வழியே விண்ணப்பிக்கலாம்.அளித்த தகவல்களில் ஏதேனும் பிழை இருந்தால் அத்தனையும் எடிட் செய்ய இயலும்.மேலும் வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் நியூஸ் பீட் பகுதியில் இடம்பெறும்.

லிங்க்டுஇன்:

லிங்க்டுஇன்:

லிங்க்டு இன் இணையதளம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்களை அளித்து நிறுவனங்களையும் வேலைதேடுவோரையும் இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது முகநூல் இந்த வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் லிங்க்டுஇன் இணையதளத்திற்கு சரியான போட்டியாகவும் தந்து பயனாளர்களுக்கு பயனுள்ள ஒன்றாகவும் இருக்ககூடும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

கூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி, சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன.?

Best Mobiles in India

Read more about:
English summary
Now, You Can Apply for Jobs Directly on Facebook.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X