ஆண்ட்ராய்டு டிவி இருக்கா? அரட்டை செயலியில் சத்தமின்றி புதிய வசதி அறிமுகம்.. இதோ முழு விவரம்..
புத்தாண்டு முன்னிட்டு Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அரட்டை (Arattai) செயலியின் ஒரு முக்கிய அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. தற்போது அரட்டை செயலி தற்போது ஆண்ட்ராய்டு டிவிகளில் (Android TV) பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு டிவி வைத்திருக்கும் பயனர்கள், இப்போது சாட் மற்றும் குரூப் சாட் போன்றவற்றை டிவியில் அணுக முடியும். ஆண்ட்ராய்டு 7 அதற்குப் பிந்தைய பதிப்பு கொண்ட ஸ்மார்ட் டிவிகளில் இந்த அரட்டை செயலியை பயன்படுத்த முடியும். குறிப்பாக ஸ்மார்ட் டிவியில் அரட்டை பயன்படுத்துவது ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

ஸ்மார்ட் டிவியில் அரட்டை செயலியில் குரூப் சாட், டெக்ஸ்ட், வாய்ஸ் நோட்ஸ், மீடியா ஷேரிங் போன்ற அம்சங்களைப் பயன்படுத்த முடியும். இதுதவிர டிவியில் வீடியோ அழைப்பு மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். பொதுவாக ஸ்மார்ட் டிவிகளில் பில்ட்-இன் கேமரா ஆதரவு இல்லாததால், வீடியோ அழைப்புகளை அனுபவிக்க பயனர்கள் தங்களின் டிவியின் USB போர்ட் மூலம் ஒரு வீடியோ கேமரா அல்லது மைக்ரோஃபோனை இணைக்க Arattai செயலி அனுமதிக்கிறது.
ஸ்மார்ட் டிவியில் அரட்டை செயலியை இன்ஸ்டால் செய்வது எப்படி?
உங்கள் ஸ்மார்ட் டிவியில் அரட்டை செயலியை பயன்படுத்த முதலில், கூகுள் பிளே ஸ்டோரை திறக்கவும். அடுத்து சர்ச் ஐகானை தேடி அரட்டை செயலி என டைப் செய்யவும். அடுத்தும் அரட்டை செயலி கிடைத்தவுடன் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
அடுத்து டிவியில் அரட்டை செயலியை திறக்கவும், உள்நுழைய உள்ள மொபைல் என்ணை கேட்பதற்குப் பதிலாக, திரையில் ஒரு QR குறியீடு தெரியும். அதன்பின்பு உங்கள் போனில் அரட்டை செயலிக்கு சென்று Settings > Devices பகுதிக்கு சென்று QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். ஸ்கேன் முடிந்ததும், உங்கள் போனில் உள்ள கணக்குடன் சின்க் செய்யப்பட வேண்டும்.
உள்நுழைவதற்கு முன், விவரங்களைப் பரிசீலித்து தொடர அனுமதியை உறுதிப்படுத்துவதற்கான ஒப்புதல் திரை உங்களுக்குக் காண்பிக்கப்படும். அதன்பின்பு போனில் பயன்படுத்துவது போன்று டிவியிலும் அரட்டை செயலியைப் பயன்படுத்த முடியும்.
புதிய வசதி
அதேபோல் சமீபத்தில் குழு உரையாடல்களை (Group Chats) மேலும் எளிமையாக்கும் நோக்கில் 'போல்ஸ்' (Polls) எனப்படும் வாக்கெடுப்பு வசதியை அரட்டை செயலியில் அறிமுகம் செய்யப்பட்டது.

போல்ஸ் வசதி மூலம் குழுவில் உள்ள ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்கான பல பதில்களையும் (Options) வழங்கலாம். மற்ற உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான பதிலை ஒரே கிளிக்கில் தேர்வு செய்யலாம். குறிப்பாக இதன் மூலம் தேவையற்ற மெசேஜ்கள் குவிவதைத் தவிர்க்கலாம்.
அதுவும் ஒரு குழுவில் எக்கச்சக்கமான மெசேஜ்கள் வரும்போது, முக்கியமான முடிவுகளை எடுப்பது மிகவும் கடினமாகிவிடும். குறிப்பாக யார் என்ன சொன்னார்கள் என்பதைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், இந்தப் புதிய போல்ஸ் வசதி மூலம் உடனடியாக வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மை கருத்து என்ன என்பதை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள முடியும். இது பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








