Home
News

நிம்மதி டா சாமி.. WhatsApp-ல் புதிய எடிட் அம்சம்.. இதோட ஒரு பெரிய தொல்லை ஒழிஞ்சது!

தொடர்ச்சியான முறையில் வாட்ஸ்அப்பில் (WhatsApp) சேர்க்கப்பட்டு மற்றும் சோதிக்கப்பட்டு வரும் புதிய அம்சங்களின் பட்டியலில் மேலுமொரு அம்சம் இணைந்துள்ளது. இந்த அம்சம் பெரும்பாலான வாட்ஸ்அப் பயனர்களை நிம்மதி பெருமூச்சு விட வைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பெஸ்ட் என்கிரிப்ட்ட மெசேஜிங் ஆப்களில் (Best Encrypted Messaging App) ஒன்றான வாட்ஸ்அப், ஒரு புதிய 'ஆட் ஆர் எடிட்' (Add or Edit) அம்சத்தில் பணியாற்றி வருகிறது. இது வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமலேயே ஒரு காண்டாக்ட்-ஐ ஆட் (Add) அல்லது எடிட் (Edit) செய்யும் திறனை வழங்கும்.

WhatsApp-ல் புதிய எடிட் அம்சம்.. இதோட ஒரு பெரிய தொல்லை ஒழிஞ்சது!

வாட்ஸ்அப்பிற்கு வரவிருக்கும் அம்சங்களை (Upcoming Features) அப்படியே புட்டுப்புட்டு வைக்கும் வலைத்தளமான வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோவின் (WABetaInfo) கூற்றுப்படி, ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவை (Android WhatsApp Beta) பயன்படுத்தும் சில பயனர்கள் ஒரு புதிய காண்டாக்ட் யூஸர் இன்டர்ஃபேஸை (Contact User Interface) கண்டுள்ளனர்.

இந்த புதிய காண்டாக்ட் யுஐ ஆனது ஒரு டீஃபால்ட் காண்டாக்ட் ஆப்பில் (Default Contacts app) கிடைக்கும் எல்லா வசதிகளையும் வாட்ஸ்அப்பிற்கு உள்ளேயே வழங்குகிறது. அதாவது ஒரு புதிய மொபைல் நம்பரை சேர்க்க உங்கள் மொபைலில் உள்ள காண்டாக்ட் ஆப்பில் என்னென்ன கிடைக்குமோ அதெல்லாம் வாட்ஸ்அப்பிற்கு உள்ளேயே கிடைக்கிறது.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஃபர்ஸ்ட் நேம் (First Name), லாஸ்ட் நேம் (Last Name), நாடு (Country), சேவ் டூ (Save to), ஆட் இன்ஃபர்மேஷன் (Add Information) போன்றவைகள் வாட்ஸ்அப்பிற்கு உள்ளேயே கிடைக்கும். இதன்கீழ் வாட்ஸ்அப்பை விட்டு வெளியே செல்லாமலேயே ஒரு புதிய மொபைல் நம்பரை சேமிக்கலாம்.

புதிய மொபைல் நம்பர்களை உங்கள் மொபைல் போனில் சேமிப்பது மட்டுமின்றி, அந்த காண்டாக்ட்களை உங்கள் மொபைலில் லாக்-இன் செய்யப்பட்டுள்ள கூகுள் அக்கவுண்ட்டிலும் கூட சேமிக்கலாம். மேலும் குறிப்பிட்ட மொபைல் நம்பரில் பிறந்தநாள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தனிநபர் விவரங்களையும் சேர்க்கலாம்.

அதுமட்டுமன்றி, நீங்கள் முன்பே சேமித்து வைத்து இருக்கும் காண்டாக்ட்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், அதையும் கூட நேரடியாக வாட்ஸ்அப்பிற்குள் இருந்தபடியே செய்யலாம். இப்படி ஒரு நல்ல அம்சம், இத்தனை நாட்களாக ஏன் வெளியாகவில்லை என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா?

தற்போது வரையிலாக இந்த புதிய அம்சம் 2.23.8.2, 2.23.8.4, 2.23.8.5 மற்றும் 2.23.8.6 ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன்களை பயன்படுத்தும் சில பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. இருப்பினும் கூடிய விரைவில் இது எல்லா ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், இந்த அம்சம் ஏற்கனவே ஐபோன்களில் - சில காலமாக - அணுக கிடைக்கிறது.

வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் உங்கள் மொபைலில் உள்ளதா என்பதை சரிபார்க்க விரும்புபவர்கள், உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டில் உள்ள காண்டாக்ட் லிஸ்ட்டை (Contact List) திறந்து, நியூ காண்டாக்ட் (New Contact) என்பதை கிளிக் செய்து அங்கே வாட்ஸ்அப்பின் புதிய யுஐ (UI) தோன்றுகிறதா என்று பார்க்கவும்.

ஒருவேளை நீங்கள் ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பீட்டா ப்ரோகிராமில் ரிஜிஸ்டர் செய்யாத, ஸ்டாண்டர்ட் வாட்ஸ்அப் யூசராக இருந்தால் தற்போதைக்கு உங்களால் இந்த புதிய வாட்ஸ்அப் அம்சத்தை அணுக முடியாது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த அம்சத்தின் அறிமுகம் வெகு தொலைவில் இல்லை; எனவே கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Now WhatsApp Android Users Can Add Edit Contacts Within The App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X