ஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை.!

தனித்துவ அடையாள ஆணைய இணையதளப் பக்கத்துக்கு சென்று அந்த மெய்நிகர் எண்ணை சம்பந்தப்பட்டவர்கள் உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் அந்த ஆணையம் கூறியது.

|

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் அவரது புகைப்படம் ,பெயர் விவரம் ,முகவரி ,கண் கருவிழி படலம் ,கை ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆதார் அட்டையில் 12 இலக்க எண்ணும் இடம் பெற்றுள்ளன.

ஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை.!

இப்போது எல்லாவற்றிற்கும் ஆதார் அட்டையை பயன்படுத்தும்போது அந்த அட்டைதாரரின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கிக்கணக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதைப்பற்றி சில புகார்களும் வந்தன.

மெய்நிகர் ஆதார் அட்டை:

மெய்நிகர் ஆதார் அட்டை:

இந்த மோசடியை தடுக்க இந்திய தனிநபர் அடையாள ஆணையம் , ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை திருடப்படுவதை தடுப்பதற்க்காக ஆதார் அட்டைக்கு மாற்றாக அதே போன்ற புதிய அடையாள அட்டை முறையை (மெய்நிகர் ஆதார் அட்டை ) அறிமுகப்படுத்தி உள்ளது.

16 இலக்க  எண் :

16 இலக்க எண் :

இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் இணையதள முகவரிக்கு சென்று இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை உருவாக்கி பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் ,பெயர் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் இப்புதிய அட்டையில் இடம் பெற்றிருக்கும். ஆனால் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணிற்கு பதிலாக புதிய அடையாள அட்டையில் 16 இலக்க எண் இருக்கும். சம்பந்தப்பட்ட நபரே இந்த எண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

 தனித்துவ அடையாள ஆணையம்

தனித்துவ அடையாள ஆணையம்

ஆதார் சேவையில் தனி நபர்களின் ரகசியத் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில், ஆதார் எண்ணை தெரிவிக்க விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக 16 இலக்க மெய்நிகர் எண்ணைத் தெரிவிக்கலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்தது.

 ஜூலை 1:

ஜூலை 1:

தனித்துவ அடையாள ஆணைய இணையதளப் பக்கத்துக்கு சென்று அந்த மெய்நிகர் எண்ணை சம்பந்தப்பட்டவர்கள் உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் அந்த ஆணையம் கூறியது. ஒவ்வொரு முறை ஆதார் மெய்நிகர் எண்ணை உருவாக்கும்போது அந்த எண்கள் சம்பந்தப்பட்டவரின் ஆதார் விபரங்களோடு இணைக்கப்பட்டு விடும் என்றும் இதன் மூலம் தனி நபர்களின் சுய விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறியது. இதற்கான காலக்கெடுவை ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டித்து தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Now, Virtual ID Can be Used in Place of Aadhaar to Get New SIM Card, Says DoT : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X