Home
News

சரியான நேரத்தில் தரமான அறிவிப்பு: கூகுள் மேப்ஸ் மூலம் அருகிலுள்ள கோவிட்-19 தடுப்பூசி., சோதனை மையம் அறியலாம்!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று இரண்டாம் அலை அதி தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம் தடுப்பூசி பயன்பாடுகள் பல்வேறு கட்டம் முன்னோக்கி செல்கிறது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி போன்ற பல மாநிலங்களில் நிலைமை மோசமடைந்து வருகிறது. நோய் தொற்று பரவலை குறைக்க அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள்

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள்

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள் குறித்து பார்க்கையில் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும். இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக், மே மாத தொடக்கம் முதல் கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது. ஒரு டோஸ் விலை இந்திய மதிப்புப்படி ரூ.750 என கூறப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 28 ஆம் முதல் முன்பதிவு செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார். மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கும் அடுத்தாக 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் கடந்த ஜூன் 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 சோதனை மையத்தை கண்டறியும் அம்சத்தை இணைத்தது. இது பயனுள்ளதாக இருந்ததையடுத்து சமீபத்தில் இந்த பயன்பாட்டில் புதிய இணைப்பு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அது பயனர்கள் தங்களை சுற்றியுள்ள கோவிட்-19 தடுப்பூசி மையத்தை கண்டறியும் அம்சமாகும்.

தீவிரமடைந்து வரும் இரண்டாம் அலை

தீவிரமடைந்து வரும் இரண்டாம் அலை

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து பரவி வருகின்றன. பயனர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அறிந்துக் கொள்ளும்படியும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கோவிட்-19 பரிசோதனை மையம்

கோவிட்-19 பரிசோதனை மையம்

கோவிட்-19 பரிசோதனைக்கான மக்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல மையங்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் குடிமக்கள் கூகுள் மேப்ஸ் போன்ற பயன்பாடுகளை பயன்படுத்தி கோவிட்-19 சோதனை மையம் அல்லது தடுப்பூசி போன்ற மையங்களை கண்டறிய முடியும். அதுமட்டுமின்றி இந்த பயன்பாட்டில் தொலைபேசி எண்கள், செயல்பாட்டு நேரம் போன்ற கூடுதல் தகவல்களும் இருக்கின்றன.

கொரோனா பரிசோதனை, தடுப்பூசி மையம்

கொரோனா பரிசோதனை, தடுப்பூசி மையம்

தங்களை சுற்றி இருக்கும் சோதனை மையங்களை கூகுள் மேப்ஸ் மூலம் கண்டறியலாம். இதை கண்டறிவதற்கான வழி குறித்து பார்க்கையில், எனக்கு அருகிலுள்ள கோவிட் சோதனை (Covid Test Near me) என டைப் செய்து மையங்களை கண்டறியலாம். அதுமட்டுமின்றி கோவிட் 19 சோதனை (Covid 19 Test) அல்லது கோவிட் சோதனை (Covid Testing) போன்ற முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தினாலும் தீர்வுகள் கிடைக்கும்.

ஏணைய விவரங்களை அறியலாம்

ஏணைய விவரங்களை அறியலாம்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் வரைபடத்தில் லேண்ட்மார்க் ஐகான்களுடன் குறிப்பிடப்படுகிறது. அதேபோல் பட்டியல் மூலமாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி இதில் பயனர்கள் பரிந்துரை, தனியாரா அல்லது அரசா, தொடர்புகள் மற்றும் நேரம் குறித்த தகவல்களை காணலாம். இதன் மூலம் ஆய்வகம் வீட்டுச் சோதனை மேற்கொள்ளப்படுகிறதா என்ற விவரமும் அளிக்கப்படும். மேலும் பயனர்கள் அதில் காண்பிக்கப்படும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இந்த சேவை பயனர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Now Users Can Know Covid19 Testing, Corona Vaccination Centre through Google Maps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X