மொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.!
பின்பு விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க ஆஃப் பரோடா மூன்று வங்கிகளை இணைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இப்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கும்விக்கும் விதமாக மொபைல் வாலட்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல விதமான மொபைல் வாலட்டுகளிடையே பணபரிவர்த்தனை செய்து கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
பின்பு இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போதுள்ளதை விட, அடுத்த 5ஆண்டுகளில் 5மடங்கு உயர்ந்து ஒரு லட்சம் கோடி டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுளளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி
மேலும் இந்த மதிப்பை கருத்தில் கொண்டு ஒரு மொபைல் வாலட்டில் இருந்து மற்றொரு நிறுவன வாலட்டிற்கு பண பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதன்படி பேடிஎம், மொபிவிக் போன்பே போன்ற நிறுவனங்கள்
விருப்பப்பட்டால் மற்ற நிறுவன வாலட்டுகளுக்கு பண பரிவர்தனை செய்து கொள்ள பயனாளர்களை அனுமதிக்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தனியார் ஈ-வாலட்
இந்தியாவில் பணமதிப்பு நீக்க உத்தரவுக்குப் பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாகியுள்ளன, இதனால் பல நிறுவனங்களின் ஈ-வாலட்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர், எனவே தனியார் ஈ-வாலட் நிறுவனங்களுடன் போட்டி போட அரசு தரப்பில் பிம் என்ற ஈ-வாலட்டை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று வங்கிகள்
பின்பு விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க ஆஃப் பரோடா மூன்று வங்கிகளை இணைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பின்பு இந்த வங்கிகளை இணைப்பதன் மூலம் நாட்டின் 3-வது பெரிய வங்கியாக இது இருக்கும் என
மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகள்
குறிப்பாக பொதுத்துறை வங்கிகள், வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விவகார்த்தில் சீரமைப்பு செய்ய மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications