#meetoo போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதிய ஆடை.!

ஆச்சர்யமளிக்கும் வகையில், இந்த காணொளியில் அப்பெண்கள் எத்தனை முறை தொடப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலும் பகிரப்பட்டுள்ளது.

|

சமூகவலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வரும் காணொளி ஒன்றில், மூன்று பெண்கள் தங்கள் அனுமதியின்றி எத்தனை முறை தொடப்படுகின்றோம் என்பதை பதிவு செய்ய 'ஸ்மார்ட் டிரெஸ்' அணிந்துகொண்டு கிளிப் ஒன்றிக்கு செல்வது காண்பிக்கப்படுகிறது. வெளியான தகவலின் படி,விளம்பர நிறுவனமான ஓகில்வி சாவ் பாலோ-ம் குளிர்பான நிறுவனமான ஸ்வெப்ஸ்-ம் இணைந்து இந்த ஸ்மார்ட் ஆடையை உருவாக்கியுள்ளன.

#meetoo போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதிய ஆடை.!

ஆச்சர்யமளிக்கும் வகையில், இந்த காணொளியில் அப்பெண்கள் எத்தனை முறை தொடப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலும் பகிரப்பட்டுள்ளது.

#meetoo போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதிய ஆடை.!

மினுமினுக்கும் இந்த ஆடையானது பல்வேறு சக்திவாய்ந்த சென்சார்களால் உருவாக்கப்பட்டது.தனிநபர்கள் அணிந்திருக்கும் போது யாராவது தொட்டால் இவை ஆக்டிவேட் ஆகும். இதன் செயல்திறனை பரிசோதிக்கும் வகையில், மூன்று பெண்கள் இந்த ஆடையை அணிந்துகொண்டு இரவுவிடுதி ஒன்றிற்கு சென்றனர். அந்த இரவு மட்டும் 157 முறை அப்பெண்கள் தொடப்பட்டுள்ளனர் என்கிறது இந்த டிவீட்.

ஒவ்வொரு முறை இப்பெண்களை தொடும்போதும் ஸ்மார்ட் ஆடையானது, அவற்றை தரவுகளை மாற்றும் தளத்திற்கு டிஜிட்டல் சிக்னல்களை அனுப்பும்.அத்தரவுகளின் படி, ஒரு மணி நேரத்திற்கு 40க்கும் மேற்பட்ட முறை பெண்கள் தொடப்பட்டிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு , இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை என பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவற்றுள் சில கருத்துக்கள் இதோ.
ஒரு பயனர் கூறுகையில், "இந்த ஆடையை தயாரிப்பதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவிட்டதற்கு பதிலாக, பெண்கள் தாங்கள் துன்புறத்தப்படுகிறோம் என கூறும் போது அவர்களை நம்புங்கள்" என தெரிவித்துள்ளார்.


"பெண்களை யாராவது தொட்டால் ஷாக் அடிக்கும் வகையிலான ஆடைகளை தற்போது வடிவமைக்கவேண்டும்" என ஒருவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


இதில் ஆச்சர்யமூட்டும் விசயம் என்னவென்றால், அந்த பார்ட்டியில் பங்குபெற்ற ஆண்கள் அனைவரும் இந்த காணொளியை பார்க்க அழைக்கப்பட்டனர். வீடியோவை பார்த்துவிட்டு திருடனுக்கு தேள் கொட்டியதை போல அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தே விட்டனர்.

Best Mobiles in India

English summary
Now, there is a ‘smart dress’ that records data every time you are touched without consent : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X