நோட்7, வாஷிங் மெஷின் இப்போது ஐபோன் 7 : எல்லாமே வெடித்தால் என்ன செய்வது??

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனத்தைப் பொருத்த வரை பிரச்சனை வருவதும், போவதும் மிகவும் சாதாரண ஒன்றாகவே இருக்கின்றது. உலகின் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களை வழங்கும் நிறுவனத்தில் எவ்வித கோளாறு என்றாலும் அது பல்வேறு சர்ச்சைகளையும் உண்டாக்கி விடுகின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 கருவிகளின் விற்பனை உலகின் பல்வேறு நாடுகளிலும் அமோகமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தனது போட்டி நிறுவனமான சாம்சங் போன்றே ஆப்பிள் நிறுவனமும் புதிய சிக்கலில் சிக்கியுள்ளது.

சாம்சங்

சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறியதால் அவை திரும்பப் பெறப்பட்டது. சரி செய்யப்பட்ட கருவிகள் மீண்டும் விநியோகம் செய்யப்பட்டன. சரி செய்யப்பட்ட கருவிகளும் வெடித்தது அனைவரும் அறிந்ததே.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்தியா

இந்தியா

பின் சென்னை விமான நிலையத்தில் விமானத்தினுள் கேலக்ஸி நோட் வெடித்ததால், விமானத்தில் கேலக்ஸி கருவிகள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சாம்சங் நிறுவனத்தின் வாஷிங் மெஷின் ஒன்றும் வெடித்திருக்கின்றது.

சாம்சங்

சாம்சங்

சில காலமாக சாம்சங் கருவிகள் வெடித்துச் சிதறும் சம்பவங்களைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 7 கருவிகளின் விற்பனை அதிகமானதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கும் சாம்சங் போன்றே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்

புத்தம் புதிய ஐபோன் 7 மேட் பிளாக் கருவி வெடித்துச் சிதறியதாக இப்புகைப்படத்தில் தெளிவாக தெரிகின்றது. சாம்சங் கருவிகள் பேட்டரி கோளாறு காரணமாக வெடித்துச் சிதறிய விலையில் ஐபோன் 7 கருவி விநியோகம் செய்யப்படும் போது வெடித்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

விநியோகம்

விநியோகம்

தனக்கு விநியோகம் செய்யப்பட்ட ஐபோன் 7 கருவியைத் திறந்து பார்த்த போது புத்தம் புதிய கருவி வெடித்துச் சிதறிய நிலையில் இருப்பது கருவியை முன்பதிவு செய்தவரை ஆச்சர்யமடைய செய்திருக்கின்றது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கருத்து

கருத்து

தொழிற்சாலையில் இருந்து விநியோகம் செய்யப்படும் இடைவெளி நேரத்தில் தான் ஏதோ நடந்துள்ளது என இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஐபோன் 7 வெடித்திருப்பது குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும் கருவியை வாங்கியவர் வழங்கும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆப்பிள் அல்லது குறிப்பிட்ட நிறுவனம் இகுகுறித்த விசாரணை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Photo Courtesy : 9Gag

Best Mobiles in India

English summary
now the iPhone 7 is exploding Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X