இப்போது ஒப்போ ஆர்9எஸ் ப்ளஸ் கருவி 6 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 625 உடன்..?
சீன ஸ்மார்ட்போன் பெஞ்ச்மார்க் வலைத்தளம் ஆன அன்டுடுவில் ஒப்போ ஆர்9எஸ் கருவி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ ஆர்9எஸ் கருவியுடன் சேர்த்து ஒப்போ ஆர்9எஸ் ப்ளஸ் கருவியையும் சீனாவில் அக்டோபர் 19-ஆம் தேதி (அதாவது நாளை) வெளியிட இருக்கிறது.

கடந்த முறை சீன ஸ்மார்ட்போன் பெஞ்ச்மார்க் ஆன அன்டுடுவில் ஒப்போ ஆர்9எஸ் கருவி காணப்பட்ட நிலையில் இப்போது அன்டுடு பெஞ்ச்மார்க் வலைத்தளத்தில் ஒப்போ ஆர்9எஸ் ப்ளஸ் கருவி சார்ந்த விடயங்கள் காணப்படுகிறது.

அன்டுடு பெஞ்ச்மார்க் தகவல்களின் கீழ், ஒப்போ ஆர்9எஸ் ப்ளஸ் கருவியானது புல் எச்டி (1920×1080 பிக்சல்கள்) கொண்ட டிஸ்ப்ளே கொண்டுள்ளது என்ற தகவலும் ஆனால் அதன் அளவு அறியப்படவில்லை. மறுபக்கம் இக்கருவியானது க்வால்காம் 653 எஸ்ஓசி, அட்ரெனோ 510 ஜிபியூ, 6 ஜிபி ரேம், 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் அந்த பட்டியலின் கீழ் இக்கருவியின் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ என்றும் இது ஒரு 16 மெகாபிக்சல் பின்புற கேமரா, அதே போல் ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது என்ற தகவல்களை குறிப்பிடுகிறது. பட்டியலில் அதன் பேட்டரி அளவு பற்றிய எந்த தகவலும் இல்லை.
இதற்கு முன்பு ஒப்போ ஆர்9எஸ் கருவியின் அம்சங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
100 சதவீதம் கேஷ்பேக், ரூ.11,000 மதிப்புள்ள இலவசங்கள், இது தீபாவளி சலுகை!!
கூகுள் பிக்ஸல் போன் (எ) ஐபோன் 7 : எது சிறந்தது?


Click it and Unblock the Notifications