வாகன ஓட்டிகளே உஷார்: இனி கிளிக், அபராதம், மெசேஜ்: விதிமீறலுக்கு அதிரடி நடவடிக்கை: நவீன தானியங்கி கேமரா!

|

போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடித்து தாமாகவே வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணுக்கு போக்குவரத்து சலான்கள் அனுப்பப்படும் தானியங்கி கட்டுப்பாடு தொடங்கப்பட்டுள்ளது.

61 நவீன கேமராக்கள்

61 நவீன கேமராக்கள்

சென்னை காவல் ஆணையர் இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பை பார்க்கலாம். சென்னையில் அண்ணாநகர் காவல்நிலைய ரவுண்டனா, சாந்தி காலனி சந்திப்பு, அண்ணாநகர் ரவுண்டனா, 100 அடி ரோடு, எஸ்டேட் சாலை சந்திப்பு, மேற்கு டிப்போ ஆகிய பகுதிகளில் 2019 ஆம் ஆண்டு 61 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டது.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் படங்கள்

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் படங்கள்

இந்த நவீன கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் படங்கள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு கட்டுப்பாறையில் கண்காணித்து விதிகள் மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராத சலான்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் என்ஐசி இணைந்து இந்த திட்டத்தை மேலும் நவீனப்படுத்தி மேம்படுத்தியுள்ளது.

வாகனங்களின் பதிவு எண்கள் கேமராக்களில் பதிவு

வாகனங்களின் பதிவு எண்கள் கேமராக்களில் பதிவு

அதாவது இந்த நவீன மேம்பாடானது போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்கள் கேமராக்களில் பதிவு செய்யப்படுவதோடு கண்காணிப்பு அறையில் இருக்கும் கணினி மூலம் அபராத சலான்கள் உருவாக்கப்பட்டு அது வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். உடனடுக்குடன் சலான் அனுப்புவதன் மூலம் பணிகள் சுலபமாக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை

போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை

போக்குவரத்து விதிமீறல் கண்காணிக்கும் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். அதோடு தானியங்கி சலான்கள் அனுப்பும் நடைமுறையையும் துவங்கி வைத்தார். இதையடுத்து இந்த 5 சிக்னல்களிலும் போக்குவரத்து விதிமீறல், எல்லைக்கோட்டை தாண்டி வாகனம் ஓட்டுவர், அதிவேகம், தவறான வழியில் வாகனம் ஓட்டுவது(எதிர்புற ஓட்டுதல்) போன்ற விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் வாகனம் துல்லியமாக கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

விதிகளை மீறினால் உடனடி அபராதம்

விதிகளை மீறினால் உடனடி அபராதம்

வாகனம் ஓட்டிக் கொண்டி இருக்கும் விதிகளை மீறினால் சென்று கொண்டிருக்கும் போது அபராதம் விதிக்கப்பட்டு அது உங்களது செல்போனுக்கு மெசேஜ் ஆக வந்துவிடும். இந்த நடைமுறை படிப்படியாக பல்வேறு பகுதிகளுக்கும் முழுமையாகவும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் மூலம் 18 சேவைகள்

ஆன்லைன் மூலம் 18 சேவைகள்

மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெறக்கூடிய 18 சேவைகளை ஆன்லைன் மூலம் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டன. ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை இனி மக்கள் ஆதார் அடிப்படையிலான சரிபார்த்தல் முறையின் படி பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எல்எல்ஆர், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழில் முகவரி மாற்றம், சர்வதேச ஓட்டுநர் அனுமதி, வாகன உரிமத்தை ஒப்படைத்தல், தற்காலிக மோட்டார் வாகனப் பதிவுக்கான விண்ணப்பம் ஆகிய பணிகள்.

மோட்டார் வாகனத்தின் பதிவுக்கான விண்ணப்பம்

மோட்டார் வாகனத்தின் பதிவுக்கான விண்ணப்பம்

மேலும், முழுவதுமாக கட்டுமானம் செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தின் பதிவுக்கான விண்ணப்பம், டூப்ளிகேட் வாகனப் பதிவு சான்றிதழ், வாகனப் பதிவுக்கான என்ஓசி சான்று, மோட்டார் வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், வாகனப் பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற அறிவிப்பு, அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பம், உயர் அதிகாரிகளுக்கு வாகனத்தைப் பயன்படுத்தப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், வாகனத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்தல், வாகனத்தை வாடகைக்கு எடுத்த காலம் முடிந்தபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தல், வாகனத்தின் உரிமத்தை மாற்றுவதற்கான விண்ணப்பம் போன்ற சேவைகளை ஆன்லைன் மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Now Modern Cameras Clicking Photos and Imposing Fines Who Violating Traffic Rules

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X