சூப்பர் நியூஸ்.. Jio மொபைல் நம்பருக்கு வந்த புது DND செட்டிங்ஸ்.. ON செஞ்சா SPAM கால், விளம்பர SMS வராது!
முகேஷ் அம்பானி தலைமையிலான டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களின் ஜியோ மொபைல் எண்களுக்கான புதிய செட்டிங்ஸ் (Jio New Settings) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மைஜியோ ஆப் (MyJio App) வழியாக அணுக கிடைக்கும் இந்த செட்டிங்ஸ்-ன் பெயர் என்ன? இதை ஆன் செய்தால் என்ன நடக்கும்? ஆன் செய்வது எப்படி? இதோ விவரங்கள்:
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, மைஜியோ ஆப் வழியாக டிஎன்டி (DND) என்கிற புதிய செட்டிங்ஸ் அணுக கிடைக்கிறது. டிஎன்டி என்பது டூ நாட் டிஸ்டர்ப் (Do not disturb) என்பதின் சுருக்கமாகும். இதை ஆக்டிவேட் செய்வதன் மூலம், ஸ்பேம் கால்கள் அல்லது விளம்பர அழைப்புகள் அல்லது விளம்பர மெசேஜ்கள் தங்களுக்கு வருவதை பிளாக் செய்ய முடியும்.

இந்த டிஎன்டி செட்டிங்ஸ்-ன் கீழ் நீங்கள் எதையெல்லாம், எப்படி எல்லாம் பிளாக் செய்யலாம்? மைஜியோ ஆப் வழியாக கிடைக்கும் டிஎன்டி செட்டிங்ஸ்-ன் கீழ், நீங்கள் தேர்வு செய்யும் குறிப்பிட்ட பிஸ்னஸ் காண்டாக்ட்களை பிளாக் செய்ய முடியும். விளம்பர பொருட்களின் வகைகளை வைத்து, அதாவது உங்களுக்கு வரும் ப்ரோமோஷனல் கால் வழியாக, அவர்கள் உங்களிடம் எதை விற்க பார்க்கிறார்கள் என்பதை வைத்தும் கூட நீங்கள் பிளாக் செய்யலாம்.
மேலும் தகவல் தொடர்பு முறை அல்லது தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் கூட பிளாக் செய்யலாம். தேர்வு செய்யலாம். சுவாரசியமாக இந்த செயல்முறையை மைஜியோ ஆப் வழியாக மட்டுமின்றி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், எஸ்எம்எஸ் மற்றும் போன் கால் மூலமாகவும் கூட ஆக்டிவேட் செய்யலாம்.
மைஜியோ ஆப் வழியாக டிஎன்டி செட்டிங்ஸ்-ஐ ஆன் செய்வது எப்படி? மைஜியோ ஆப்பில் உள்ள ஹோம் பேஜிற்கு சென்று மோர் என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். இதன் கீழ் உங்களுக்கு 4 வகையான டிஎன்டி ஆப்ஷன்கள் கிடைக்கும். அதில் உங்களுக்கு தேவையான ஒரு விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் ஃபுல்லி பிளாக்டு (Fully Blocked) என்கிற விருப்பத்தை தேர்வு செய்யும் பட்சத்தில், ஒடிபி (OTP) மற்றும் பரிவர்த்தனை உறுதிப்படுத்தல் செய்திகளை தவிர, மற்ற அனைத்து வகையான விளம்பர மற்றும் சேவை அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-களும் பிளாக் செய்யப்படும்
நீங்கள் ப்ரோமோஷனல் கம்யூனிகேஷன் பிளாக்டு (Promotional Communication blocked) என்கிற விருப்பத்தை தேர்வு செய்தால், சேவைகள் மற்றும் பரிவர்த்தனை அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெற அனுமதிக்கும். ஆனால் இது முழுமையான விளம்பர உள்ளடக்கத்தை மட்டும் பிளாக் செய்யும்.
கஸ்டம் ப்ரெஃப்ரென்சஸ் டிஏன்டி ஆப்ஷன் (Custom Preferences DND option) கீழ் மைஜியோ ஆப் வழியாக குறிப்பிட்ட நாட்களில் அல்லது நாளின் குறிப்பிட்ட நேரங்களில் கூட டிஎன்டி அம்சங்களை பயன்படுத்தும்படி தேர்வுசெய்யலாம். இதன் கீழ் வாய்ஸ் காலிங், முன்பே பதிவுசெய்யப்பட்ட மெசேஜ்களுடன் கூடிய ஆட்டோ டயலர், ரோபோ-கால்கள் மற்றும் பலவற்றை பிளாக் செய்யலாம்.
கடைசியாக டிஎன்டி-ல் இருந்து பதிவு நீக்கம் (De-registration from DND) செய்யும் விருப்பம் கிடைக்கும். இது அனைத்து விளம்பர மற்றும் சேவை அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களின் மீதான தடைகளையும் அன்பிளாக் செய்ய அனுமதிக்கும். அதாவது இதை தேர்வு செய்தால், உங்களுக்கு தொடர்ச்சியாக ஸ்பேம் கால்கள் மற்றும் ப்ரோமோஷனல் எஸ்எம்எஸ்கள் வரும்.
மேற்கண்ட 4 விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்த பின்னர், அந்த விருப்பத்தை சேவ் செய்துவிட்டு, மைஜியோ ஆப்பின் ஹோம் பேஜின் கீழ் கிடைக்கும் பிற விருப்பங்களுக்கு திரும்பலாம். குறிப்பிடத்தக்க வகையில், டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.அதில் பதிவு செய்யப்படாத அழைப்பாளர்களிடமிருந்து வரும் விளம்பர அழைப்புகளை நிறுத்துமாறு டிராய் கேட்டு கொண்டது.


Click it and Unblock the Notifications








