5352 நகரங்கள்.. அம்புட்டு பேருக்கும் 1000GB.. கிள்ளி கொடுக்குற பழக்கமே அம்பானி கிட்ட இல்ல.. அள்ளி தர்றாரு!
2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் நேரத்தில், முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது ஏர்பைபர் (Airfiber) சேவை தொடர்பான. ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதென்ன அறிவிப்பு? இதோ விவரங்கள்:
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது ஏர்பைபர் சேவையை அறிமுகம் செய்தது. பின்னர் 2024 ஜனவரி மாதத்திற்குள், 5ஜி பிக்ஸடு வயர்லெஸ் அக்செஸ் (5G Fixed-wireless access) கொண்ட ஜியோவின் ஏர்பைபர் சேவையானது, இந்தியா முழுக்க சுமார் 3939 நகரங்களை சென்றடைந்தது.

இப்போது, 2024 மார்ச் மாதத்தில் ஜியோ ஏர்பைபர் சேவையானது இந்தியா முழுக்க மொத்தம் 5352 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது குறிப்பிட்ட 5352 நகரங்களில் உள்ளவர்களும் ஏர்பைபர் சேவையின் பேஸிக் ரீசார்ஜ் ஆன ரூ.599-ன் கீழ் கீழ் 1000ஜிபி டேட்டாவை 30எம்பிபிஎஸ் ஸ்பீடில் அணுக முடியும் என்று அர்த்தம்!
வரவிருக்கும் மாதங்களில், ஜியோ நிறுவனத்டின் ஸ்டேண்ட் அலோன் 5ஜி நெட்வொர்க்குகள் (Jio 5G Stand Alone Network) எங்கெல்லாம் கிடைக்கிறதோ.. அங்கெல்லாம் ஜியோ ஏர்பைபர் சேவையும் விரிவுபடுத்தப்படும். தங்கள் பகுதிகளில் ஃபைபர் சேவைகளை பெற முடியாத மக்கள், ஜியோ ஏர்பைபர் சேவைக்குள் வரலாம். அறியாதோர்களுக்கு ஏர்பைபர் சேவைக்கு ஒரு பகுதியில் ஃபைபர் தேவைப்படாது; இருப்பினும் இது ஃபைபர் கனெக்ஷன் போன்ற இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் ரூ.599 முதல் தொடங்குகின்றன. இந்த திட்டத்தை நீங்கள் மாதந்தோறும் வாங்கலாம் அல்லது நீண்ட கால வேலிடிட்டியாகும் விருப்பத்தையும் (6 அல்லது 12 மாதங்கள்) தேர்வு செய்யலாம். ரூ.599 திட்டமானது 30எம்பிபிஎஸ் (30Mbps) என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் உங்களுக்கு 1டிபி அல்லது 1000ஜிபி மாதாந்திர டேட்டாவை (1TB or 1000GB Monthly Data) வழங்கும்.
ஜியோ ஏர்பைபர் சேவையின் கீழ் ரூ.899 மற்றும் ரூ.1199 திட்டமும் உள்ளது. இவ்விரு திட்டங்களும் 100 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் 1டிபி அல்லது 1000ஜிபி டேட்டாவை வழங்குகின்றன.இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால் ரூ.1199 ஆனது இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் (Free Netflix Subscription) வருகிறது. ரூ,.899 வழக்கமான ஓடிடி நன்மைகளே கிடைக்கும்.

ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் (Jio AirFiber Max) என்கிற பிரிவின்கீழ் ரூ.1499, ரூ.2499 மற்றும் ரூ.3999 என மொத்தம் 3 திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ரூ.1499 திட்டமானது 300 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடையும், ரூ.2499 திட்டமானது 500 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடையும் மற்றும் ரூ.3999 திட்டமானது 1ஜிபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடையும் வழங்குகின்றன.
3 ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டங்களும் 1டிபி அல்லது 1000ஜிபி மாதாந்திர டேட்டாவை வழங்கும் மற்றும் அனைத்துமே இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் வருகிறது. மேற்கண்ட 6 திட்டங்களிலும் கிடைக்கும் மற்ற இலவச ஓடிடி தளங்களை பொறுத்தவரை.. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar), அமேசான் ப்ரைம் (Amazon Prime), ஜீ5 (Zee5), ஜியோ சினிமா (Jio Cinema), சன் நெக்ஸ்ட் (Sun NXT) போன்றவைகள் கிடைக்கும்.
புதிய ஜியோ ஏர்பைபர் இணைப்பை பெற ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (Jio Official Website) செல்லவும் அல்லது மை ஜியோ மொபைல் ஆப் (MyJio Mobile App) மூலம் (நீங்கள் ஏற்கனவே ஜியோ வாடிக்கையாளராக இருந்தால்) முன்பதிவு செய்யலாம். இல்லையெனில், வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக புதிய ஜியோ ஏர்பைபர் இணைப்பை முன்பதிவு செய்ய 60008-60008 என்கிற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கலாம் அல்லது அருகிலுள்ள ஜியோ ரீடெய்ல் ஸ்டோருக்கு (Jio Retail Store) செல்லலாம்.


Click it and Unblock the Notifications








