மூன்று மாத இலவச டேட்டா அறிவித்தது ஐடியா அதிரடி.!

|

தொடர்ந்து ஆறு மாத கால இலவச சலுகைகளை வழங்கிய ஜியோ மார்ச் 31-ஆம் தேதியோடு அடங்கிவிடும் என்று பிற இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்லை கடித்துக் கொண்டு காத்திருந்தன. ஆனால் ஜியோ மேலும் மூன்றுகால (கிட்டத்தட்ட) இலவச சலுகைகளை நீட்டிக்கவும் முதலில் [பொறுமை இழந்த பிஎஸ்என்எல் நாள் ஒன்றிக்கு 10ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் அதன் திட்டத்தை அறிவித்தது அதனை தொடர்ந்து, ஜியோவை போலவே ஐடியா நாள் ஒன்றிக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் ஐடியாவின் திட்டம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு எந்தவித நெருக்கடியையும் வழங்கவில்லை என்பதையொட்டி ஐடியா அதன் அதிரடியான சலுகை திட்டமொன்றை கொண்டுவந்துள்ளது.

இலவச சேவை

இலவச சேவை

மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச சேவைகளை நீட்டிக்கும் நோக்கில் பெரும்பாலான ஜியோ பயனர்கள் ரூ.303/- அல்லது அதற்கு மேலான ரீசார்ஜ்களை நிகழ்த்தி கொண்டிருக்கும் நிலையில் ஐடியா நிறுவனம் அதன் சிறந்த போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான திட்டத்தை அறிவித்துள்ளது.

போஸ்ட்பெய்டு பயனர்கள்

போஸ்ட்பெய்டு பயனர்கள்

இந்தியாவின் அனைத்து தகவல்தொடர்பு நிறுவனங்களுமே ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ஆக்கிரமிப்பு சலுகைகள் வெளியிட்ட காரணத்தினால் போஸ்ட்பெய்டு பயனர்கள் தனித்து விடப்பட்ட ஒரு நிலைக்கு தள்ளப்பட்டன. அதை மனதில் கொண்டு தான் ஐடியா இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

1ஜிபி அளவிலான 4ஜி

1ஜிபி அளவிலான 4ஜி

இந்தச் சலுகையின் கீழ், ரூ.499/- திட்டத்தில் இணைந்த ஐடியா போஸ்ட்பெய்டு பயனர்கள், அடுத்த 3 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை பெறுவர்.

ரூ.300/மாதம்

ரூ.300/மாதம்

குறிப்பிட்ட மூன்று மாதங்கள் முடிந்ததுமே மார்ச் 31, 2018 வரையிலாக நாள் ஒன்றிக்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை தொடர்ந்து பெற பயனர்கள் ரூ.300/மாதம் செலுத்த வேண்டும்.

சிறப்பு சலுகை

சிறப்பு சலுகை

ஒருவேளைக்கு நீங்கள் ரூ.499/- திட்டத்தில்சேரவில்லை என்றால், கவலை வேண்டாம். ஐடியா அதன் ரூ.349/- அல்லது ரூ.498/- திட்ட பயனர்களுக்கும் ஒரு சிறப்பு சலுகையை வழங்குகிறது.

வெறும் ரூ.50/-க்கு

வெறும் ரூ.50/-க்கு

திட்டம்அந்த திட்டங்களின் கீழ் சந்தாதாரர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வெறும் ரூ.50/-க்கு (ஒரு மாதத்திற்கு) 1ஜிபி அளவிலானதரவை வழங்குகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இராஜ தந்திரி அம்பானி : ஜியோ இலவச சேவை நீட்டிப்பின் பின்னணி என்ன.?

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Now Idea Offers 3 Months Of Free Data To Take On Jio’s Summer Offer. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X