விண்வெளியில் செல்ஃபி எடுக்க ரூ.50,000
விண்வெளியில் செல்ஃபி எடுக்க ரூபாய் 50,000 இருந்தால் போதும் என்கின்றனர் ஷெஃப்பீல்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள்.

அலெக்ஸ் பாஸ்கர் மற்றும் க்ரிஸ் ரோஸ் பலூன்கள் மூலம் பேலோடுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றனர். இதில் டிஜிட்டல் கேமரா, ஃபோம், ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.
இதுவரை பல டஜன் குடும்ப போட்டோக்களை விண்வெளி செல்ஃபிக்காக அனுப்பியுள்ளனர், கடந்த வாரம் தங்கள் நிறுவனத்தின் 100 வது பலூனை அனுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் எங்களுக்கு விண்வெளியில் செல்ஃபி எடுப்பது குறித்து எந்த எண்னமும் இல்லை, பின்னர் இது வித்தியாசமாக இருக்கும் என்பதால் ஆரம்பித்தோம். விண்வெளிக்கு அனுப்பப்படும் பலூன்களில் ஜிபிஎஸ் கருவி பொரித்தி அது இறங்கும் இடத்தை கண்டறிந்து பேலோடுகளை எடுத்து கொள்வோம் என்று இதன் பொறியாளர்களில் ஒருவரான ரோஸ் தெரிவித்தார்.
இதையடுத்து இறந்தவர்களின் சாம்பளையும் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டு அதற்கான அனுமதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications