இனி அப்ளை செய்தால் உடனே இபாஸ்: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் வருகிற 31 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இபாஸ் நடைமுறையும் அமலில் உள்ளது. இதனால் ஏற்படும் சிக்கலை தவிர்க்கும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவிட்-19 தொற்று நோய்
கோவிட்-19 தொற்று நோய் கட்டுப்படுத்து அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்பொது கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும் இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு
கொரோனா பரவலைத் தடுக்க பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து வேறு மாநிலங்களுக்கு பயணிக்க இ-பாஸ் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இ-பாஸ் போலி தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

தனிநபர் இ-பாஸ்
தனிநபர் இ-பாஸ் பெறுவதற்கு திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வேறு இடத்தில் சிக்கித் தவித்தல் போன்ற சில காரணங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்பட்டது. இப்போது இதற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திண்டுக்கல், மதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பொதுமுடக்கக் காலத்தில் அதிகளவு முதலீடு
பொதுமுடக்கக் காலத்தில் அதிகளவு முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் உள்ளது எனவும் கூறினார். இ பாஸ் நிலவரத்தை பொருத்தவரை இ பாஸ் கேட்பவர்களுக்கு விரைவாக இ பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தொழிற்சாலைகளில் பணி புரிவதற்கு வருகைதரும் வெளிமாநிலத்தவர்களுக்கு இபாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் கூறினார்.

இ பாஸ் வாங்குவதற்கான நடைமுறை
அதேபோல் தமிழகத்தில் இ பாஸ் வாங்குவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கப்பட்டு வருவதாகவும் முன்னதாக இபாஸ் வழங்க ஒரு குழு மட்டுமே இருந்த நிலையில் இப்போது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்கள்
இந்த நிலையில் தற்போது இபாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் தடையின்றி பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு பயணிக்க 17.8.2020 அன்று முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தங்களது தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் அனுமதி எந்தவித தடையுமின்றி உடனுக்குடன் வழங்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நலன் கருதி
முன்னதாக கூறியது போல், பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையில்லாத பயணங்களை தவிர்த்து, தவிர்க்கவே முடியாத பயணங்களுக்கு மட்டும் இபாஸ் பயன்படுத்தும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications