இனி இ-பாஸ் எளிதாக வாங்கலாம்., வெளிமாநிலத்தவர்களுக்கும் இபாஸ்- முதலமைச்சர் அறிவிப்பு!

|

தமிழகத்தில் இபாஸ் வாங்கும் நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளது எனவும் வெளிமாநிலத்தவர்களுக்கு தேவைக்கேற்ப இபாஸ் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்று நோய்

கோவிட்-19 தொற்று நோய்

கோவிட்-19 தொற்று நோய் கட்டுப்படுத்து அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்பொது கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும் இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

கொரோனா பரவலைத் தடுக்க பிரதான நடவடிக்கை

கொரோனா பரவலைத் தடுக்க பிரதான நடவடிக்கை

கொரோனா பரவலைத் தடுக்க பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து வேறு மாநிலங்களுக்கு பயணிக்க இ-பாஸ் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இ-பாஸ் போலி தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

தனிநபர் இ-பாஸ்

தனிநபர் இ-பாஸ்

தனிநபர் இ-பாஸ் பெறுவதற்கு திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வேறு இடத்தில் சிக்கித் தவித்தல் போன்ற சில காரணங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்பட்டது. இப்போது இதற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திண்டுக்கல், மதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

அதில் இந்தியாவில் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் தமிழகத்தில் அதிகளவில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்- கணித்து கூறிய பில்கேட்ஸ்!இது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்- கணித்து கூறிய பில்கேட்ஸ்!

பொதுமுடக்கக் காலத்தில் அதிகளவு முதலீடுகள்

பொதுமுடக்கக் காலத்தில் அதிகளவு முதலீடுகள்

பொதுமுடக்கக் காலத்தில் அதிகளவு முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் உள்ளது எனவும் கூறினார். இ பாஸ் நிலவரத்தை பொருத்தவரை இ பாஸ் கேட்பவர்களுக்கு விரைவாக இ பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தொழிற்சாலைகளில் பணி புரிவதற்கு வருகைதரும் வெளிமாநிலத்தவர்களுக்கு இபாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் கூறினார்.

இ பாஸ் வாங்குவதற்கான நடைமுறை

இ பாஸ் வாங்குவதற்கான நடைமுறை

அதேபோல் தமிழகத்தில் இ பாஸ் வாங்குவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கப்பட்டு வருவதாகவும் முன்னதாக இபாஸ் வழங்க ஒரு குழு மட்டுமே இருந்த நிலையில் இப்போது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்

மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்

அதோடு மக்கள் இபாஸை அவசியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும் மாதம் ஒருமுறை இபாஸை புதுப்பித்தால் போதுமானதும் எனவும் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Now Easily Can Get Epass and Available epass for migrant workers: Cheif Minister Edappadi Palanisamy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X