டெலிவரி நபருக்கு காய்ச்சல் இருக்கா?- சொமேட்டோவின் சிறப்பு ஏற்பாடு!

|

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சொமேட்டோ அதன் டெலிவரி ஊழியர்களின் உடல் வெப்பநிலையைக் காட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு  மேற்பட்ட நகரங்களில் மளிகை பொருட்கள் விநியோகம்

பல்வேறு மேற்பட்ட நகரங்களில் மளிகை பொருட்கள் விநியோகம்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரங்கு உத்தரவினால் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில் மக்களுக்கு உதவும்படியான இந்தியா முழுவதும் பல நகரங்களில் மளிகை பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளதாக சொமேட்டோ அறிவித்துள்ளது.

சொமேட்டோ சந்தை வர்த்தகத்தின் புதிய சேவை

சொமேட்டோ சந்தை வர்த்தகத்தின் புதிய சேவை

கடந்த மாதம் இறுதியில் கேரளா மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் சொமேட்டோ சந்தை வர்த்தகத்தின் புதிய சேவையை செய்யத் தொடங்கியது. சொமேட்டோவை போன்றே அதன் போட்டி நிறுவனமான ஸ்விகியும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மளிகை பொருள் விநியோகத்தை தொடங்கியது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

சொமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல்

சொமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல்

அதேபோல் மக்கள் வீட்டில் இருந்தபடியே Paytm ஆகியவைகளை மூலம் மளிகை பொருட்களை விநியோகிக்கத் தொடங்கியது. இதுகுறித்து சொமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் கூறுகையில், தங்கள் நிறுவனம் மளிகை பொருட்கள் விநியோகத்தை வாடிக்கையாளர்களுக்கு தொடங்கியுள்ளது. உள்ளூர் மற்றும் எஃப்எம்சிஜி நிறுவனங்களுடன் பல்வேறு தொடக்க நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு சேவை செய்வதற்கு தாங்கள் முழு பயன்பாடுகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்

சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பு

சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பு

சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பு மளிகை பொருட்கள் விநியோகத்துடன் சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பானது இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், லெபனான், துருக்கி, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கத்தார் போன்ற பகுதிகளில் அடுத்த 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே தேங்கும் நிலை

பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே தேங்கும் நிலை

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பொதமக்கள் வீட்டுக்குள்ளேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்விகி மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மளிகை பொருட்கள் விநியோகத்தை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்களில் இந்த விற்பனை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோக ஊழியர்களின் உடல் வெப்பநிலை

விநியோக ஊழியர்களின் உடல் வெப்பநிலை

சொமேட்டா அதன் விநியோக ஊழியர்களின் உடல் வெப்பநிலையைக் காட்டும் வகையில் பயன்பாடு ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த வெப்பநிலை பயன்பாடானது யாருக்கேனும் காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் அதை காண்பிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவகத்தில் உள்ள ஊழியர்களின் வெப்பநிலையை அனைவருக்கும் காண்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களது வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு

தங்களது வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு

கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் அதன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதியும் இந்த பயன்பாடு அறிமுகப்படுத்தியுள்ளது. சொமேட்டோவை போலவே வேறு சில டெலிவரி நிறுவனங்களும் இந்த முறையை செயல்படுத்த உள்ளன. உணவக சமையல்காரர்களின் வெப்ப நிலையையும், துணை ஊழியர்களின் உடல்நிலை குறித்தும் தங்களது வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்டர் டிராக்கிங் திரையில் டெலிவரி ஊழியரின் உடல் வெப்பநிலை

ஆர்டர் டிராக்கிங் திரையில் டெலிவரி ஊழியரின் உடல் வெப்பநிலை

உங்கள் உணவை எடுத்தவுடன் ஆர்டர் டிராக்கிங் திரையில் டெலிவரி ஊழியரின் உடல் வெப்பநிலையை சொமேட்டோ பயன்பாடு காண்பிக்கும். இதன்மூலம் உணவு எடுத்துவரும் டெலிவரி ஊழியரின் உடல்நிலை குறித்தும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அரசு வழங்கும் E-pass: ஊரடங்கில் அரசு அனுமதியோடு பயணம் செய்யலாம்- இதோ வழிமுறை!அரசு வழங்கும் E-pass: ஊரடங்கில் அரசு அனுமதியோடு பயணம் செய்யலாம்- இதோ வழிமுறை!

கொரோனா பராவமல் தடுக்க நடவடிக்கை

கொரோனா பராவமல் தடுக்க நடவடிக்கை

ஊழியர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என்பதை கண்டறியும் வகையில் இந்த ஏற்பாடு, பாரான் ஹீட் என்பதன் விவரத்தில் வெப்பநிலைக் காட்டப்படுகிறது. இதன் மூலம் கொரோனா பரவாமல் தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த புகைப்படத்தை டுவிட்டரில் காணமுடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
now can see Delivery Executives body temperature zomato starts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X