டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு இனி இன்டர்நெட் வேணாம்: அட்டகாச வசதி அறிமுகம்!

|

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை இனி இணைய இணைப்பு இல்லாமல் மேற்கொள்ளலாம். ரிசர்வ் வங்கி ஆஃப்லைன் கட்டண வசதி குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிஜிட்டல் பேமெண்ட்

டிஜிட்டல் பேமெண்ட்

டிஜிட்டல் இந்தியாவின் செயல்பாட்டின் பிரதான ஒன்று டிஜிட்டல் பேமெண்ட். டிஜிட்டல் பேமெண்ட் மேற்கொள்வதற்கு பல்வேறு பயன்பாட்டில் உள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் பேமெண்ட் என்பது சிறிய தொழில் முதல் பெரிய தொழில்வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆன்லைன் பணபரிவர்த்தனை

ஆன்லைன் பணபரிவர்த்தனை

ஆன்லைன் பணபரிவர்த்தனை மேற்கொள்ளும்போது பலரும் சந்திக்கும் ஒரு சிக்கல் என்பது இணைய இணைப்பு. இணைய இணைப்பு குறைவாக இருந்தால் பரிவர்த்தனை செய்ய தாமதமாகும். இந்த நிலையில் தற்போது டிஜிட்டல் கட்டணம் இருந்தால் போதும் இணைய இணைப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி வசதி

இந்திய ரிசர்வ் வங்கி வசதி

இதை சரிசெய்யும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம் இணைய இணைப்பு குறைவாக உள்ள இடத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதாகும்.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வசதி

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வசதி

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வசதி மூலம் இனி பரிவர்த்தனை மேற்கொள்ள இணைய இணைப்பு தேவையில்லை. ரிசர்வ் வங்கி சிறிய தொகையை ஆஃப்லைன் மூலம் இணைய இணைப்பு இல்லாமல் மொபைல் மூலமாகவும் செலுத்த அனுமதிக்கிறது.

இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை! வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்!

இணையம் இல்லாமல் பரிவர்த்தனை

இணையம் இல்லாமல் பரிவர்த்தனை

ஆஃப்லைன் இணையம் இல்லாமல் பரிவர்த்தனை ஒரே நேரத்தில் ரூ.200 வரை செலுத்த அனுமதிக்கிறது. இந்த அறிவிப்பின்மூலம் பைலட் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனை என்பது அதிகபட்சம் வரம்பு ரூ.200 மட்டுமே. பைலட் திட்ட பரிவர்த்தனையானது மார்ச் 21,2021 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைகளை கண்டறிந்து அகற்றப்படும்

குறைகளை கண்டறிந்து அகற்றப்படும்

குறைந்த கட்டணம் பரிவர்த்தனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது என்றாலும் இது முன்முயற்சிதான் இதன் குறைகளை கண்டறிந்து அதை நீக்கி அடுத்தக்கட்டத்தை ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைய இணைப்பு இல்லாதது பெரிய தடை

இணைய இணைப்பு இல்லாதது பெரிய தடை

டிஜிட்டல் கட்டணத்திற்கு பல்வேறு தொலைதூர பகுதிகளும் இணைய இணைப்பு இல்லாதது பெரிய தடையாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆஃப்லைன் கட்டணம் செலுத்துவதற்கான வசதி அறிமுகப்படுத்துகிறது இதுதான் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source: zeebiz.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Now Can Digital Payment Make Without Internet: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X