ஏடிஎம்மில் புதிய ஸ்கேனிங் வசதி!

Posted By: Staff
ஏடிஎம்மில் புதிய ஸ்கேனிங் வசதி!

கைரேகை பதித்து பணமெடுக்கும் வகையில் ஜப்பானில் ஏடிஎம்மில் ஸ்கேனிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்மில் பணமெடுக்க கார்டை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டீர்களா? கவலையே வேண்டாம். கார்டு இல்லை என்றாலும், இனி ஏடிஎம்மில் பணமெடுக்கலாம்.

கைரேகை பதித்து ஏடிஎம்மில் பணமெடுக்கும் வகையில் புதிய ஸ்கேனிங் வசதி கொண்ட ஏடிஎம், ஜப்பானில் உள்ள ரீஜினல் வங்கியில் இன்று துவங்கப்பட்டுள்ளது. கார்டு மூலம் பணமெடுக்கும் வசதியை விடவும் கைரேகையை பயண்படுத்தி பணத்தை எடுப்பது மிக சிறந்த வழியாக தெரிகிறது.கார்டில் கூட மற்றவர்கள் பயன்படுத்தி பணம் எடுத்துவிட முடியும்.

ஆனால் ஒருவர் கைரேகையை பயண்படுத்தி மற்றவர்கள் பணத்தை எடுத்துவிட முடியாது. இப்படி கைரேகை மூலம் பணத்தை வெளியிடும் ஸ்கேனிங் வசதி ஏடிஎம்களில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 6ம் தேதி பார்வையற்றோருக்கு பயன்படும் விதத்தில், குரல் வழிகாட்டும் வசதியுடன் ஷார்ஜாவில் புதிய ஏடிஎம் திறக்கப்பட்டதாக நமது தமிழ் கிஸ்பாட்டில் ஒரு செய்தி பார்த்தோம்.

இதை தொடர்ந்து இப்போது ஸ்கேனிங் வசதி மூலம் கைரேகை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் பணமெடுக்கும் புதிய வசதி ஜப்பானில் வழங்கப்பட்டுள்ளது. இது போன்று கைரேகை கொண்டு பணமெடுக்கும் வசதி இனி நமது நாட்டிலும் கூடிய விரைவில் வரும என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறகென்ன ஏடிஎம்மில் காசெடுக்க கையிருந்தால் போதும், கார்டு தேவையில்லை போலும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்