Home
News

புகுந்து விளையாடும் பயனர்கள்.. ChatGPT மீதான முக்கிய கட்டுப்பாடு விலகியது.. Google-க்கு செக் வைத்த OpenAI!

நேற்று வரையிலாக.. ஜெனெரேட்டிவ் ஏஐ சாட்பாட் (Generative AI Chatbot) ஆன சாட்ஜிபிடி (ChatGPT) மீது இருந்த ஒரு முக்கியமான கட்டுப்பாடு, தற்போது நீக்கப்படுவதாக ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் அறிவித்துள்ளது. அதென்ன கட்டுப்பாடு? இதனால் சாட்ஜிபிடி பயனர்களுக்கு என்ன பயன்? இதோ விவரங்கள்:

அப்படி என்ன கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது? உலகின் மிகவும் பிரபலமான ஏஐ-பவர்டு சாட்பாட்களில் ஒன்றான சாட்ஜிபிடி ஆனது ஏற்கனவே முற்றிலும் இலவசமாக பயன்படுத்த கிடைத்தாலும் கூட, பயனர்கள் அதற்கென ஒரு ஓப்பன்ஏஐ அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்ய வேண்டி இருந்தது. தற்போது அந்த கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்த விரும்புவோருக்கு எந்தவொரு அக்கவுண்ட்டும் தேவையில்லை.

ChatGPT மீதான முக்கிய கட்டுப்பாடு விலகியது!

ஆஃப் செய்ய ஒரு ஆப்ஷனும் கிடைக்கும்! சாட்ஜிபிடி-யிடம் கொடுக்கும் தகவல்கள் அல்லது விவரங்கள் ஆனது சேமிக்கப்பட்ட கூடாது என்று விரும்பும் பயனர்கள் சாட்பாட்டின் செட்டிங்ஸ்-க்கு (Settings) சென்று 'இம்ப்ரூவ் தி மோட் ஃபார் எவ்ரிஒன்' (Improve the mode for everyone) என்கிற விருப்பத்தை ஆஃப் (Off) செய்து கொள்ளலாம் என்றும் ஓப்பன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒருவேளை ஆன் செய்து வைத்திருந்தால் என்ன ஆகும்? மேற்குறிப்பிட்ட விருப்பத்தை ஆன் (ON) செய்து வைத்து இருந்தால் சாட்ஜிபிடி ஆனது நீங்கள் கேட்கும் கேள்விகள், கொடுக்கும் தகவல்கள் அல்லது பகிரும் விவரங்களை.. தனது லார்ஜ் லேங்குவேஜ் மாடலுக்கான (Large language model) உள்ளீடுகளாக (Inputs) மாற்றி.. தன்னை தானே மேம்படுத்திக் கொள்ளும்.

ChatGPT மீதான முக்கிய கட்டுப்பாடு விலகியது!

அக்கவுண்ட் இல்லாமல் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதிலும் ஏதேனும் சிக்கல் உள்ளதா? கண்டிப்பாக உள்ளது! ஓப்பன்ஏஐ அக்கவுண்ட் வழியாக லாக்-இன் செய்து சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே சாட் ஹிஸ்டரியை சேமிப்பதற்கான மற்றும் ரிவ்யூ செய்வதற்கான அம்சங்கள் கிடைக்கும். மேலும் வாய்ஸ் ரெஸ்பான்சஸ் மற்றும் ஜெனெரேட் செய்யப்பட்ட ரிஸல்ட்களை மற்றவர்களுடன் ஷேர் செய்யும் வசதியும் கிடைக்கும்.

அக்கவுண்ட் இல்லமால் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துபவர்களுக்கு மேற்கண்ட அம்சங்கள் மற்றும் வசதிகள் அணுக கிடைக்காது. இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் உள்ளது. அது என்னவென்றால், நீங்கள் கட்டண பதிப்பு (Paid version) அல்லது டால்-இ 3 (DALL-E 3) போன்ற பிற ஓப்பன்ஏஐ தயாரிப்புகளை பயன்படுத்த விரும்பினால் (பயன்படுத்தினால்), நீங்கள் கட்டாயம் லாக்-இன் செய்ய வேண்டியிருக்கும்.

ChatGPT மீதான முக்கிய கட்டுப்பாடு விலகியது!

ஒருவேளை.. நீங்கள் வசிக்கும் பகுதியில், சாட்ஜிபிடி ஆனது இன்னுமும் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்ய உங்களை சொல்லி கேட்கிறது என்றால், இன்னும் சிறிது நேரம் / நாட்கள் காத்திருக்கும்படி பரிந்துரைக்கிறோம். ஏனென்றால் "இனி லாக்-இன் செய்ய தேவையில்லை, அக்கவுண்ட் தேவையில்லை" என்கிற விதிவிலக்கானது ஒவ்வொரு பகுதியாக.. மெல்ல மெல்லவே அமலுக்கு வரும்.

ஒவ்வொரு வாரமும் 185 நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சாட்ஜிபிடி-ஐ இனிமேல் அக்கவுண்ட் இல்லமால் அணுகலாம் என்கிற அறிவிப்பு, உண்மையிலேயே வரவேற்கத்தக்கது தான். இது ஜெனெரேட்டிவ் ஏஐ சாட்பாட்களை இன்னும் எளிமையாக அணுகுவதற்கான புதிய வழிகளை திறந்துவிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஓப்பன் ஏஐ நிறுவனமானது, கூடிய விரைவில் அதன் சாட்ஜிபிடி-5 வெர்ஷனை (ChatGPT 5 Version) ரிலீஸ் செய்ய உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஜிபிடி 5 (GPT 5) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜெனரேட்டிவ் ப்ரீ ட்ரெயின்டு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 5 (Generative Pre-Trained Transformers 5) வெர்ஷனில் ஆட்டோநமஸ் முறையில் செயல்படக்கூடிய ஏஐ ஏஜெண்ட்கள் (AI Agents that can Operate Autonomously) போன்ற புதிய திறன்கள் சேர்க்கப்படலாம்.

கடந்த மார்ச் 2023 இல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட சாட்ஜிபிடி 4 வெர்ஷனின் "மேம்படுத்தப்பட்ட வாரிசாகவும்".. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் "நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏஐ மாடலாகவும்" வரும் சாட்ஜிபிடி 5 ஆனது அடுத்த சில மாதங்களில்.. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Now Anyone Can Use ChatGPT Without OpenAI Account But There are Few Restrictions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X