கும்ப மேளா கூட்ட நெரிசலைத் தடுக்க ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் புதிய முயற்சி.!
மெட்ராஸ் ஐஐடி விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் இணைந்து, குறைந்தபட்ச மனிதவளத்தைப் பயன்படுத்தி அடர்ந்த கூட்ட நெரிசல்களைக் கட்டுப்படுத்த புதிய செயல் முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
மெட்ராஸ் ஐஐடி விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் இணைந்து, குறைந்தபட்ச மனிதவளத்தைப் பயன்படுத்தி அடர்ந்த கூட்ட நெரிசல்களைக் கட்டுப்படுத்த புதிய செயல் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். கும்ப மேளா மற்றும் ஹஜ்ஜைப் போன்ற பெரிய பொதுக்கூட்டங்களில் கொடூரமான கூட்ட நெரிசலைத் தடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து புதிய வழிமுறையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

கம்ப்யூட்டர் சிமுலேஷன்
கம்ப்யூட்டர் சிமுலேஷன் முறையைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புத்திசாலித்தனமாகக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இந்த சேவையைத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர். கம்ப்யூட்டர் சிமுலேஷன் மூலம் கூட்ட நெரிசல் உண்டாகப் போகும் இடத்தை முன்பே உணர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகளை உடனடியாக அனுப்பி உருவாக இருக்கும் குழப்பங்களைத் தடுக்க முடியும்.

புதிய செயல்முறை
ஜர்னல் பிசிக்கல் ரிவியூ ஆய்வின் படி, பெரிய நிகழ்வுகள் மற்றும் இடங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்கவும், பாதுகாப்பான வெளியேற்ற நடைமுறைகளை வடிவமைக்கவும் ஆராய்ச்சியாளர்களின் புதிய செயல்முறை உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கழகம் பேராசிரியர் மகேஷ் பாஞ்ச்ளூலா
கூட்ட நெரிசலினால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் ப்ரிஜெட்டில் நிகழ்ந்த சோகத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அது போன்ற சம்பவங்களின் நிகழ்வுகள் எப்படி ஆரம்பிப்பதென்பதையும், கடுமையான கூட்ட நெரிசலில் மூலம் எவ்வாறு பிரச்சனைகள் உருவாகும் என்பதை நாங்கள் அறிந்து அதைக் குறைப்பதற்கான வழிகளை தற்பொழுது கண்டுபிடித்துள்ளோம் என்று இந்தியத் தொழில்நுட்பக் கழகம் பேராசிரியர் மகேஷ் பாஞ்ச்ளூலா கூறியுள்ளார்.

திரவ இயக்கவியல்
கூட்ட நெரிசலில் இயக்கம் எப்பொழுதும் திரவத்தையும் ஒத்ததாக இருக்கிறது, எனவே திரவ இயக்கவியல் சட்டங்களைக் கொண்டு கூட்டத்தில் எழக்கூடிய தொந்தருவகள் மற்றும் பிரச்சனைகளைக் கணித்துச் செயல்பட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டிரோன்
டிரோன்களைப் பயன்படுத்திக் கூட்டத்தைக் கண்காணித்து, கூட்ட நெரிசல் அதிகம் உருவாகும் இடத்தை முன்பே அறிந்து அங்குத் தக்க நேரத்தில் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்த அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க முடியுமென்று மகேஷ் பாஞ்ச்ளூலா கூறியுள்ளார்.

ஐஐடி மெட்ராஸ்
இந்த வருடக் கும்ப மேளா நிகழ்ச்சியில், இந்த செயல்முறையைப் பயன்படுத்திக் கூட்ட நெரிசலை எளிதாய் கட்டுப்படுத்தி எந்தவித அசம்பாவிதமும் நிகழ்ந்திடாமல் தடுக்க முடியுமென்று ஐஐடி மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








