புதிய விதி.. இனி இந்த சான்றிதழ் வாங்க Aadhaar அட்டை அவசியம்.. திடீர் அறிவிப்பு.. எந்த மாநிலத்தில்?
எந்தவொரு அரசாங்க நலத்திட்டத்தை பெறுவதற்கும் இனி ஆதார் அட்டை (Aadhaar Card) அவசியம் என்கிற காலம் வெகுதொலைவில் இல்லை என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் டெல்லி அரசாங்கம் ஆனது வருமானச் சான்றிதழ்களை (Income certificates) வழங்குவதற்கு தற்போது ஆதார் அவசியம் என்கிற புதிய விதியை கட்டாயமாக்கியுள்ளது.
வருமானச் சான்றிதழ் ஆனது பல வகையான நிதி சார்ந்த சலுகைகளை அணுக தேவைப்படும் மிகவும் முக்கியமான ஆவணமாகும். இந்த நடவடிக்கை, வருமானச் சான்றிதழ் ஆனது தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதையும், உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே மானியங்கள் மற்றும் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது ஏன் முக்கியமான நடவடிக்கை ஆகும்? டெல்லி அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களுக்கான தகுதியைத் தீர்மானிக்க வருமானச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றுள்:
- எஸ்சி/எஸ்டி/ஓபிசி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திருப்பி செலுத்துதல் (Tuition fee reimbursement )
- முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியங்கள்
- டெல்லி ஆரோக்கிய கோஷின் கீழ் கிடைக்கும் நிதி உதவி
- பிற மாநில நிதியுதவி நலத் திட்டங்கள் ஆகியவைகள் அடங்கும்
இந்த முடிவு 2016 ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் வருகிறது, இது மாநில அரசுகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்து அல்லது மாநிலத்திலிருந்து பணத்தை பயன்படுத்தும் திட்டங்களுக்கு ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை கட்டாயமாக்க அனுமதிக்கிறது. இந்த நடவடிக்கை 2019 ஆம் ஆண்டுக்கான யுஐடிஏஐ (UIDAI) ஆலோசனையை பின்பற்றுகிறது, இது மாநிலங்களுக்கு நலத்திட்ட சலுகைகளுக்காக ஆதார் அங்கீகாரத்தை அமல்படுத்த அதிகாரம் அளிக்கிறது
உங்களிடம் ஆதார் இல்லையென்றால் என்ன செய்வது? கவலைப்பட வேண்டாம். ஆதார் இல்லாத பெரியவர்கள் - ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு, ஆதார் சேர்க்கை சீட்டு உடன் சேத்து மற்றும் ஒரு செல்லுபடியாகும் ஆவணத்தை சமர்பிக்கலாம். அதாவது வங்கி / அஞ்சல் அலுவலக பாஸ்புக், பான் கார்டு, பாஸ்போர்ட், கிசான் பாஸ்புக் அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளில் ஒன்றை சமர்பிக்கலாம்.
இதேபோல ஆதார் இல்லாத குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் - ஆதார் சேர்க்கை சீட்டு அல்லது பயோமெட்ரிக் புதுப்பிப்பு சீட்டு, கூடுதலாக பெற்றோர் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி முதல்வரால் கையொப்பமிடப்பட்ட பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.
சமீபத்தில் இனி யுமாங் (UMANG) ஆப்பில், ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பம் (Aadhaar-based Face Authentication Technology) மூலம் மட்டுமே யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஒதுக்கீடு மற்றும் உருவாக்கம் (Allotment and generation) செய்யப்படும் என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது. இந்த புதிய விதி ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், சர்வதேச தொழிலாளர்கள் (International workers) மற்றும் நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள் (Citizens of Nepal and Bhutan) போன்ற விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், எம்பிளாயர் மூலம் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை உருவாக்கும் (Generating UAN through the employer) தற்போதைய செயல்முறை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30, 2025 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கை, ஏப்ரல் 8, 2025 தேதியிட்ட முந்தைய இபிஎப்ஓ சுற்றறிக்கையை செயல்படுத்தியதாக கூறுகிறது. மேலும் அந்த அறிக்கையின்படி முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யுமாங் ஆப்பில் ஊழியர்கள் / உறுப்பினர்களுக்கான மூன்று இபிஎப்ஓ வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவைகள் - யுஏஎன் ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தல், ஏற்கனவே உள்ள யுஏஎன்-களுக்கான யுஏஎன் செயல்படுத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள செயல்படுத்தப்பட்ட யுஏஎன்-களுக்கான முக அங்கீகார சேவை ஆகும்.


Click it and Unblock the Notifications








