Home
News

CMF அதகளம்.. ஒரே நேரத்தில் 4 புதிய அறிமுகங்கள்.. புது போன், பட்ஸ், வாட்ச்.. கலக்குறே சந்துரு!

நத்திங் (Nothing) நிறுவனம் அதன் சோஷியல் மீடியா சேனல்களிலும், கம்யூனிட்டி பேஜ்ஜிலும் 4 புதிய சிஎம்எப் பை நத்திங் (CMF by Nothing) டிவைஸ்களை கிண்டல் செய்ய தொடங்கியுள்ளது. சுவாரஸ்யமாக, நத்திங் இந்தியாவானது அந்த 4 டிவைஸ்களில் ஒன்றை டீஸ் செய்துள்ளது.

முதலாவது புல்பசர் (#0001), இது நத்திங் இந்தியா மற்றும் சிஎம்எப் ஆகிய இரண்டாலும் டீஸ் செய்யப்பட்டுள்ள ஒரு சீட் போகிமொன் (Seed Pokemon) ஆகும். இது வரவிருக்கும் சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போனின் கோட் நேம் ஆக இருக்கலாம். முந்தைய வதந்திகளின் அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட்டால் இயக்கப்படும்.

CMF அதகளம்.. ஒரே நேரத்தில் 4 புதிய அறிமுகங்கள்!

அது டைமன்சிட்டி 7400 ஆக இருக்கலாம். இதே சிப்செட் தான் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் ஸ்மார்ட்போனிலும் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிஎம்எப் பை நத்திங் வெளியிட்ட டீஸரில் இரண்டாவதாக உள்ளது - க்ளிகர் (#0207) ஆகும். இது ஒரு ஃப்ளைஸ்கார்பியன் போகிமொன் (FlyScorpion Pokemon) ஆகும்

மூன்றாவதாக உள்ளது - ஜிராஃபாரிக் (#0203), இது ஒரு நீண்ட கழுத்து கொண்ட போகிமொன் ( Long Neck Pokemon) ஆகும். நான்காவதாக மற்றும் கடைசியாக உள்ளது - ஹூத்தூட் (#0163) ஆகும், ஒரு ஆந்தை போகிமொன் (Owl Pokemon) ஆகும். இவைகள் எல்லாமே சிஎம்எப் அக்ஸசரீஸ்களாக இருக்கலாம். அதாவது TWS இயர்பட்ஸ், நெக்பேண்ட் ஹெட்செட் மற்றும் கடந்த ஆண்டு வெளியான ஸ்மார்ட் வாட்ச் மாடல்களின் ஒரு அப்கிரேடட் ஸ்மார்ட்வாட்ச் ஆக கூட இருக்கலாம்.

இந்த 4 புதிய சிஎம்எப் தயாரிப்புகளும் 2025 ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் வாரங்களில் இந்த 4 புதிய தயாரிப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாலாம். சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

நத்திங்கின் சப்-பிராண்ட் ஆன சிஎம்எப் இன்னும் சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போனின் இருப்பை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் சில முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ரெண்டர்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. லீக் ஆன ரெண்டார்கள் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை காட்டுகின்றன.

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் ஆனது ஃபிளாஷுடன் சேர்த்து முக்கோண வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளன. இது உண்மையாக இருந்தால், சிஎம்எப் போன் 2 மாடலில் - இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும். ஏனென்றால் தற்போதுள்ள மாடலில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சோனி சென்சார் மற்றும் ஒரு போர்ட்ரெய்ட் சென்சார் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப் மட்டுமே உள்ளது.

மேலும் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் மேட் ஃபினிஷ் கொண்ட சிஎம்எப் போன் 2 மாடலை போலவே இருக்கிறது. லீக் ஆன ரெண்டர்களில் சிஎம்எப் போன் 2 பிளாக் ஆனது கலரில் உள்ளது.மேலும் பேக் பேனலில் உள்ள ஸ்க்ரூக்கள் ஆனது, சிஎம்எப் போன் 1 மாடலில் நாம் பார்த்ததை போலவே இன்டர்சேஞ்சபிள் கவர்கள் மற்றும் கஸ்டம் ஆக்சஸெரீஸ்களை ஆதரிக்கும் என்பதை குறிக்கின்றன.

சிஎம்எப் போன் 2-வில் உள்ள ஸ்க்ரூக்கள் ஆனது சிஎம்எப் போன் 1 மாடலில் உள்ள அதே நிலையில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆக இரண்டு போன்களுக்கான ஆக்சஸெரீஸ்களும் பொதுவானதாக இருக்க வாய்ப்புள்ளது. விலையை பொறுத்தவரை சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing teases 4 New Upcoming CMF Devices With Poekmon Codenames See Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X