சைலன்ட்-ஆ Nothing பார்த்த வேலை.. நச்சுனு 3 புதிய தயாரிப்புகள்.. CMF வாட்ச், பட்ஸ், சார்ஜர்.. என்ன விலை?
இம்மாத தொடக்கத்தில், நத்திங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (Nothing CEO) கார்ல் பெய் (Carl Pei), சிஎம்எஃப் (CMF) என்கிற புதிய நிறுவனத்தை அறிமுகம் செய்து, அது நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனமாக (Sub-brand) செயல்படும் என்பதையும் அறிவித்து இருந்தார்.
சிஎம்எஃப் பிராண்ட் ஆனது மலிவு விலையில் வியரபிள்ஸ் மற்றும் ஹியரிபிள்ஸ் (Wearables and Hearables) தயாரிப்புகளை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தும் என்றும், இந்நிறுவனத்தின் கீழ் வரும் தயாரிப்புகளை பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் கார்ல் பெய் கூறி இருந்தார்.

இதற்கிடையில் சிஎம்எஃப் நிறுவனத்தின் முதல் தயாரிப்புகளாக சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ, சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோ மற்றும் சிஎம்எஃப் 65W GaN சார்ஜர் ஆகியவைகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவலோடு சேர்த்து, இவைகள் என்ன விலைக்கு வரும்? சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை வழங்கும் என்கிற விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
சிஎம்எஃப் வாட்ச் ப்ரோவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இது 600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மற்றும் 100+ வாட்ச் ஃபேஸ்களை ஆதரிக்கும் 1.96-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 13 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் 330mAh பேட்டரியை பேக் செய்யும்.
இதுதவிர்த்து சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ ஆனது 100 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, ஐபி68-ரேட்டிங் மற்றும் மல்டி சிஸ்டம் ஜிபிஎஸ் போன்ற முக்கிய அம்சங்களுடன் ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்ட்ரெஸ் மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் மற்றும் ப்ரீத் மானிட்டர் போன்ற ஹெல்த் டிராக்கிங் சென்சார்களையும் கொண்டிருக்கும்.
சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இது 45டெசிபல் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 11 மணிநேர மியூசிக் பிளேபேக் மற்றும் அல்ட்ரா-பாஸ் தொழில்நுட்பம், ஸ்மார்ட் டைனமிக் பாஸ் அம்சங்களுடன் 10மிமீ டைனமிக் ஆடியோ டிரைவர்ஸ், ஒவ்வொரு இயர்பட்களிலும் 3 எச்டி மைக்ரோஃபோன்கள், தெளிவான கிளியர் கால் அல்காரிதம், ஆன்ட்டி-விண்ட் நாய்ஸ் ரிடெக்ஷன் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.
இதுதவிர்த்து சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோவின் கேஸில் 460எம்ஏஎச் பேட்டரி இருக்கும், அதனுள் உள்ள ஒவ்வொரு இயர்பட்டும் 55எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும். ஏஎன்சி அமாம் ஆஃப் செய்யப்பட்டு இருக்கும் போது, இந்த பட்ஸ் ப்ரோ 11 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும் மற்றும் இதன் மொத்த பேட்டரி லைஃப் ஆனது 37 மணிநேரமாக இருக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் இந்த இயர்பட்ஸ் ஐபி54-ரேடிங்கையும்
கொண்டிருக்கும்.
சிஎம்எஃப் பவர் 65W GaN சார்ஜரில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? பெயர் குறிப்பிடுவது போலவே இது 65W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும். இதில் மொத்தம் மூன்று போர்ட்கள் உள்ளன: ஒரு யூஎஸ்பி-ஏ போர்ட் மற்றும் இரண்டு யூஎஸ்பி-சி போர்ட்களை கொண்டுள்ளது.
மேலும் சிஎம்எஃப்பின் இந்த முதல் சார்ஜர் ஆனது ஷார்ட் சர்க்யூட் செக்யூரிட்டி, ஓவர்-டெம்ப்ரேச்சர் ப்ரொடெக்ஷன், ஓவர்-கரண்ட் ப்ரொடெக்ஷன், ஓவர்-வோல்டேஜ் ப்ரொடெக்ஷன், ஓவர்-பவர் ப்ரொடெக்ஷன் ஆன்ட்டி-இன்டர்பேஸ் ப்ரொடெக்ஷன் அண்டர் வோல்டேஜ் ப்ரொடெக்ஷன் மற்றும் ஷெல் ஃப்ளேம் ரிடார்டன்ட் ப்ரொடெக்ஷன் போன்ற பல பாதுகாப்பு அம்சங்களுடனும் வரும்.
இந்த 3 புதிய சிஎம்எஃப் தயாரிப்புகளும் என்ன விலைக்கு வரும்? சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.4499 க்கு அறிமுகம் செய்யப்படலாம்; சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோ ஆனது ரூ.3,499 க்கு வெளியாகலாம். கடைசியாக உள்ள 65W ஃபாஸ்ட் சார்ஜர் ஆனது "ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு" ரூ.2,499 க்கு விற்பனை செய்யப்படலாம். அதன் பின்னர் இது ரூ.2,999 க்கு வாங்க கிடைக்கும்.
எப்போது அறிமுகமாகும்? கிடைக்கப்பெற்ற லீக் தகவலின்படி, சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ மற்றும் சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோ ஆகிய இரண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதி அறிமுகமாகும். மறுகையில் உள்ள சிஎம்எஃப் 65W சார்ஜர் ஆனது சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும் என்கிற விவரங்கள் எதுவும் இல்லை.
Source / Photo Courtesy: @Alchimist_1 டெலிகிராம் சேனல்.


Click it and Unblock the Notifications








