பட்ஜெட் வாசிகளே வேற போன் வாங்கிடாதீங்க.. சிங்கிள் கேமராவை வச்சி செஞ்சிவிட்டான் யா.. CMF-ன் புதிய போன்!
நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப் (CMF) பிராண்ட் ஆனது இந்திய சந்தையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தை தளமாக கொண்ட இந்த எலக்ட்ரானிக்ஸ் பிராண்ட் ஆனது அதன் சமூக ஊடக தளங்களில் ஒரு டீஸரை வெளியிட்டது. அது வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பை காட்சிப்படுகிறது
தற்போது வரையிலாக சிஎம்எப் நிறுவனம், வரவிருப்பது என்ன ஸ்மார்ட்போன் என்பதை பற்றி வாய் திறக்கவில்லை என்றாலும், பெரும்பாலும் அது சிஎம்எப் போன் 2 (CMF Phone 2) மாடலாகத்தான் இருக்கும். அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இது பிளிப்கார்ட் (Flipkart) மூலம் விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி (Launch Date) அறிவிக்கப்படவில்லை. சிஎம்எப் வெளியிட்ட டீசரில் 'விரைவில் வருகிறது' (Coming Soon) என்கிற டேக்-ஐ மட்டுமே காண முடிகிறது. மேலும் அந்த டீசர் வழியாக சிஎம்எப் நிறுவனத்தின் சிக்னேச்சர் ஆரஞ்சு கலர் பேக் பேனலையும் (Orange Color Back Panel), சிங்கிள் ரியர் கேமரா செட்டப்பையும் (Single Rear Camera Setup) காண முடிகிறது
அதாவது இது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த டூயல் ரியர் கேமரா செட்டப்பில் (Dual Rear Camera Setup) இருந்து விலகுகிறது (ஆக இது சிஎம்எப் போன் 2 ஆக இல்லாமல், இன்னும் மலிவான ஒரு புதிய ஸ்மார்ட்போனாகவும் கூட இருக்கலாம்; ஏனென்றால் முன்னதாக வெளியான லீக்ஸ் தகவல்கள் சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) இடம்பெறும் என்கிறன) மேலும் கேமரா சென்சார் ஆனது ரியர் பேனலில் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது; கேமராவிற்கான ஃபிளாஷ் சென்சாருக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம், முன்னதாக லீக் ஆன ரெண்டார்கள் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை காட்டுகின்றன. கேமரா சென்சார்கள் ஆனது ஃபிளாஷுடன் சேர்த்து முக்கோண வடிவத்தில் (Triangel Shaped Camera Setup) வைக்கப்பட்டுள்ளன. இது உண்மையாக இருந்தால், சிஎம்எப் போன் 2 மாடலில் - இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும்.
ஏனென்றால் தற்போதுள்ள மாடலில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சோனி சென்சார் மற்றும் ஒரு போர்ட்ரெய்ட் சென்சார் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப் மட்டுமே உள்ளது. மேலும் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் மேட் ஃபினிஷ் கொண்ட சிஎம்எப் போன் 2 மாடலை போலவே இருக்கிறது.
லீக் ஆன ரெண்டர்களில் சிஎம்எப் போன் 2 பிளாக் ஆனது கலரில் உள்ளது. மேலும் பேக் பேனலில் உள்ள ஸ்க்ரூக்கள் ஆனது, சிஎம்எப் போன் 1 மாடலில் நாம் பார்த்ததை போலவே இன்டர்சேஞ்சபிள் கவர்கள் மற்றும் கஸ்டம் ஆக்சஸெரீஸ்களை ஆதரிக்கும் என்பதை குறிக்கின்றன.
சிஎம்எப் போன் 2-வில் உள்ள ஸ்க்ரூக்கள் ஆனது சிஎம்எப் போன் 1 மாடலில் உள்ள அதே நிலையில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆக இரண்டு போன்களுக்கான ஆக்சஸெரீஸ்களும் பொதுவானதாக இருக்க வாய்ப்புள்ளது. விலையை பொறுத்தவரை சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் (CMF Phone 2 Expected Price in India) ஆனது ரூ.19,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் (CMF Phone 1 Price in India) ஆனது ஜூலை 2024 இல் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும் அறிமுகமானது.


Click it and Unblock the Notifications