Home
News

Xiaomi ஓரம் போ.. Nothing கீழ் CMF வெளியிடும் ரூ.12,000 விலை 5G Mobile.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?

நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை-பிராண்டான சிஎம்எஃப் (CMF) பிராண்டின் கீழ் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் வெளிவரவுள்ளது. இந்த போனை நத்திங் நிறுவனம் அதன் முதல் சாதனம் போல சிஎம்எஃப் போன் (1) - CMF Phone (1) என்ற பெயருடன் வெளியிடவுள்ளது.

நத்திங் நிறுவனம் சமீபத்தில் அதன் சிஎம்எஃப் (CMF) என்ற துணை பிராண்டை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த பிராண்டு பட்ஜெட் பிரியர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிராண்டின் கீழ் நிறுவனம் இதுவரை TWS இயர்பட்ஸ் (Earbuds), ஹெட்போன்ஸ் (Headphones), ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) மற்றும் கான் சார்ஜ்ர் (GaN charger) போன்ற சாதனங்களை மட்டுமே அறிமுகம் செய்திருந்தது.

Xiaomi ஓரம் போ.. Nothing கீழ் CMF வெளியிடும் ரூ.12,000 விலை 5G Mobile

சிஎம்எஃப் போன் (1) அறிமுகத்திற்கு ரெடி - CMF Phone (1) ready for launch:

இப்போது, CMF பிராண்ட் அதன் முதல் ஸ்மார்ட்போன் சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்யவுள்ளது என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் விருப்பமாக வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், CMF அறிமுகம் செய்யவிருக்கும் புதிய சிஎம்எஃப் போன் (1) - CMF Phone (1) ஸ்மார்ட்போன் சாதனம் 5ஜி விருப்பத்துடன் ரூ. 12,000 விலையில் அறிமுகமாகவுள்ளது.

ஆம் மக்களே, சரியாக தான் படித்தீர்கள். CMF Phone (1) ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் மிகவும் மலிவு விலை விருப்பமாக ரூ. 12,000 விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தெரியாதவர்களுக்கு, நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்த சமீபத்திய பட்ஜெட் விருப்பமான நத்திங் போன் (2a) - Nothing Phone (2a) சாதனம் இந்தியாவில் ரூ. 23,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த சமீபத்திய Nothing Phone (2a) சாதனத்தை நத்திங் நிறுவனம் பட்ஜெட் பிரியர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, நிறுவனம் அதன் துணை பிராண்டின் கீழ் Nothing Phone (2a) போனை விட மிகவும் குறைந்த மலிவு விலையில் புதிய CMF Phone (1) சாதனத்தை 5ஜி விருப்பத்துடன் அறிமுகம் செய்து, அசத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

Xiaomi ஓரம் போ.. Nothing கீழ் CMF வெளியிடும் ரூ.12,000 விலை 5G Mobile

CMF Phone (1) ஸ்மார்ட்போன் சிறப்பம்சம் (CMF Phone 1 Specifications):

CMF Phone (1) ஸ்மார்ட்போன் சாதனம் 6.5" இன்ச் அளவு கொண்ட எச்டி (HD) டிஸ்பிளேவை (Display) பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மொபைல் சாதனம் மலிவு விலை விருப்பமாக வெளிவருவத்தினால், இதன் பாடி முழுமையாக பிளாஸ்டிக் பாடியுடன் (Plastic body) வரும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், முன்பக்கத்தில் டிஸ்பிளே பாதுகாப்பிற்கு கார்னிக் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass Protection) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த CMF Phone (1) மொபைல் ஆரஞ்சு (Orange), பிளாக் (Black) மற்றும் வெள்ளை (White) நிறத்தில் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போன் சாதனம் ஒற்றை பின்பக்க கேமரா (Single camera system) அம்சத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவொரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதனால், இதில் ஒரு கேமரா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் மெகாபிக்ஸல் விபரம் வெளியிடப்படவில்லை.

இந்த புதிய பட்ஜெட் விருப்பமான சிஎம்எஃப் போன் (1) ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 5ஜி சிப்செட் (Mediatek Dimensity 5G chipset) இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நத்திங் ஓஎஸ் (Nothing OS) உடன் இயங்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன் 3 வருட ஓஎஸ் அப்கிரேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச் அம்சத்தை பெரும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

புதிய சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி (Battery) உடன் 33W பாஸ்ட் சார்ஜிங்கை (Fast charging) ஆதரிக்கும் அம்சத்துடன் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த CMF Phone 1 ஸ்மார்ட்போன் சாதனத்தின் அறிமுகம் இந்த மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. சரியான தேதி மற்றும் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Sub Brand CMF Launching First 5G Mobile Named CMF Phone (1) In India Soon Check Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X