Nothing Speaker: இது புது மாதிரி உருட்டால இருக்கு! இப்படி ஒரு டிசைன்ல தினுசா ஒரு ஸ்பீக்கர்-ஆ!
சமீபத்தில் நடைபெற்ற MWC 2023 நிகழ்வில், நத்திங் (Nothing) நிறுவனம் அதன் அடுத்த புது ஸ்மார்ட்போன் மாடலாக Nothing Phone (2) சாதனத்தைப் பற்றி உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து, நிறுவனம் இப்போது Nothing Speaker என்ற சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிகிறது.
என்னது நத்திங் ஸ்பீக்கரா? இது என்னப்பா புது டிவைசா இருக்கு? இதுவாச்சும் நார்மலா இருக்குமா? இல்லை நத்திங்கிற்கே உரிய பாணியில் புதுமையுடன், யூகிக்க முடியாத வடிவமைப்புடன் வெளிவருமா? என்று உங்கள் மனதிற்குள் பல எண்ணங்கள் தோன்றி மறைவது எங்களுக்கே தெரிகிறது. நாத்திக நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய Nothing Speaker பற்றிய விபரங்களைப் பார்க்கலாம் வாங்க.

Nothing Speaker என்ற பெயரில் தினுசா ஒரு புது டிவைஸா?
ஸ்மார்ட்போன்கள் மற்றும் இயர்போன்களை அறிமுகம் செய்த Nothing நிறுவனம் இப்போது முதல் முறையாக அதன் போர்ட்ஃபோலியோவில் ஸ்பீக்கர் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு முன் வரை, இப்படி ஒரு சாதனம் இருப்பது பற்றி எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இப்போது நத்திங் நிறுவனம் ஒன்பிளஸ் (OnePlus) போல அதன் தயாரிப்பு வரிசையை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்துவதாகத் தெரிகிறது.
சமீபத்தில், வெளியான 91மொபைல்ஸ் இன் தகவல் படி, நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்பீக்கரைப் (Speaker) பற்றிய முதல் பார்வையை வலைத்தளம் வெளிப்படுத்தியுள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நத்திங் ஸ்பீக்கர் (Nothing Speaker) என்ற இந்த பெயர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பெயராக இல்லாமல் கூட போகலாம். ஆனால், இப்படி ஒரு சாதனத்தை Nothing அறிமுகம் செய்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

Nothing Speaker டிஸைன் வழக்கம் போல வித்தியசமானதா?
இப்போதைக்கு இந்த ஸ்பீக்கர் சாதனத்தை நாம் நத்திங் ஸ்பீக்கர் என்று அடையாளம் வைத்துக்கொள்ளலாம். Nothing நிறுவனத்தின் பிற தயாரிப்புகளைப் போன்ற தனித்துவமான வடிவமைப்புடன் இதுவும் வரலாம் - நத்திங் ஃபோன் (1) மற்றும் இயர் (1) TWS இயர்பட்ஸ் போன்ற பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வடிவமைப்பை இது பெரும். இதன் ரெண்டர் புகைப்படங்கள் கூட இப்போது வெளியாகியுள்ளது.
ரெண்டர் புகைப்படத்தை வைத்து பார்க்கையில், இந்த சாதனம் இருபுறமும் வால்யூம் கண்ட்ரோல், பவர் மற்றும் பல அம்சங்களுக்கான பட்டன்களுடன் பாக்ஸி வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது. இடது பக்கத்தில் ஒரு ரெட் பட்டனையும் பெறுகிறது. நத்திங் ஸ்பீக்கரின் முன்புறத்தில் ஒரு சிறிய வட்ட வளையத்தில் 'நத்திங் (Nothing)' லோகோவும் உள்ளது.

Nothing Speaker எப்போது அறிமுகம்? Nothing Phone (2) எப்போது அறிமுகம்?
அதேபோல் இரண்டு கருப்பு நிற ஸ்பீக்கர் கட்அவுட்கள், மற்றும் ட்வீக்கர்கள் இடம்பெறுவதாகப் புகைப்படம் காட்டுகிறது. கீழே உள்ள இரண்டு வெள்ளை கட்அவுட்கள் சப்-வூஃபர்களாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. நத்திங் ஸ்பீக்கரின் கீழே ரப்பர் மேட் கொடுக்கப்பட்டுள்ளது. இது தட்டையான பரப்புகளில் வைக்கப்படும் போது நல்ல கிரிப்பை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, நத்திங் ஸ்பீக்கரின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் இப்போது மறைக்கப்பட்டுள்ளன. நத்திங் ஸ்பீக்கர் வெளியீட்டுத் தேதியில் இன்னும் எந்த வார்த்தையும் இல்லை. முன்பே கூறியது போல, இந்த ஸ்பீக்கர் உண்மையில் 'நத்திங் ஸ்பீக்கர்' என்று அழைக்கப்படுமா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், தொடர்ந்து வரும் சாதனத்தின் விவரங்களை பற்றி உங்களுக்கு அப்டேட் செய்கிறோம்.
இந்த வார தொடக்கத்தில் நடந்த MWC 2023 ஷோவில், நத்திங் ஃபோன் (2) நிறுவனத்தால் உறுதிசெய்யப்பட்டது மற்றும் இது ஸ்னாப்டிராகன் 8-சீரிஸ் சிப்செட் உடன் வரும் என்று கார்ல் பை (Carl Pei) குறிப்பிட்டுக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டுக் காலவரிசை தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், மாறாக இந்த ஃபோன் Q3 2023 இல் அறிமுகமாகும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
photo courtesy:91mobiles.com


Click it and Unblock the Notifications








