Nothing கம்பெனிக்கு எவ்ளோ நக்கல் இருந்தா இப்படி செய்யும்? கேட்கும் போதே கடுப்பாகுது!

|

"ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்" என்பது போல.. சிலர் Nothing Phone (1) க்கு கொடுத்த பில்ட்-அப் இருக்கிறதே, அட.. அட!

"மிரண்டு போன ஆப்பிள் நிறுவனம்!", "அச்சத்தில் ஐபோன்கள்" போன்ற தலைப்புகளை வைத்து வராத நத்திங் போன் (1) க்கு படுபயங்கரமாக முட்டு கொடுத்தனர்.

வாய் பேசாம விட்டு இருந்தா கூட 4 பேர் வாங்கி இருப்பாங்க!

வாய் பேசாம விட்டு இருந்தா கூட 4 பேர் வாங்கி இருப்பாங்க!

வரப்போவது என்ன ஸ்மார்ட்போன்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைப்பிரிவின் கீழ் அறிமுகமாகும் என்று கொஞ்சம் தெரியாமல் - யோசிக்காமல் - மிட் ரேன்ஜ் விலையில் அறிமுகமாகும் ஒரு ஸ்மார்ட்போனை லேட்டஸ்ட் ஐபோன்களுடன் ஒப்பிட்டதால் என்ன ஆகிற்று தெரியுமா?

எதிர்பார்ப்பும்..  பல்பும்!

எதிர்பார்ப்பும்.. பல்பும்!

பலரும் நத்திங் போன் 1 பற்றி ஓவர் ஆக பில்ட்-அப் செய்யவும், அதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போனது. ஆனால் அறிமுகமான வேகத்தில் அதன் "குட்டு" உடைந்தது.

"அவ்ளோ சீன் இல்ல" என்கிற உண்மை வெளிப்பட்டது. கடைசியில் நத்திங் போன் (1) ஸ்மார்ட்போன் ஆனது 'பல்பு' வாங்கியதே மிச்சம்!

புகார்.. புகார்.. நேற்று வரையிலாக புகார்!

புகார்.. புகார்.. நேற்று வரையிலாக புகார்!

டெலிவரியில் தாமதம், டிஸ்பிளேவில் டெட் பிக்ஸல் மற்றும் க்ரீன் டின்ட், பேக் பேனலில் தூசி, மோசமான ஆடியோ குவாலிட்டி, நம்பகத்தன்மையற்ற ஃபேஸ் அன்லாக் அம்சம் என நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மீது நேற்று வரை புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையில், அடுத்ததாக அறிமுகமாகும் Nothing Phone குறித்த தகவல் வெளியாகி பலரையும் கடுப்பாக்கி உள்ளது.

லைட்டு இல்லாமல் வரும் 'லைட்' எடிஷன்!

லைட்டு இல்லாமல் வரும் 'லைட்' எடிஷன்!

நத்திங் போன் (1) மாடலில் உள்ள சிக்கல்கள் சரி செய்யப்படுமா என்கிற கேள்விக்கு எந்த பதிலும் கிடைக்காத நேரத்தில் நத்திங் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் ஆன Nothing Phone (1) Lite மாடலில் வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனும் மிட்-ரேன்ஜ் பட்ஜெட் விலையின் கீழ் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் லைட் எடிஷனில், எல்இடி-களுடன் "ஒளிரும்" பேக் பேனல் இடம்பெறாமல் போகலாம்.

டிஸ்பிளே, சிப்செட், கேமரா செட்டப் என எல்லாமே லீக்!

டிஸ்பிளே, சிப்செட், கேமரா செட்டப் என எல்லாமே லீக்!

வெளியான லீக் தகவல்களின் அடிப்படையில், நத்திங் போன் (1) லைட் ஆனது 6.55-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ OLED டிஸ்ப்ளேவுடன் வரும். இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டையும் பேக் செய்யும்.

மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட், டூயல் 50-மெகாபிக்சல் ரியர் கேமராக்கள் மற்றும் 16-மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன விலைக்கு வரும்?

என்ன விலைக்கு வரும்?

நத்திங் போன் (1) லைட் ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட், அதாவது 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம், தற்போதைய நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது இந்தியாவில் ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது.

எப்போது அறிமுகம் ஆகும்?

எப்போது அறிமுகம் ஆகும்?

அறிமுகத்தை பொறுத்தவரை, நத்திங் போன் (1) லைட் ஆனது, இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் வெளியாகலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இது தீபாவளி பண்டிகை நேரத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

எப்படி பார்த்தாலும் இது இந்த 2022 ஆம் ஆண்டிற்குள்ளேயே அறிமுகம் செய்யப்பட்டு விடலாம்.

இதுதவிர்த்து நத்திங் போன் (1) லைட் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை. வரும் நாட்களில் இந்த மாடல் குறித்து ஏதேனும் லீக்ஸ் தகவல்கள் வெளியானால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

நத்திங் ஃபோன் 1-க்கு Alternative (மாற்று) போன்களே இல்லையா?

நத்திங் ஃபோன் 1-க்கு Alternative (மாற்று) போன்களே இல்லையா?

யார் சொன்னது? நத்திங் ஃபோன் 1-க்கு நிறைய 'ஆல்டர்நேட்டிவ்' ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

OnePlus Nord 2T ஸ்மார்ட்போன், நத்திங் போன் 1-இன் மிகவும் முக்கியமான "மாற்று" ஸ்மார்ட்போன் ஆகும். இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், ஒப்பீட்டளவில் இதன் விலை கொஞ்சம் குறைவு. இதன் 8GB + 128GB ஆப்ஷன் ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது

அடுத்ததாக Samsung Galaxy A53 5G உள்ளது. இது ரூ.35,000 என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்களில் ஒன்றாகும் மற்றும் நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனை 'அசால்ட்' ஆக தூக்கி சாப்பிடும்!

அவ்ளோ தானா? இல்லை.. இன்னும் இருக்கு!

அவ்ளோ தானா? இல்லை.. இன்னும் இருக்கு!

நத்திங் போன் (1) க்கு பதிலாக நீங்கள் மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30), போக்கோ எஃப்4 5ஜி (Poco F4 5G) மற்றும் ஐக்யூ நியோ 6 (iQOO Neo 6) போன்ற ஸ்மார்ட்போன்களையும் கருத்தில் கொள்ளலாம்.

ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் (பேஸிக் 8GB + 128GB) ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதே போல போக்கோ F4 5G ஸ்மார்ட்போனின் 6GB + 128GB ஆப்ஷன் ரூ.27,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசியாக மோட்டோரோலா எட்ஜ் 30-இன் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Photo Courtesy: Nothing, OnePlus, iQOO

Best Mobiles in India

English summary
Nothing Second Smartphone Skip Back Panel LED Lights Price Under Rs 25000 Called Nothing Phone 1 Lite

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X