Home
News

ட்ரிபிள் ட்ரீட் வைக்கும் NOTHING.. 2025-ல் மொத்தம் 3 புது Mobile வருது.. Nothing Phone (3a) உடன் எந்த மாடல்?

நத்திங் (Nothing) நிறுவனம் விரைவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அதன் பிராண்ட்டின் கீழ் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் நத்திங் போன் 3a - Nothing Phone (3a), நத்திங் போன் 3a பிளஸ் - Nothing Phone (3a) Plus மற்றும் சிஎம்எஃப் போன் 2 - CMF Phone 2 ஆகிய மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்களின் முக்கிய விபரங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நத்திங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் CEO ஆன கார்ல் பெய் (Carl Pei) அண்மையில் நத்திங் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டின் திட்டங்களை பற்றி தெளிவாக விவரித்தார். இதில் 2025 ஆம் ஆண்டில் நத்திங் நிறுவனம் கண்டிப்பாக அதன் நத்திங் போன் 3 சீரிஸ் (Nothing Phone 3 Series) ஸ்மார்ட்போன்களை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial intelligence) என்ற ஏஇ (Ai) அம்சத்துடன் வெளியிடப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

ட்ரிபிள் ட்ரீட் வைக்கும் NOTHING.. 2025-ல் மொத்தம் 3 புது Mobile வருது

ட்ரிபிள் ட்ரீட் வைக்கும் NOTHING.. 2025-ல் மொத்தம் 3 புது Mobile வருது:

இதற்கு நடுவே, சமீபத்திய லீக் தகவல் ஒன்று ஆஸ்டிராய்டுஸ் (asteroids), ஆஸ்டிராய்டு_ பிளஸ் (asteroids_plus) மற்றும் களாக (galaga) என்ற கோட் பெயர் கொண்ட மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை குறிப்பிட்டு காண்பித்துள்ளது. இந்த மூன்று கோட் நேம் பெயர்களும் முறையே Nothing Phone (3a), Nothing Phone (3a) Plus, மற்றும் CMF Phone (2) போன்களை அடையாளம் காண்பிக்கிறது.

இந்த மூன்று புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களின் வருகை தற்போது உறுதியாகியுள்ளது. அதேபோல், இந்த மூன்று மாடல்களும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.0 (Nothing OS 3.0) இயங்குதளத்துடன் வருகிறது. இந்த Nothing மற்றும் CMF போன்களில் எதிர்பார்க்கப்படும் சிப்செட் (chipset) மற்றும் கேமரா (camera) அமைப்பு பற்றிய விபரங்கள் லீக் ஆகியுள்ளது. அவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Nothing Phone (3a), Nothing Phone (3a) Plus, CMF Phone (2) லீக் தகவல்:

விரைவில் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களையும் நத்திங் நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. நத்திங் போன் 3a சீரிஸ் மாடல்கள் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 SoC) உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த போன்களில் நத்திங் நிறுவன இந்த முறை 12GB ரேம் (RAM) வெர்ஷன் மாடலை அறிமுகம் செய்யுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Nothing Phone (3a), Nothing Phone (3a) Plus, CMF Phone (2) ஆகிய மாடல்கள் முறையே டெலிபோட்டோ கேமரா (Telephoto camera), பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (Periscope Telephoto camera) மற்றும் டூயல் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அனைத்தும் டூயல் நானோ சிம் (dual nano SIM) கார்டு மற்றும் eSIM சப்போர்ட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்த மூன்று மாடல்களில் CMF போன் பட்ஜெட் விருப்பமாக இருக்கும் காரணத்தினால், பெரியளவிலான பிரீமியம் அம்சங்களை நாம் இந்த போனில் எதிர்பார்க்க முடியாது. CMF Phone (2) சாதனம் மீடியாடெக் சிப்செட் உடன் வெளிவர வாய்ப்புள்ளது. நத்திங் போன் 3 - Nothing Phone (3) பற்றிய விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Planning To Launch Nothing Phone 3a Phone 3a Plus and CMF Phone 2 In 2025 Check Specs Leak Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X