Home
News

அப்போ OnePlus, Samsung சோலி முடிஞ்சது.. Nothing Phone 3a, Nothing Phone 3a Pro-வின் விலை இவ்ளோ தானா!

ஒவ்வொரு நாளும் 2025 மார்ச் 4 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய நத்திங் போன் 3ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை பற்றிய தகவல் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. அப்படியாக தற்போது நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் லீக் ஆகியுள்ளது

கிடைக்கப்பெற்ற தகவலின்படி நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999 முதல் ரூ.25,999 வரைக்குள் இருக்கும். அதே சமயம் அதன் ஹைஎண்ட் வேரியண்ட் ஆன நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999 முதல் ரூ.29,999 வரைக்குள் இருக்கும்.

Nothing Phone 3a, Nothing Phone 3a Pro-வின் விலை இவ்ளோ தானா!

மேற்கண்ட விலை நிர்ணயங்கள் உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் சீரீஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஏ-சீரிஸில் உள்ள மிட்-பிரீமியம் பிரிவில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களுமே கடும்போட்டியாக இருக்கும்.

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாக இதுவரை வெளியான எந்த ஒரு நத்திங் போனிலும் இல்லாத பெரிய டிஸ்பிளே இதில் இடம்பெறும்.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனில் உள்ள மீடியாடெக் டைமன்சிட்டி (MediaTek Dimensity) சிப்செட்டை விட நிச்சயம் சிறந்ததாக இருக்கும். மேலும் இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங் ஓஎஸ் 3.1 (Nothing OS 3.1) உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கேமராக்களை பொறுத்தவரை, இது கிடைமட்டமாக அமைக்கப்பட்ட நத்திங் நிறுவனத்தின் முதல் ட்ரிபிள் ரியர் கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கலாம். அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். இது உண்மையாகும் பட்சத்தில், நத்திங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் முதல் முறையாக டெலிஃபோட்டோ லென்ஸை சேர்க்கிறது என்று அர்த்தம்.

செல்பீ கேமராவை பொறுத்தவரை இதில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். இது டிஸ்பிளேவின் ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் வைக்கப்படும். அதாவது முந்தைய நத்திங் மாடல்களில் நாம் கண்டதை போலவே. பேட்டரியை பொறுத்தவரை, இதை 45W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAhபேட்டரி பேக் செய்யப்படலாம். மறுகையில் உள்ள நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பெரிய அளவிலான தகவல்கள் எதுவும் இல்லை.

கடந்த ஆண்டு அறிமுகமான நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், 50எம்பி + 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பீ, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி.

நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1080 x 2412 பிக்சல்கள், 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெப்ரெஷ் ரேட், 394பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5ப்ரொடெக்ஷன் உடனான 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது ஆக்டாகோர் 4 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ 5ஜி சிப்செட்டை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி + 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் சாம்சங் JN1 செல்பீ ஷூட்டர் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (Fast Charging Support) மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு (Reverse Wired Charging Support) உடனான 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Price May Start At Rs 23999 Nothing Phone 3a Pro Price May Start At Rs 27999 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X