Home
News

அட்றா சக்கை.. 12GB ரேம், 50MP டெலிபோட்டோ, 5000mAh பேட்டரி.. Nothing-ன் புதிய Pro மாடல்!

ஒரே மாதிரியான ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்துகொண்டு இருந்தால்.. வேலைக்கு ஆகாது (குறிப்பாக இந்தியாவில்) வெவ்வேறு மாடல்களை இறக்க வேண்டும் என்கிற புரிதல், நத்திங் (Nothing) நிறுவனத்திற்கு கடந்த ஆண்டே வந்திருந்தாலும் கூட, இந்த 2025 ஆம் ஆண்டில் தான் அதை முழுமையாக செயல்படுத்தி பார்க்கும் என்பது போல் தெரிகிறது.

நத்திங் நிறுவனம் இந்தாண்டு அதன் நத்திங் போன் 3 சீரீஸின் (Nothing Phone 3 Series) கீழ் 3 மாடல்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள் நத்திங் போன் 3 (Nothing Phone 3), நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a), நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) மாடல்களாக இருக்கலாம்.

அட்றா சக்கை.. Nothing-ன் புதிய Pro மாடல்!

நத்திங் போன் 3 மாடலும், நத்திங் போன் 3ஏ மாடலும் அறிமுகம் ஆவது கிட்டத்தட்ட நிச்சயமாகி விட்டன. ஏனென்றால் நத்திங் போன் 2 (Nothing Phone 2) மற்றும் நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடல்கள் ஏற்கனவே சந்தையில் உள்ளன.

ஆக நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடல் - இந்த சீரீஸின் ஹைலைட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மார்ச் 4 ஆம் தேதி நடக்க உள்ள நத்திங் வெளியீட்டு நிகழ்வில் (2025 March 4 Nothing Launch Event) நத்திங் போன் 3 அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு லேட்டஸ்ட் லீக் ஆனது நத்திங் போன் 3 க்கு முன்பாக 3 புதிய நத்திங் மாடல்கள் அறிமுகமாகும். அதன் பின்னரே நத்திங் போன் 3 வரும் என்று கூறியுள்ளது.

இதற்கிடையில் தான் நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆகிய 2 மாடல்களின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன. ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) வழியாக கிடைத்த தகவலின்படி நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமாகும்: 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி.

கேமராக்களை பொறுத்தவரை இது கிடைமட்டமாக பொருத்தப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Horizontal Triple camera setup) கொண்டிருக்கலாம். இதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகள் பேக் செய்யப்படலாம். முன்பக்கத்தில், இது 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது எப் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.8-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chip) மூலம் இயக்கப்படலாம்.

இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நத்திங் ஓஎஸ் 3.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் வரலாம். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை இது [பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

மறுகையில் உள்ள நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பெரிதாக எதுவும் லீக் ஆகவில்லை. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்கள் ஆனது ஸ்டாண்டர்ட் மாடலை விட ப்ரோ மாடலுக்கு ஏற்றதாக தெரிகிறது. கூடவே நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடல் ஆனது 12ஜிபி ரேம் + 256ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Nothing Phone 3a Pro Specifications Tipped Ahead 2025 Launch Event on March 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X