Home
News

Flipkart கிளப்பிய புது புயல்.. 10 பைசா குறைக்க மாட்டோம்.. Nothing Phone 3a மீது கேரண்டி எக்ஸ்சேன்ஜ் வேல்யூ!

நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக அறிமுகமான நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய இரண்டும் முறையே மார்ச் 11 மற்று மார்ச் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளன

இந்நிலையில், ஃபிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது இவ்விரு ஸ்மார்ட்போன்கள் மீதும் உத்தரவாதமான எக்ஸ்சேன்ஞ் வேல்யூ (Guaranteed Exchange Value - GEV) திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செயும் வாடிக்கையாளர்களுக்கு, நத்திங் போன் 3ஏ அல்லது நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடல் மீதான உத்தரவாதம் மிக்க தள்ளுபடி கிடைப்பது உறுதி செய்யப்படும்.

Nothing Phone 3a சீரீஸ் மீது Flipkart-ன் கேரண்டி எக்ஸ்சேன்ஜ் வேல்யூ!

பிளிப்கார்ட்டின் கூற்றுப்படி, அதன் ஜிஇவி (GEV) திட்டம் ஆனது வாடிக்கையாளர்கள் தங்கள் தற்போதைய ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்ச சாத்தியமான வர்த்தக மதிப்பை பெற உதவும். அதே நேரத்தில் டிவைஸின் நிலை போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விலக்குகள் இல்லாமல் முழு பரிமாற்ற மதிப்பையும் வழங்கும்.

நத்திங் போன் 3ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் ஆபர் மூலம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், பிளிப்கார்ட்டில் லாக்-இன் செய்து, அவர்கள் வாங்க விரும்பும் மாடலை தேர்ந்தெடுத்து, அவர்களின் பழைய ஸ்மார்ட்போனிற்கான எக்ஸ்சேன்ஜ் வேல்யூவை சரிபார்க்கலாம். டெலிவரி செய்யப்படும் நேரத்தில், உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனில் எந்த மதிப்பீடுகளோ அல்லது விலக்குகளோ மேற்கொள்ளப்படாமல், செக்அவுட் நேரத்தில் உறுதி செய்யப்பட்ட எக்ஸ்சேன்ஜ் வேல்யூ கொடுக்கப்படும் என்று பிளிப்கார்ட் கூறுகிறது

இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் மென்மையாக நடப்பதை உறுதி செய்வதற்காக, டெலிவரி பணியாளர்கள் ஸ்மார்ட்போனின் தயாரிப்பு மற்றும் மாடலை உறுதிப்படுத்த, ஒரு கண்டறியும் செயலியை (Diagnostics app) இயக்குவார்கள். இருப்பினு இதற்கு ஒரு தகுதி அளவுகோல் உள்ளது. பிளிப்கார்ட் ஜிஇவி திட்டத்தின் கீழ் 2020 க்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2018 க்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் மாடல்கள் மட்டுமே பொருந்தும் என்று பிளிப்கார்ட் கூறுகிறது.

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.22,999 (வங்கி சலுகைகள் உட்பட)
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.24,999 (வங்கி சலுகைகள் உட்பட)
இது மார்ச் 11 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.

நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.27,999 (வங்கி சலுகைகள் உட்பட)
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.29,999 (வங்கி சலுகைகள் உட்பட)
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.31,999 (வங்கி சலுகைகள் உட்பட)
இது மார்ச் 15 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1

- ஹாரிசாண்டல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- புதிய 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி

நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1

- சர்க்குலர் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Nothing Phone 3a Pro Flipkart Guaranteed Exchange Value Programme Explained
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X