கவனம் ஈர்க்கும் குட்டி சைஸ் Nothing போன்.. Nothing போன் ஸ்மால் டிசைன் எப்படி இருக்கு? இந்த போன் வெளிவருமா?
நத்திங் (Nothing) நிறுவனம் வரும் மார்ச் 4, 2025 ஆம் தேதி தனது புதிய நத்திங் போன் 3a சீரிஸ் - Nothing Phone (3a) Series ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. வெளிவரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் லீக் தகவல்களுக்கு நடுவே, புதிதாக நத்திங் போன் 3s - Nothing Phone 3(s) என்ற மாடல் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது நத்திங் போன் ஸ்மால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நத்திங் ஸ்மார்ட்போன் நிறுவனம் வரும் மார்ச் 4 ஆம் தேதி அதன் நத்திங் போன் 3a சீரிஸ் - Nothing Phone (3a) Series ஸ்மார்ட்போன் மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்கிறது. இந்த புதிய சீரிஸ் வரிசையில், நிறுவனம் நத்திங் போன் 3a - Nothing Phone (3a) மற்றும் நத்திங் போன் 3a ப்ரோ - Nothing Phone (3a) Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவனம் ஈர்க்கும் குட்டி சைஸ் Nothing போன்.. தம்மாத்தூண்டு Nothing போன் ஸ்மால் டிசைன் எப்படி இருக்கு?
இந்த Nothing Phone (3a) மற்றும் Nothing Phone (3a) Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்ச தகவல்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இதற்கு நடுவே, இப்போது மற்றொரு லீக் தகவல் நத்திங் போன் 3s - Nothing Phone 3(s) என்ற புதிய மாடலின் கான்செப்ட் ரெண்டார் படங்களை காண்பித்துள்ளது. இதில் உள்ள 's' என்ற எழுத்து ஸ்மால் (Small) என்ற அடையாளத்தை குறிக்கிறது என்று லீக் தகவலில் கூறப்பட்டுள்ளது.
Nothing Phone 3(s) பற்றி பேசுகையில், இதன் பெயர் குறிப்பிடுவது போல இது மிகவும் சிறிய சைஸ் சாதனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் 5.4" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவுடன் இயங்கும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது சிறிய சைஸ் ஆக இருந்தாலும் கூட, இதன் டிசைனர் இதிலும் நத்திங் நிறுவனத்தின் சிக்னேச்சர் அம்சமான Glyph லைட்டிங் அம்சத்தையும் இணைந்து, இதற்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கிறார்.
நத்திங் போன் 3(s) - Nothing Phone 3(s):
இந்த புதிய நத்திங் போன் 3(s) - Nothing Phone 3(s) ஸ்மார்ட்போன் சாதனத்தை முழுமையாக மெட்டல் பிரேம் உடன் உறுதியாக இருக்கும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. கைக்கு அடக்கமான அளவில் இந்த போனை வடிவமைத்திருந்தாலும், திறமையாக இந்த போனின் பின்பக்கத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அச்சத்தை வழங்கி டிசைனர் நம்மை வியப்படைய செய்துள்ளார். இது டிசைனிங்கில் சாத்தியமானது என்றாலும் கூட, நிஜத்தில் இது சாத்தியமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இருப்பினும், நத்திங் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனிப்போடும் விதமாக இதில் 3 கேமரா அம்சத்தை வழங்கியது மற்றும் சிறிய போனாக இருந்தாலும், அதிலும் கூட Glyph லைட்டிங் அம்சம் கிடைக்கும் படி வடிவமைத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்றுள்ளது. நத்திங் போன் 3(s) என்ற இந்த புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை ஒரு தனியார் டிசைனிங் கலைஞர் வடிவமைத்து உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குட்டி Nothing Phone Small சந்தைக்கு வருமா?
இந்த போன் நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிசைனர் மூலம் உருவாக்கப்பட்டது இல்லை என்பது கவனிக்கத்தக்கது. நத்திங் கம்யூனிட்டி பக்கத்தில் மாண்டலின் டி (Mandaline_T) என்ற பயனர் மூலம் இந்த Nothing Phone 3(s) டிசைன் பதிவிடப்பட்டுள்ளது. இதன் ரெண்டார் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த போனின் வடிவமைப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்.
Nothing இந்த டிசைனை ஒருவேளை அங்கீகரித்தால் எதிர்காலத்தில் ஒரு குட்டி சைஸ் போனை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், தற்போதைய உண்மை தகவல் படி, Nothing Phone (3a) மற்றும் Nothing Phone (3a) Pro ஆகிய இரண்டு போன்கள் மட்டுமே அறிமுகத்திற்கு வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








