இந்தியாவில் ரூ.80,000 க்கு அறிமுகமாகி உள்ள Nothing Phone 3.. மற்ற நாடுகளில் விலை கம்மியா? இன்னும் அதிகமா?
கடைசில சொன்ன மாதிரியே நடந்துருச்சுல என்று கேட்கும்படியாக நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ஆனது கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் ரூபாய் வரை செல்கிறது. இது ஆரம்பத்தில் வெளியான தகவல்களுடன் ஒற்றுப்போகிறது.
ஒருவேளை இந்தியாவில் மட்டுமே விலை அதிகம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. மற்ற நாடுகளிலும் கூட நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனானது பிரீமியம் ப்ரைஸ் டேக்கின் (Premium Price Tag) கீழ் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதோ இங்கிலாந்து, ஐரோப்பியா,எ அமெரிக்கா மற்றும் இந்தியா விலை விவரங்கள்:

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை £799 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.80640 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
அமெரிக்காவில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: அமெரிக்காவில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை $799 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் $899 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி முறையே சுமார் ரூ.68490 மற்றும் ரூ.77060 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை: நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விலைக்கும், இந்திய விலைக்கும் நல்ல வேறுபாடு இருந்தது; இந்திய விலை குறைவாக இருந்தது. ஆனால் நத்திங் போன் 3 விஷயத்தில் அப்படி இல்லை!
நத்திங் நிறுவனமானது இந்தியாவிலும் அதன் பிரீமியம் விலை டேக்கை பராமரிக்கும் நோக்கத்தின் கீழ் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை ரூ.79,999 க்கு அறிமுகம் செய்துள்ளது. இது பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும். ஹை-எண்ட்16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஆப்பிளின் ஐபோன் மாடல்களுடன் போட்டியிட வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் நத்திங் போன் 3 மாடலின் விலை ரூ.80,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது, மேற்குறிப்பிட்ட சந்தைகளில் வேண்டுமானால் வொர்க்-அவுட் ஆகலாம். ஆனால் இந்திய சந்தையில் வேலைக்கு ஆகாது.
இது நத்திங் நிறுவனத்திற்கே தெரியும். ஆகையால் தான் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் மீது பல வகையான அறிமுக சலுகைகளை (இலவச இயர்ப்டஸ் உட்பட) அறிவித்துள்ளது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் உடன் சேர்துது ரூ.62,999 என்கிற ஆபர் விலையிலும், 16ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் உடன் சேர்துது ரூ.72,999 என்கிற ஆபர் விலையிலும் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏற்கனவே டோடங்கிவிட்டு. அறிமுக சலுகையாக, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் நத்திங் போன் 3 உடன் ரூ.14,999 மதிப்புள்ள நத்திங் இயர் இயர்பட்ஸ் (Free Nothing Ear Earbuds) மாடலை இலவசமாக பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக ஜூலை 15 ஆம் தேதிக்குள் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் அல்லது ஸ்மார்ட்போனை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 வருட கூடுதல் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னணி வங்கிகளில் 24 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் கிடைக்கும்.
நத்திங் நிறுவனம் ஆனது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து அதன் முதல் ஹெட்போன் ஆன நத்திங் ஹெட்போன் 1 (Nothing Headphone 1) மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுவும் நத்திங் போன் 3 மாடலை போலவே அதிக விலைக்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நத்திங் ஹெட்போன் 1 மாடலின் விலை ரூ.21,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஜூலை 15 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








