Home
News

ஒன்னு இல்லை மொத்தம் 3 Mobile வருது.. BIS தளத்தில் காணப்பட்ட Nothing Phone 3 சீரிஸ்.. எந்த மாடல்? என்ன விலை?

நத்திங் (Nothing) நிறுவனம் விரைவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை இந்த 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வரிசையை நத்திங் நிறுவனம் நத்திங் போன் (3) - Nothing Phone (3) என்ற பெயருடன் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. இந்த நத்திங் போன் 3 சீரிஸ் இன் கீழ் 2 மிட்-ரேஞ் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் (mid-range budget smartphone) மற்றும் 1 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) சாதனத்தை நிறுவனம் வெளியிடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. நத்திங் போன் 3 சீரிஸ் பற்றிய கூடுதல் விபரங்கள் இதோ.

நத்திங் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் மூன்று முக்கியமான ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் நத்திங் போன் 3 - Nothing Phone (3), நத்திங் போன் 3a - Nothing Phone (3a) மற்றும் நத்திங் போன் 3a பிளஸ் - Nothing Phone (3a) Plus ஆகிய மூன்று சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று லீக் தகவல்கள் உறுதியளித்துள்ளது.

ஒன்னு இல்லை மொத்தம் 3 Mobile வருது.. BIS-ல் Nothing Phone 3 சீரிஸ்..

ஒன்னு இல்லை மொத்தம் 3 Mobile வருது.. Nothing Phone 3 சீரிஸ் வருகைக்கு ரெடியா?

இதில் நத்திங் போன் 3a மற்றும் நத்திங் போன் 3a பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்கள் நிறுவனத்தின் மிட்-ரேஞ் ஸ்மார்ட்போன் சாதனங்களாக அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. இதில் நத்திங் நிறுவனம் பிளாக்ஷிப் மாடலாக நத்திங் போன் 3 சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது இந்த 3 மாடலில் எதோ ஒரு மாடல் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) மற்றும் UL டெம்கோ சான்று தளத்தில் காணப்பட்டுள்ளது.

இந்த 3 நத்திங் போன் மாடல்களில் எந்த மாடல் இந்திய தரநிலைகள் பணியகம் வலைத்தளத்தில் காணப்பட்டது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், அது ஒரு வேலை Nothing Phone (3a) அல்லது Nothing Phone (3a) Plus ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று லீக் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. BIS தளத்தில் நத்திங் போன் காணப்பட்டதனால், இதன் அறிமுகம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்களில் நாம் 5000mAh பேட்டரியை எதிர்பார்க்கலாம். அதேபோல், நத்திங் பிராண்டின் வரவிருக்கும் புதிய Nothing Phone (3a) ஸ்மார்ட்போன்கள் டெலிபோட்டோ கேமராவுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், Nothing Phone 3a Plus ஸ்மார்ட்போனில் பெரிஸ்கோப் லென்ஸ் உடன் கேமரா அம்சம் எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங்கின் 2025 ஆம் ஆண்டு சீரிஸ் மாடல்கள் eSIM தொழில்நுட்பத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுtechnology.

Nothing Phone (2a) மற்றும் Nothing Phone (2a) Plus விலை என்னவாக இருக்கும்?

நத்திங் போன் 3a மற்றும் நத்திங் போன் 3a பிளஸ் ஸ்மார்ட்போன் சாதனங்கள் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) உடன் எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் நிறுவனம் அதன் முந்தைய மாடல்களை மீடியாடெக் (MediaTek) சிப்செட் உடன் வழங்கியிருந்தது கவனிக்கத்தக்கது. தற்போது நிறுவனம் ஸ்னாப்டிராகன் சிப்செட்டிற்கு மாற்றம் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்திருந்த Nothing Phone (2a) மற்றும் Nothing Phone (2a) Plus ஆகிய மாடல்கள் ரூ. 30,000 விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதே விலையை தழுவி, நத்திங் நிறுவனம் இந்த முறையும் அதன் நத்திங் போன் 3a மற்றும் நத்திங் போன் 3a பிளஸ் மாடல்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 Nothing Phone 3a Nothing Phone 3a Plus Spotted On BIS Site In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X