Home
News

ஆள விட்றா சாமி.. Nothing Phone 3 மற்றும் Nothing Headphone 1 விலை.. ஷாக் ஆன ரசிகர்கள்!

நத்திங் (Nothing) நிறுவனம் அதன் முதல் ட்ரூ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (True Flagship Smartphone) ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) மற்றும் நத்திங் ஹெட்போன் 1 (Nothing Headphone 1) என அழைக்கப்படும் அதன் முதல் ஓவர் இயர் ஹெட்போன்களை (Over Ear Headphones) அறிமுகம் செய்ய தயாராக உள்ளது.

இதற்கிடையில் இவ்விரு நத்திங் தயாரிப்புகளின் கலர் ஆப்ஷன்கள் (Color Options) மற்றும் விலை நிர்ணயம் (Price) குறித்த விவரங்கள் லீக் ஆகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஏனென்றால் இரண்டுமே பிரீமியம் சந்தைகளுக்கான தயாரிப்புகளாக தெரிகிறது; அதாவது மிகவும் அதிகமான விலைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது போல் தெரிகிறது.

Nothing Phone 3 மற்றும் Nothing Headphone 1 விலை.. ஷாக் ஆன ரசிகர்கள்!

நத்திங் போன் 3 மாடல் வருகிற ஜூலை 2025 இல் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வழியாக நத்திங் பிராண்டின் "மிட்ரேன்ஜ் வரம்பிலிருந்து பிளாக்ஷிப் பிரிவிற்கு மாற உள்ளது" என்பதை ஏற்கனவே பல லீக்ஸ் தகவல்கள் உறுதிப்படுத்திவிட்ட நிலையில் @MysteryLupin வழியாக கிடைத்துள்ள லேட்டஸ்ட் லீக் ஆனது "அதை" உறுதி செய்யும்படி உள்ளது.

குறிப்பிட்ட லீக்கரின் படி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் மற்றும் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போனின் 12GB RAM மற்றும் 256GB ஆப்ஷனின் விலை $799 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.68,300) ஆகவும் மற்றும் 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை $899 (சுமார் ரூ.76,850) ஆகவும் இருக்கும். இந்த விலைகள் சிஇஓ கார்ல் பெய் அறிவித்த விலையுடன் (~£800) ஒத்துப்போகின்றன

இதற்கிடையில், செப்டம்பர் 30, 2025 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நத்திங் நிறுவனத்தின் அதன் முதல் ஓவர்-இயர் ஹெட்போன்களான நத்திங் ஹெட்போன் 1 மாடலும் கூட பிரீமியம் ஆடியோ பிரிவில் களமிறங்குகிறது. இதன் விலை $299 ஆக (சுமார் ரூ.25,560) இருக்கலாம் என்றும், இது பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் கிடைக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

இது சோனியின் WH-1000XM6 போன்ற ஹை எண்ட் மாடல்களுடன் போட்டியிடுவதை நோக்கமாக கொண்டிருக்கலாம். ஆனால் நத்திங் பிராண்டின் முந்தைய டீஸரின்படி, இது மிகவும் அணுகக்கூடிய விலையில் இருக்கும் என்கிறது. அம்சங்கள் சற்றே குறைவாக இருந்தாலும் நத்திங் நிறுவனம் அதன் நத்திங் இயர் 2 போன்ற ஆடியோ தயாரிப்புகளுடன் புதுமையான அம்சங்களை கொண்டுவந்துள்ளது. இதில் ANC மற்றும் டிரான்ஸ்பரன்சி மோடுகளும் அடங்கும். ஆக நத்திங் ஹெட்போன் 1 மாடலிலும் சில தரமான சம்பவங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? நத்திங் போன் 3 தொடர்பான ஒரு சமீபத்திய டீஸர் வழியாக, நத்திங் நிறுவனம் அதன் ஐகானிக் எல்இடி டிசைனை (LED Design), அதாவது கிளிஃப் டிசைனை (Glyph Design) தவிர்க்கலாம் என்பது போல் தெரிகிறது. எக்ஸ் தளம் வழியாக பகிரப்பட்ட நத்திங் நிறுவனத்தின் ஒரு சிறிய வீடியோ டிரெய்லர் ஆனது பழைய நத்திங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ஒன்றை காட்டுகிறது.

இருப்பினும், அந்த எக்ஸ் பதிவானது "நாங்கள் கிளிஃப் இன்டர்பேஸ்-ஐ 'கில்' செய்கிறோம் (We killed the Glyph Interface) என்று கூறுகிறது. நினைவூட்டும் வண்ணம் கிளிஃப் இன்டர்பேஸ் (Glyph Interface) என்பது அடிப்படையில் நத்திங்கின் லைட்டிங் அமைப்பாக செயல்படும், நத்திங் ஸ்மார்ட்போன்களின் பின்புறத்தில் உள்ள எல்இடி-களின் தொகுப்பாகும் (LED Series). இந்த எல்இடி டிசைன் ஆனது நத்திங் போன்களை மற்ற ஸ்மார்ட்போன்களிடம் இருந்து தனித்து காட்டுவதற்கு பெயர்போனது.

ஆனால் நெக்ஸ்ட் ஜெனெரஷன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான (Next Generation Flagship Smartphone) மேம்பட்ட டிசைன் லேங்குவேஜிற்காக.. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது "பிரீமியம் மெட்டீரியல்களை" (Premium Materials) கொண்டிருக்கும் என்று நத்திங் நிறுவனம் ஏற்கனவே கூறி இருந்தது. அதன் விளைவாகவே நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் கிளிஃப் இன்டர்பேஸ் இடம்பெறலாம் போகலாம் என்பது போல் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 3 Nothing Headphone 1 Price Leaked Suggests Premium Pricing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X