மாயாஜாலம் செய்யப்போகும் Nothing Phone 3-ன் புதிய Glyph Matrix டிசைன்.. அப்படி என்ன ஸ்பெஷல்? ஜூலை 1 அறிமுகம்!
நத்திங் நிறுவனம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி அன்று நடத்தும் வெளியீட்டு நிகழ்வில் - நத்திங் நிறுவனத்தின் முதல் ஹெட்ஃபோன் ஆன நத்திங் ஹெட்ஃபோன் 1 உடன் சேர்த்து நத்திங் நிறுவனத்தின் "உண்மையான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலையும் உலகளவில் அறிமுகம் செய்ய உள்ளது.
நத்திங் ஹெட்ஃபோன் 1 குறித்து எந்த விவரங்களையும் பகிர்ந்துகொள்ளாத நத்திங் நிறுவனம் அதன் போன் 3 மாடலின் முக்கிய அம்சங்கள் குறித்து தொடர்ச்சியாக டீசர்களை வெளியிட்டு வருகிறது. அப்படியாக சமீபத்தில் நத்திங் போன் 3 மாடலில் பழைய கிளிஃப் இன்டர்பேஸ்-க்கு பதிலாக புதிய கிளிஃப் மேட்ரிக்ஸ் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில் டிசைன் மில்க் (Design Milk) உடனான ஒரு நேர்காணலில், நத்திங் நிறுவனத்தின் டிசைன் ஹெட் ஆன ஆடம் பேட்ஸ், நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் உள்ள கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது கிளிஃப் இன்டர்பேஸ்-ன் கஸ்டமைசேஷனை தக்கவைத்து கொள்ளவும், அதை மிகவும் திறமையாக மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.
பேக் பேனலின் மேல் வலது மூலையில் வட்டமாக தோன்றும் சிறிய கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது முந்தைய மாடல்களில் காணப்பட்ட கிளிஃப் இன்டர்பேஸ்-ன் பெரிய எல்இடி லைட் ஸ்ட்ரிப்களை மைக்ரோ-எல்இடிகளின் சிறிய கிளஸ்டர் கொண்டு மாற்றுகிறது.
இந்த புதிய வடிவமைப்பு பிக்சல்-லெவல் அனிமேஷன்கள், சிம்பாலிக் விஷூவல்ஸ் மற்றும் சவுண்ட் மற்றும் யூசர் ஆக்ஷன்களுடன் சின்க் செய்யபட்ட உடனான ரியாக்டிவ் லைட்டிங்கை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது அதன் மைக்ரோ-எல்இடி கிளஸ்டர் வடிவமைப்பு காரணமாக அதிக நிரலாக்கத்தை (Programmability) வழங்குகிறது என்று பேட்ஸ் கூறுகிறார்.
இந்த மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு ஆனது பயனர்கள் வெவ்வேறு ஆப்கள் மற்றும் அறிவிப்புகளுக்கான லைட்டிங் விளைவுகளை இன்னும் அதிகமாக கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் உள்ள டாட்-மேட்ரிக்ஸ் பேனல் ஆனது ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 ப்ரோவில் உள்ள அனிமே விஷன் அம்சத்தை ஒத்திருக்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் போன் 3 உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்கள்: நத்திங் போன் 3 மாடலில் குவால்காம் நிறுவனத்தின்ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நத்திங்கின் இணை நிறுவனரான அகிஸ் எவாஞ்சலிடிஸ், நத்திங் நிறுவனம் ஏன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டிற்கு பதிலாக ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை பயன்படுத்த முடிவு செய்தது என்பது குறித்த கேள்விக்கு எக்ஸ் பயனர் ஒருவருக்கு பதிலளித்தார்.
அப்போது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 எவ்வாறு சிறந்த ஜிபியு, என்பியு, ஐபிஎஸ், கனெக்டிவிட்டி மற்றும் டீபால்ட் சாஃப்ட்வேர் அப்டேட்டை கொண்டுள்ளது என்றும் ஆகையால் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 5 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 7 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.7-இன்ச், 1.5கே ரெசல்யூஷன், ஓஎல்இடி எல்பிடிஓ பேனல்
ரியர் கேமரா: 50ம்பி + 50எம்பி (3எக்ஸ் பெரிஸ்கோப்) + 50எம்பி (அல்ட்ரா-வைட்)
செல்பீ கேமரா: 50எம்பி
பேட்டரி: 5150எம்ஏஎச், 100W வயர்டு சார்ஜிங் (வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்)
கனெக்டிவிட்டி: என்எப்சி ஆதரவு, இசிம் ஆதரவு
ஓஎஸ்: ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.5
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது முன்னர் கூற்பட்டபடி ரூ.1 லட்சத்திற்கு அருகிலான விலைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை. மாறாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது போட்டித்தன்மை உடனான விலை நிர்ணயத்தையே பெறும். அதாவது சுமார் $799 (ரூ.68,000) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications