தம்பி மூளைக்காரர் தான்.. உடனே புது Nothing போன்.. 16GB ரேம், 5300mAh பேட்டரி , 50MP டெலிபோட்டோ.. என்ன விலை?
விற்பனைக்கு வந்த பின்னரே.. நத்திங் (Nothing) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களாக அறிமுகமான நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய 2 மாடல்களிலுமே "மெதுவான" யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜை (UFS 2.2 Storage) பயன்படுத்துவது தெரிய வந்ததது.
இந்த தகவல் இவ்விரு ஸ்மார்ட்போன்களையும் நம்பி வாங்கிய கஸ்டமர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது; கூடவே "இதை வாங்கலாமா? வேண்டாமா?" என்கிற விவாதங்களையும் தூண்டியுள்ளது. இதன்விளைவாக, நத்திங் போன் 3ஏ சீரீஸில் ஏன் யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிற விளக்கத்தை நத்திங் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் எதுவும் பயன்தருவதாய் தெரியவில்லை.

எனவே இந்நிறுவனம் எதிர்பார்ப்பதை விட விரைவாக அதன் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. அது நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் ஆகும். நத்திங் போன் 3 எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்திய சந்தையில் என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் லான்ச் டைம்லைன் (Nothing Phone 3 Launch Timeline Expected): இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 2025 ஜூலையில் (July 2025) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த வெளியீட்டு தேதியையும் உறுதிப்படுத்தவில்லை.
நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 1 (Nothing Phone 1) ஸ்மார்ட்போன் 2022 ஆம் ஆண்டிலும் மற்றும் நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் 2023 ஆம் ஆண்டிலும் அறிமுகமானது. முன்னதாக 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே நத்திங் போன் 3 மாடல் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ அறிமுகம் ஆகின.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Nothing Phone 3 Specifications Features Expected)?
- வேரியபிள் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (Variable 120Hz Refresh Rate)
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness)
- 6.77 இன்ச் 1.5கே அமோ எல்இடி எல்டிபிஓ டிஸ்பிளே (OLED LTPO Display)
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 Chipset)
- 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup)
- 50எம்பி ப்ரைமரி கேமரா
- 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் (Periscope Telephoto Camera)
- 4கே ரெக்கார்டிங் ஆதரவுடன் (4K Recording Support) 50எம்பி செல்பீ கேமரா
- 5300mAh பேட்டரி
- 50W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 20W வயர்லெஸ் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.5 (Nothing OS 3.5)
- 4 வருட சாப்ட்வேர் அப்டேட்கள் (4 years software updates)
- 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் (6 years security updates)
- மேம்படுத்தப்பட்ட சர்க்கிள் டு சர்ச் (Circle to Search)
- ஸ்மார்ட் டிராயர் (Smart Drawer), பெர்சனலைஸ்டு ஏஐ அசிஸ்டண்ட் (Personalized AI Assistant), ஏஐ அடிப்படையிலான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்கிரிப்ஷன் (Automatic Transcription) மற்றும் சம்மரி (Summary) ஆகிய ஏஐ அம்சங்கள்
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் (Nothing Phone 3 Price in India Expected)? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் ரூ.45,000 க்கு மேல் என்கிற விலை நிர்ணயத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது நத்திங் போன் 2 உடன் ஒப்பிடும்போது சில மேம்பட்ட மற்றும் சிறந்த அம்சங்களை கொண்டு வரலாம்.
நத்திங் போன் 3ஏ சீரீஸில் யுஎஃப்எஸ் 2.2 இருப்பதை, ஆரம்பத்திலேயே கண்டறிந்த வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக புகார்கள் அளித்தபோது நத்திங்கின் சிஇஓ-வான கார்ல் பெய் (Nothing CEO Carl Pei), பயனர்கள் "புகார் செய்வதை நிறுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார். ஆனால் ஆன்லைன் விமர்சகர்களை அமைதிப்படுத்த "அவரது வேண்டுகோள்" போதுமானதாக தெரியவில்லை. இதன்விளைவாக, நத்திங் போன் 3ஏ சீரீஸில் ஏன் யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிற விளக்கத்தை நத்திங் நிறுவனம் வெளியிட்டது.
இதற்காக - பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப மென்பொருள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருந்தால், யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 (UFS 3.1 Storage) ஸ்டோரேஜ்க்கு இடையிலான வேறுபாடு அதிகம் இல்லை என்பதை நிரூபிக்கும் முயற்சியில் ஒப்பீட்டு சோதனையுடன் ஒரு விரிவான விளக்கத்தை நத்திங் நிறுவனம் வழங்கி உள்ளது.
நத்திங் நிறுவனத்தின் விளக்கமானது "செலவுகளை கணிசமாக அதிகரிக்காமல் எந்த சாதனமும் எல்லாவற்றிலும் முழுமையான சிறந்ததை பெற முடியாது" என்பதை தெளிவாக எடுத்துரைக்கும்படி இருக்கிறது. இருப்பினும், இந்த பிராண்ட் அதன் யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜை தேர்வு செய்தது "செலவுகளை குறைப்பதற்காக அல்ல, மாறாக வளங்களை மிகவும் முக்கியமான இடத்தில் வைப்பதற்காக" என்றும் கூறியுள்ளது.
ஒட்டுமொத்த செயல்திறனுடன் தொடர்புடைய பல காரணிகளில் ஸ்டோரேஜ் வேகமும் ஒன்று என்பதை நத்திங் ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், ஒரு ஸ்மார்ட்போனின் மென்பொருளை பயன்படுத்தும் போது ஒட்டுமொத்த செயல்திறன் உணர்வானது - ஸ்டோரேஜ் (Storage), ரேம் (RAM), சிபியு (CPU) மற்றும் சாஃப்ட்வேர் ஆப்டிமைசேஷன் (Software Optimization) ஆகியவற்றின் கலவையாகும் என்றும் நத்திங் விளக்கம் அளித்துள்ளது.
மெசேஜ் அனுப்புதல், வெப் ப்ரவுஸிங் மற்றும் சோஷியல் மீடியா போன்ற பெரும்பாலான "அன்றாட" பணிகளை செய்யும் போது, பயனர்களால் யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் கொண்ட போனிற்கு இடையிலான வேறுபாட்டை கண்டுபிடிக்க முடியாது என்று நத்திங் நிறுவனம் கூறி உள்ளது. இது எங்கே கண்டுபிடிக்கப்படும் என்றால் - பைல்களை பரிமாற்றம் (File Transfer) செய்யும் போதுதான். ஆனால் "பெரும்பாலான மக்கள்" இதை ஒரு அன்றாட பணியாக செய்வதில்லை என்றும் நத்திங் விளக்கம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications








