சரியான ஆளுப்பா நீ.. 3 ஆண்டுகள் முன்பே ரெடியான Nothing Phone 3.. இவ்ளோ லேட்-ஆ அறிமுகம் ஆனது ஏன்?
நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜூலை 2023 ஆம் ஆண்டில் அறிமுகமானது. நத்திங் போன் 3 (Nothing Phone 3) கடந்த ஜூலை 1 ஆம் தேதி அறிமுகமானது. லேட்டஸ்ட் மாடலின் ரூ.80,000 விலை நிர்ணயம் குறித்த கேள்விகள் ஒருபக்கம் இருக்க.. ஏன் இந்த 2 வருட இடைவெளி என்கிற கேள்வியும் உள்ளது. இதற்கு நத்திங் நிறுவனமே விளக்கம் அளித்துள்ளது!
நத்திங் நிறுவன அதிகாரிகளின் கூற்றுப்படி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு குறித்த பணிகள் ஆனது 3 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டு விட்டது. அதாவது நத்திங் போன் 2 மாடலை போலவே. ஆனால் 2024 இல் அதை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக, நத்திங் நிறுவனம் அதை மறைத்து வைக்க தேர்வு செய்தது.

"முக்கிய நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வெளியிடும் ஒரு துறையில், நுகர்வோரை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது மரண தண்டனையாக இருக்கலாம்," என்று ஒரு நிறுவனத்தின் நிர்வாகி ஒப்புக்கொண்டார். ஆனால் நத்திங் நிறுவனம் நத்திங் போன் 3 விஷயத்தில் வேறுபட்ட முன்னுரிமையை கொண்டுள்ளது.
நத்திங் நிறுவனத்தை பொறுத்தவரை, மிகவும் மலிவு விலையில் வந்த தொலைபேசி நத்திங் போன் 2ஏ மாடலுக்கு கிடைத்த வெற்றி "விளையாட்டை" மாற்றியது. அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையில் சக்கைபோடு போட்டது . இந்த திடீர் உந்துதல் நத்திங் நிறுவனம் அதன் பட்ஜெட் சீரிஸை முதலில் விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த வழிவகுத்தது.
அதாவது அதன் பிளாக்ஷிப் மாடல்களுக்கு திரும்புவதற்கு முன்பு.. நத்திங் போன் 2ஏ பிளஸ், நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தில் அதிக கவனம் செலுத்தியது. இதுவே நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் "நீண்ட இடைநிறுத்தத்திற்கு" காரணம் என்று நத்திங் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஜூலை 1 அறிமுகமான நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது நத்திங் நிறுவனத்தின் "வழக்கமான" பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அசல் விலை VS ஆபர் விலை: அசல் வியை பொறுத்தவரை, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கும் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் பேஸிக் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் உடன் சேர்துது ரூ.62,999 என்கிற ஆபர் விலையிலும், மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் உடன் சேர்துது ரூ.72,999 என்கிற ஆபர் விலையிலும் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் முன்பதிவு மற்றும் விற்பனை சலுகைகள்: நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 1, 2025 அன்று முதல் தொடங்கு என்றும், ஒரு சிறப்பு அறிமுகச் சலுகையாக, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் நத்திங் போன் 3 உடன் ரூ.14,999 மதிப்புள்ள நத்திங் இயர்-ஐ இலவசமாக பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் அல்லது ஸ்மார்ட்போனை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 வருட கூடுதல் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முன்னணி வங்கிகளில் 24 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








