சில்லறைகளை சிதற விடும் ரசிகர்கள்.. LED லைட் செட்டப்-க்கு டாட்டா.. Nothing-ன் புதிய போன்.. என்ன விலை?
வருகிற 2025 ஜூலை 1 ஆம் தேதி அன்று, நத்திங் நிறுவனம் அதன் "முதல்" மற்றும் "முறையான" ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை (Nothing's First Proper Flagship Smartphone) அறிமுகம் செய்யவுள்ளது. அது நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடல் ஆகும். தற்போது வரையிலாக நத்திங் நிறுவனம் அதன் போன் 3 மாடலின் "மேக்ரோ காட்சிகளை" மட்டுமே, அதாவது மிகவும் க்ளோஸ்-அப் காட்சிகளை மட்டுமே பகிர்ந்துள்ளது
அவைகளை வைத்து நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் டிசைனை (Nothing Phone 3 Design) பற்றி எதையுமே தெரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியாக - டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் (Max Jambor) வழியாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் முழு போட்டோவும் லீக் ஆகி உள்ளது. அதை பார்த்த உடனேயே 2 விஷயங்களை டக்கென்று புரிந்துகொள்ள முடிகிறது.

ஒன்று - நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) மாடலில் நாம் பார்த்த அதே கேமரா ஐலேண்ட் டிசைனை (Camera Island Design) கொண்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட போன் 3ஏ ப்ரோ மாடலில் உள்ள ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது; ஆனால் எல்இடி பிளாஷ் (LED Flash) ஆனது வெளிப்படையாக தெரியாமல் சற்றே மறைக்கப்பட்டது போன்ற வடிவமைப்பை பெற்றுள்ளது.
இரண்டாவது - (முன்னரே கூறப்பட்டபடி) நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் க்ளிஃப் இன்டர்ஃபேஸை எல்இடி லைட் செட்டப் (Glyph Interface LED Setup) இடம்பெறவில்லை. இந்த அம்சத்தை முற்றிலுமாக கைவிடுவதற்கு பதிலாக, நத்திங் நிறுவனம் ஆனது டாட்-மேட்ரிக்ஸ் டிஸ்பிளே உடனான சில ஸ்கட்டர்ட்டு எல்இடிகளை (Scattered LEDs with Dot-matrix Display) கொண்டு மாற்றும் என்பதற்கான சில அறிகுறிகளை காண முடிகிறது.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Nothing Phone 3 Specifications Expected)? நத்திங் போன் 3 ஆனது 6.77-இன்ச் எல்டிபிஓ அமோலெ டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும், 3000 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸையும் வழங்கலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) அல்லது லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) மூலம் இயக்கப்படலாம். இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். இதில் 50எம்பி ப்ரைமரி சென்சார் இருக்கலாம். செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32எம்பி முன்பக்க கேமரா இடம்பெறலாம். கடைசியாக பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 50W வயர்டு மற்றும் 20W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கக்கூடிய 5000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் (Nothing Phone 3 Price Expected)? இதன் விலை "சுமார் £800" இருக்கும் என்று நத்திங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கார்ல் பெய் (Carl Pei) ஏற்கனவே கூறிவிட்டார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.93,000 ஆகும். ஆனால் இந்திய சந்தையில் இந்த விலை சாத்தியம் இல்லை என்பதால் நத்திங் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்.


Click it and Unblock the Notifications








