அடிச்சு தூக்கும் அம்சம்.. Nothing Phone (3) விலை என்ன? பாரபட்சம் பார்க்காமல் Nothing செய்த வேலை..
நத்திங் (Nothing) நிறுவனம் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் சாதனமான நத்திங் போன் 3 - Nothing Phone (3) மொபைலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) பற்றிய சுவாரசியமான தகவல்கள் இப்போது லீக் (Leak) ஆகியுள்ளது.
நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போன் சாதனமான நத்திங் போன் 1 - Nothing Phone (1) சாதனத்தை 2022 ஆம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி உலகிற்கு அறிமுகம் செய்தது. முதல் சாதனமே டிரான்ஸ்பரென்ட் டிஸைனுடன் மிக் பட்ஜெட் செக்மென்ட் விலையுடன் மக்களை வெகுவாக கவர்ந்தது. நத்திங் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் சாதனமாக இந்த நத்திங் போன் 1 உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றது.

Nothing Phone வரிசையில் புது ஸ்மார்ட்போன் ரெடி.. அறிமுகம் எப்போது?
இதன் வெற்றியை தொடர்ந்து, நத்திங் நிறுவனம் அதன் 2வது ஸ்மார்ட்போன் சாதனத்தையும் விரைந்து அறிமுகம் செய்தது. நத்திங் நிறுவனம் கணக்கிட்ட படியே, ஜூலை 23, 2023 ஆம் தேதி நிறுவனம் அதன் 2வது ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. இதை நத்திங் நிறுவனம் நத்திங் போன் 2 - Nothing Phone (2) என்ற பெயருடன் அறிமுகம் செய்தது. இதையும் நிறுவனம் அதன் வழக்கமான விலை புள்ளியில் வெளியிட்டது.
இதற்கு அடுத்தபடியாக, யாரும் எதிர்பார்க்காத விதமாக நத்திங் நிறுவனம் மிக் பட்ஜெட் செக்மென்ட்டில் இருந்து பட்ஜெட் செக்மென்ட் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில், குறைந்த விலை நத்திங் போன் சாதனத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் நத்திங் போன் 2a - Nothing Phone (2a) என்ற பெயரில் அறிமுகம் செய்தது. இதற்கு அடுத்தபடிய நிறுவனம் இப்போது மற்றொரு மொபைல் சாதனத்தை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
இப்போது நத்திங் பிராண்ட் அதன் 3வது ஸ்மார்ட்போன் சாதனமான நத்திங் போன் 3 - Nothing Phone (3) டிவைஸை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்றும், இந்த சாதனம் என்ன விலையில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலும் இப்போது லீக் ஆகியுள்ளது. இது பற்றிய சுவாரசியமான தகவலை இப்போது பார்க்கலாம்.

நத்திங் போன் 3 அம்சம் மற்றும் விலை விபரம் (Nothing Phone (3) Specs and Price Details):
நத்திங் போன் 3 - Nothing Phone (3) ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் வரும் ஜூலை மாதம் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நத்திங் போன் 3 - Nothing Phone (3) ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை (Snapdragon 8 Gen 3) கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிப்செட் சமீபத்தியே சக்தி வாய்ந்த சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிப்செட் வைத்து பார்க்கையில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய நத்திங் போன் 3 - Nothing Phone (3) சாதனத்தை நிறுவனம் ரூ. 40,000 முதல் ரூ. 45,000 விலை புள்ளியில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவலில், நிறுவனம் இப்போதைக்கு பிரீமியம் பிளாக்ஷிப் சந்தைக்குள் நுழையப்போவதில்லை என்று தெளிவாக கூறியுள்ளது.
அதேபோல், நத்திங் நிறுவனம் பாரபட்சம் பார்க்காமல் இப்போதைக்கு ரூ.20,000 பட்ஜெட் முதல் ரூ. 40,000 விலைக்குள் இருக்கும் மிட் பட்ஜெட் செக்மென்ட்களில் மட்டுமே அதன் ஸ்மார்ட்போன்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில், நத்திங் போன் 3 - Nothing Phone (3) டிவைஸ் இந்தியாவில் ரூ. 40,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








