கம்மி விலையில் அடுத்த Nothing போன் ரெடியா? Nothing Phone 2a அம்சம்.. புது டிவிஸ்ட் கொடுத்த Nothing பிராண்ட்..
குறைந்த காலத்திற்குள் உலகம் முழுக்க வெறும் 2 ஸ்மார்ட்போன் சாதனங்களால் ஃபேமஸ் ஆனா நிறுவனம் என்றால், நாம் நத்திங் (Nothing) நிறுவனத்தை மட்டும் தான் சுட்டிக்காட்ட முடியும். நத்திங் நிறுவனம் அதனுடைய அடுத்த புதிய ஸ்மார்ட்போனை ரிலீஸ் செய்ய தயாராகிவிட்டது போல் தெரிகிறது.
நத்திங் நிறுவனம் மொத்தமாகவே வெறும் இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. தெரியாதவர்களுக்கு, நத்திங் பிராண்ட் முதன் முதலில் அறிமுகம் செய்து, ஸ்மார்ட்போன் இண்டஸ்ட்ரீஸ்க்குள் கால் பதித்தது நத்திங் போன் (1) - Nothing Phone (1) என்ற ஆண்ட்ராய்டு சாதனத்தின் மூலம் தான். இதற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து நிறுவனம் நத்திங் போன் (2) - Nothing Phone (2) போனை அறிமுகம் செய்தது.

இதற்கு அடுத்தபடியாக நத்திங் நிறுவனம் என்ன ஸ்மார்ட்போன் (smartphone) மாடலை அறிமுகம் செய்யுமென்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், நத்திங் பிராண்டின் (nothing brand) ரசிகர்கள் மத்தியிலும் எகிறிக்கொண்டே இருந்தது. இதற்கு விடை கிடைத்த விதமாக, நத்திங் பிராண்ட் இப்போது ஒரு புதிய சாதனத்தில் மும்முரமாக வேலை செய்து வருவதாக லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
நத்திங் போன் 2a (Nothing Phone 2a):
இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன் சாதனத்தை லீக் தகவல் நத்திங் போன் 2a (Nothing Phone 2a) என்று குறிப்பிட்டுள்ளது. ஆம், நத்திங் நிறுவனம் இப்போது சைலெண்டாக வேலை செய்து வரும் புதிய மாடல் ஸ்மார்ட்போன் நத்திங் போன் 2a என்ற பெயருடன் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த போன் பற்றிய சில சுவாரசியமான தகவல்களும் இப்போது இணையத்தில் லீக் (Nothing Phone 2a leaks) ஆகியுள்ளது.
முன்பு டிவிட்டர் என்று அழைக்கப்பட்ட, தற்போதைய எக்ஸ் (X) தளத்தின் @saaaanjjjuuu என்ற பயனர் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரவிருக்கும் புதிய நத்திங் ஸ்மார்ட்போன் சாதனத்தை ஒரு வலைப்பக்கம் AIN142 என்ற மாடல் என்னுடன் நத்திங் போன் 2a என்ற பெயருடன் குறிப்பிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இது சமீபத்தில் வெளியான நத்திங் போன் 2 (Nothing Phone 2) சாதனத்தின் வாரிசாக இருக்காது என்று கூறப்படுகிறது.
நத்திங் போன் 2a சிறப்பம்சம் (Nothing Phone 2a Specifications):
காரணம், 2a என்ற எண் பட்ஜெட் பிரிவில் அல்லது மலிவு விலையில் வாங்க கிடைக்கும் டவுன் டன் செய்யப்பட்ட மிட்ரேஞ் மாடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது பிரீமியம் ஸ்மார்ட்போன் சாதனமாக இருக்காது என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய நத்திங் போன் 2a சாதனம் 6.1 இன்ச் அளவு கொண்ட அமோலேட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவின் மைய பகுதியில் பன்ச் ஹோல் கட்டவுட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், நத்திங் போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றான 'கிலிப் இன்டர்ஃபேஸ்' (Glyph Interface) LED லைட்டிங் அம்சத்துடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஏறக்குறைய நத்திங் போன் 2 சாதனத்தின் வடிவமைப்பை ஒத்தியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், நத்திங் நிறுவனம் அடுத்த தலைமுறை நத்திங் இயர் (3) என அழைக்கப்படும் அதன் மூன்றாம் தலைமுறை இயர்பட்கஸ் மாடலை வரும் ஜனவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதுவரை, புதிய ஸ்மார்ட்போன் பற்றி வேறெந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. விரைவில் புதிய நத்திங் போன் சாதனம் பற்றிய தகவலை அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications