Home
News

சிங்கம் களமிறங்குது.. மொத்த பட்ஜெட் போன்களும் காலி.. தீயாய் பரவும் Nothing Phone 2a ரிலீஸ் லீக்..

குறுகிய காலத்தில் உலக ஃபேமஸான நத்திங் (Nothing) நிறுவனம், விரைவில் புதிய பட்ஜெட் ஃப்ரென்ட்லி ஸ்மார்ட்போன் சாதனத்தை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நத்திங் போன் 2a (Nothing Phone 2a) என்ற பெயருடன் என்ன அம்சங்களை பெரும் என்ற விபரங்கள் இங்கே.

உலக புகழ்பெற்ற நத்திங் (Nothing) நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கென்றே ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. தனித்துவமான தனது டிசைன்களால் (Unique design smartphone) முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இணையாக இந்த நத்திங் பிராண்ட் (Nothing brand) வளர்ந்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி இயர்பட்ஸ் (Earbuds) மற்றும் ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) ஆகியவற்றிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளது.

Nothing Phone 2a: சிங்கம் களமிறங்குது.. மொத்த பட்ஜெட் போன்களும் காலி..

நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a):

நத்திங் தனது ஸ்மார்ட்போன்கள் (Nothing smartphones) வரிசையில், புதிய வரவு ஒன்றை பட்ஜெட் ரேஞ்சில் (Budget Segment Nothing Phone) இணைக்கப் போவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதன் அம்சங்கள் குறித்த விபரங்கள் இணையத்தில் லீக் ஆகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதற்கு முன்னதாக கசிந்த தகவலின்படி நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) சாதனம், நத்திங் போன் 3 மாடலுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்படும்.

ஆம், இதனை பின்தொடர்ந்து நத்திங் நிறுவனம் விரைவில் நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்யவுள்ளதாக டெக் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. சரி, இப்போது நத்திங் போன் 2a சிறப்பம்ச (Nothing Phone 2a Specifications) விபரங்களை பற்றி பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh rate) கொண்ட 6.7" இன்ச் AMOLED டிஸ்ப்ளேயுடன் (Display) வரும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், முன்பக்கம் டிஸ்ப்ளேயில் பன்ச் ஹோல் செய்து பொருத்தப்பட்ட 16MP செல்ஃபி கேமரா (Selfie camera) மற்றும் பின்பக்கம் 50MP ப்ரைமரி கேமரா (Primary camera), 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் (8MP ultra wide lens) என்று மொத்தம் மூன்று கேமராக்கள் (Triple camera) இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சில டிப்ஸ்டர்கள் இந்த தகவல்களை தங்களது எக்ஸ் (X) தளத்தின் பதிவு மூலம் உறுதி செய்துள்ளனர்.

யோகேஷ் ப்ரார் என்ற டிப்ஸ்டர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த போனின் முன்பக்க செல்ஃபி கேமரா பன்ச் ஹோல் செய்து பொருத்தப்பட்டுள்ளது என்றும், பின்பக்கம் இருக்கும் இரண்டு கேமராக்களும் வழக்கம் போல வெர்டிக்கலாக (vertical) இல்லாமல் இந்த மாடலில் ஹரிசான்டலாக (horizontal) பொருத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Nothing Phone 2a: சிங்கம் களமிறங்குது.. மொத்த பட்ஜெட் போன்களும் காலி..

டூயல் கேமராவுடன் நத்திங் போன் 2a (Nothing Phone 2a Spotted With Dual Camera):

இந்த போனில் நத்திங் நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன் மாடல்களான நத்திங் போன் 1 (Nothing Phone 1) மற்றும் நத்திங் போன் 2 (Nothing Phone 2) வில் இருப்பது போல இருக்கும் 3 LED க்ளிஃப் லைட் ஸ்ட்ரிப் செட்டப் (Glyph LED light strips) வித்தியாசமான தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல, புகழ்பெற்ற அன்ட்ராய்டு ஆப் டெவலப்பர் டிலன் ரூசல் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் டிசைன் குறித்த அனிமேஷன் வீடியோ மற்றும் சிப்செட் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதில், இந்த புதிய ஸ்மார்ட்போனின் கோட்நேம் (codename) பேக்மேன் (Pacman) அல்லது ஏரோ-வாக (Aero) இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலே கூறியது போல ஹரிசான்டல் கேமரா மற்றும் LED க்ளிஃப் செட்டப் இந்த புதிய ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம் என்று அந்த அனிமேஷன் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் முறையாக மீடியாடெக் 7200 SoC (MediaTek Dimensity 7200 SoC) ஆக்டாகோர் சிப்செட் மற்றும் 2.8GHz-ல் இரண்டு கார்டெக்ஸ் A715 கோர்கள், 2.0GHz-ல் ஆறு கார்டெக்ஸ் A510 கோர்கள், Mali-G610 MP4 GPU ஆகிய அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்ட்ராய்டு 14 (Android 14) கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4920 mAh பேட்டரியுடன் (Battery) வருமாம். இந்த ஸ்மார்ட்போன் ரூ. 35,000 விலைக்கு (Nothing Phone 2a Price) விற்பனைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Spotted With Horizontal Dual Camera Setup MediaTek Dimensity 7200 SoC Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X