மத்த போனை தூக்கி போடு.. Nothing Phone (2a)-வை வாங்கி போடு.. மிரட்டல் அம்சத்துடன் விலை உறுதியானது.. என்ன விலை?
எங்கு திரும்பினாலும் புதிய நத்திங் போன் (New Nothing Phone) பற்றி பேச்சாக தான். நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய நத்திங் போன் (2a) - Nothing Phone (2a) பற்றிய விலை விபரம் இப்போது அறிமுகத்திற்கு முன்பாக வெளியாகியுள்ளது.
Nothing Phone (2a): இந்த வாரம் நத்திங் (Nothing) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான நத்திங் போன் (2a) - Nothing Phone (2a) டிவைஸின் அறிமுகம் பற்றிய உறுதியான தகவலை வெளியிட்டது. இதனால், ஸ்மார்ட்போன் சந்தையில் புதினா எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நத்திங் நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, நத்திங் அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை மார்ச் 5ம் தேதி அறிமுகம் செய்கிறது.

சமீபத்தில் வெளியான டிலேப்ஸ் (Dealabs) தகவலின் படி, இந்த புதிய நத்திங் போன் (2a) - Nothing Phone (2a) ஸ்மார்ட்போன் சாதனம் 8GB + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB + 256GB ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இந்த புதிய நத்திங் போன் (2a) - Nothing Phone (2a) சாதனம் வழக்கமான பிளாக் மற்றும் வைட் நிறங்களில் வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளது.
நத்திங் போன் (2a) - Nothing Phone (2a) ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இந்த சாதனம் ஐரோப்பிய சந்தையில் முதலில் வெளிவரும் போல் தெரிகிறது. காரணம், ஐரோப்பா சந்தையில் இந்த சாதனம் என்ன விலையில் வெளிவரும் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை வைத்து பார்க்கையில், இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.31,075 என்ற விலையில் Nothing Phone 2a அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நத்திங் போன் (2a) விலை - Nothing Phone (2a) Price: இந்த புதிய நத்திங் போன் (2a) - Nothing Phone (2a) ஸ்மார்ட்போனின் ஹை-எண்டு மாடலாக 12GB ரேம் + 256GB மாடல் இந்திய மதிப்பின் படி, சுமார் ரூ. 35,529 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று ஐரோப்பா வலைத்தள பக்க தகவல் குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பற்றி பேசுகையில், நத்திங் பிராண்டிங்கிற்கு உரிய வழக்கமான டிரான்ஸ்பரென்ட் தோற்றத்துடன் இது வெளிவரும்.

இருப்பினும், நத்திங் போன் 1 மற்றும் நத்திங் போன் 2 சாதனங்களில் இருந்தது போன்ற கிலிஃப் அமைப்பு இந்த வரவிருக்கும் புதிய நத்திங் போன் (2a) - Nothing Phone (2a) சாதனத்தில் இருக்காது என்று கூறப்படுகிறது. நத்திங் போன் 2 சாதனத்தில் இருப்பது போன்ற கிலிஃப் அமைப்பிற்கு பதிலாக, புதிய வடிவிலான அமைப்பு புதிய போனில் இடம்பெறும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய நத்திங் போன் (2a) - Nothing Phone (2a) ஸ்மார்ட்போன் 6.7" இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்குமென்றும், 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7200 சிப்செட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 50MP கொண்ட சாம்சங் S5KGN9 உடன் கூடிய மெயின் கேமராவுடன் வெளிவரும்.
இந்த மெயின் கேமரா 50MP கொண்ட சாம்சங் S5KJN1 அல்ட்ரா வைடு சென்சார் உடன் இணைத்து டூயல் கேமரா அமைப்பாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் 32MP Sony IMX615 செல்பி ஸ்னாப்பரை கொண்டிருக்கும். இது விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








