Home
News

15 நிமிடத்தில் விற்று தீர்ந்த Nothing Phone 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன்.. இந்த போனை வாங்க லாஸ்ட் சான்ஸ்..

நத்திங் (Nothing) நிறுவனம் அதன் கம்யூனிட்டி மெம்பர்களுடன் இணைந்து நத்திங் ரசிகர்களின் ஒவ்வொருவரின் ஐடியாவை வைத்து தனித்துவமாக உருவாக்கப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் சாதனம் தான் நத்திங் போன் 2a பிளஸ் கம்யூயினிட்டி எடிஷன் (Nothing Phone (2a) Plus Community Edition) மொபைல். பல மாத வடிவமைப்பிற்கு பிறகு, நம்பவே முடியாத பல அம்சங்களை ஒரே போனில் புகுத்தி, நத்திங் ரசிகர்கள் மட்டுமின்றி உலக ஸ்மார்ட்போன் ரசிகர்களை வியப்படைய செய்த ஒரு சாதனம் என்றால், நாம் தாராளமாக இந்த Phone (2a) Plus Community Edition போனை கூறலாம்.

அந்த அளவிற்கு இந்த போனில் அவ்வளவு அம்சங்களை நத்திங் பிராண்ட் இதில் பேக் செய்துள்ளது. இதுவொரு ஸ்பெஷல் எடிஷன் போன் என்பதனால், Nothing Phone (2a) Plus Community Edition மொபைல் குறைந்தளவு எண்ணிக்கையிலான யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூறும் வகையில் வெறும் 1000 எண்ணிக்கையிலான Nothing ஸ்பெஷல் எடிஷன் போனை நிறுவனம் உருவாக்கியுள்ளது.

லாஸ்ட் சான்ஸ்.. 15 நிமிடத்தில் விற்று தீர்ந்த Nothing Phone 2a..

நத்திங் போன் 2a பிளஸ் கம்யூயினிட்டி எடிஷன் (Nothing Phone (2a) Plus Community Edition) ஸ்மார்ட்போன் இருட்டில் ஒளிரக்கூடிய 'க்ளோவ் இன் தி டார்க்' (glow in the dark) அம்சத்தை கொண்டுள்ளது. சொல்லி வைத்தது போல, நத்திங் நிறுவனம் வெறும் 1000 யூனிட்களை மட்டுமே உருவாக்கியிருந்ததினால், இந்த புதிய நத்திங் போன் 2a பிளஸ் கம்யூயினிட்டி எடிஷனுக்கு அதிக டிமாண்ட் உலகளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நத்திங் போன் 2a பிளஸ் கம்யூயினிட்டி எடிஷன் (Nothing Phone (2a) Plus Community Edition) சாதனத்தின் விற்பனை இன்று துவங்கப்பட்டது. விற்பனை துவங்கி 15 நிமிடங்களுக்குள் ஒட்டுமொத்த Nothing Phone (2a) Plus Community Edition சாதனங்கள் ரூ. 20,000 விலை புள்ளியில் விற்று தீர்ந்ததாக நத்திங் நிறுவனம் கூறியுள்ளது. இந்த சாதனத்தை வாங்குவதற்காக 48 நாடுகளில் இருந்து சுமார் 19,000 ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இறுதியில், 1000 பேருக்கு மட்டுமே இந்த போனை நேரில் கையில் ஏந்தும் வாய்ப்பும், சொந்தமாக்கிக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் வாங்க தவறியர்கள் மற்றும் நத்திங் போன் 2a பிளஸ் கம்யூயினிட்டி எடிஷன் (Nothing Phone (2a) Plus Community Edition) போனை ஆசையோடு சொந்தமாக்கிக்கொள்ள விரும்புவோருக்கு மற்றொரு வாய்ப்பின் கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

லிமிடெட் எண்ணிக்கையிலான நத்திங் போன் 2a பிளஸ் கம்யூயினிட்டி எடிஷன் (Nothing Phone (2a) Plus Community Edition) போனை வாங்க விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், நவம்பர் 16, 2024 ஆம் தேதி சனிக்கிழமை, காலை 11 மணி முதல் லண்டனின் சோஹோவை சேர்ந்த நத்திங் ஸ்டோர் வழியாக இந்த போனை நேரில் வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நாளில் நேரில் சென்று விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் நத்திங்கின் இந்த ஸ்பெஷல் எடிஷன் போனை வாங்கி மகிழலாம்.

Best Mobiles in India

English summary
Nothing Phone (2a) Plus Community Edition sold out in 15 minutes last chance to grab them from London store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X